வெந்தயத்தின் ஆரோக்கிய பலன்கள்

தினசரி வெந்தயம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன, எந்தெந்த வயதினர் எவ்வளவு வெந்தயம் சாப்பிடலாம் எனத் தெரிந்துகொள்வோம்.

வெந்தயம் அதிக நார் சத்து (50 சதவிதம்) கொண்டது. இது சர்க்கரை நோயாளிகளின் ரத்தம் மற்றும் சிறுநீரில் உள்ள சர்க்கரையையும், ரத்தத்திலுள்ள அதிக கொலஸ்ட்ராலையும் குறைக்கிறது. இத்தன்மையானது சமைத்த மற்றும் சமைக்காத வெந்தயம் இரண்டிலும் உள்ளது.

முதலில் 25 கிராம் வெந்தயத்தை தினமும் இரண்டு வேளை என்ற அளவில் இரண்டு முக்கிய உணவுகளாகிய காலை மற்றும் இரவு உணவுகளோடு எடுத்தும் கொள்ளலாம்.

வெந்தயத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊரவைத்தோ அல்லது பொடியாக இடித்து தண்ணீரில் அல்லது மோரில் கலந்தோ உணவிற்கு 15 நிமிடங்கள் முன்னதாக எடுத்தக் கொள்ளலாம்.

பொடியாக இடித்த வெந்தயத்தை தோசை, சப்பாத்தி, இட்லி, பொங்கல், உப்புமா, தயிர், பருப்பு மற்றும் காய்கறி கூட்டுகள் செய்யும்போது அவற்றுடன் இணைத்து பயன்படுத்தலாம். இப்படி செய்யும்போது விதைகளின் கசப்புத்தன்மை ஓரளவிற்கு குறைகிறது. இவைகளை தயார் செய்யும்போது உண்பவரின் ருசிப்புத்தன்மைக்கேற்ப உப்பையோ அல்லது புளியையோ சேர்த்து தயார் செய்யலாம்.

இரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொலஸ்டிரால் அளவு சாதாரண அளவுக்கு குறையும் வரை இவ்விதைகளை உட்கொள்ளலாம். வெந்தயம் சாப்பிடுவது தினமும் நடைபயிற்சி செய்பவர்களுக்கு மிகவும் உபயோகமானது. இதனால் உடல் எடை குறைக்கப்பட்டு, உடம்பிலுள்ள பல ஹார்மோனின் செயல்கள் அதிகரிக்கும்.

அதுமட்டுமல்லாமல் வெந்தயம் தோல் அழற்சியைக் கட்டுப்படுத்தக் கூடியது. வெந்தயத்தை பொடியாக்கி நீர் சேர்த்து கலவையொன்றை செய்து அதனை தோல் அழற்சியுள்ள இடத்தில் பூசினால் 24 மணி நேரத்திற்குள் குணமடைந்து விடும்.

வெந்தயம் சில பாதகமான பக்க விளைவுகளையும் கொண்டிருக்கிறது. அதனால் சரியான அளவை மட்டுமே உட்கொள்ள வேண்டும்.