நம்முள் பலர் இறப்பதற்கு காரணமாக இருக்கும் மாரடைப்பு நோயின் ஆரம்பக் கால அறிகுறிகளைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளலாம். மேலும், அத்தகைய அறிகுறிகளின் போது மேற்கொள்ள வேண்டிய மற்றும் சிறுகுறிப்புகளை பற்றி இங்கு பார்ப்போம்.
மாரடைப்பு என்றால் என்ன?
இதயத்திற்கு செல்லும் இரத்தம் தடைப்படுவதாலோ அல்லது முற்றிலுமாக நிறுத்தப்படுவதனலோ மாரடைப்பு ஏற்படலாம். மார்பு பகுதியில் அடிக்கடி வலி உண்டானால், இந்த நோய் ஏற்படுவதற்கான அதிக சாத்தியங்கள் உள்ளன.
மாரடைப்பின் அறிகுறிகள்:
மாரடைப்பு தீவிரம் அடையும் பட்சத்தில் உயிரிழப்பு கூட நிகழும். எனவே, அதை ஆரம்பக் காலத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெறுவது அவசியமான ஒன்று. கீழே குறிப்பிடப்பட்டுள்ளவை மாரடைப்பின் ஆரம்பக் கால அறிகுறிகளாகும்.
மாரடைப்பு தீவிரமடையும் பட்சத்தில் உயிரிழப்பு கூட நிகழும். எனவே, அதை ஆரம்பக் காலத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெறுவது அவசியமான ஒன்று. கீழே குறிப்பிடப்பட்டுள்ளவை மாரடைப்பின் ஆரம்பக் கால அறிகுறிகளாகும்.

- உங்களுக்கு அடிக்கடி மார்பு வலி வந்தாலோ அல்லது கடுமையான வலி அல்லது மார்பு இறுக்கப்படுவது போன்று வலி ஏற்பட்டாலோ உடனே வைத்தியரை நாடுங்கள்.
- வியர்வை மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை நாடுங்கள்.
- மார்பு வலி ஏற்பட்டு, அத்தோடு தோள்பட்டை, கழுத்து, கை, வயிறு என வலி பரவுவது மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறியே ஆகும்.
- சிகரட் மற்றும் குடிப்பழக்கம் உள்ளவர்கள் மன அழுத்தத்தினால் அதிகம் மாரடைப்பின் மூலம் பாதிக்கப்படுகின்றனர்.
- சர்க்கரை நோய் உள்ளவர்கள் மாரடைப்பால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புண்டு.
- சில நேரங்களில், மாரடைப்பானது எவ்வித அறிகுறியும் இல்லாமல், முதல் தாக்கத்திலேயே உயிரிழக்கவும் வாய்ப்புண்டு.
- ஆண்களை விட பெண்கள் அதிகம் இந்த நோயால் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. உடல் அசதி, தூக்கமின்மை, மூச்சுத் திணறல் போன்றவை இதற்கு காரணங்களாக கூறப்படுகிறது.
மார்படைப்பை தவிர்த்துக்கொள்ள உதவும் சிறு குறிப்புகள்:
- எல்லோரும் கூறுவது போல் முதல் அறிவுரை சிகரட் மற்றும் குடிப்பழக்கத்தை விடுவது.
- சர்க்கரை நோய் உள்ளவர்கள் தங்கள் இரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக்கொள்ள வேண்டும்.
- இரத்த கொதிப்பால் பாதிக்கப்பட்டிருந்தால், இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த வேண்டும், இதற்கு ஒரு வைத்தியரை அணுகி அறிவுரை பெறுவது சிறந்தது.
- உடல் எடையை சீராக வைப்பது மற்றும் உடற்பயிற்சி செய்வது நல்லது.
- உடலில் உள்ள கொழுப்பின் அளவை சீராக வைத்துக்கொள்ள வேண்டும். கொழுப்பு குறைந்த உணவு உட்கொள்ளல் சிறந்தது.
- மன அழுத்தத்தைக் குறைக்க உதவியை நாடுதல் சிறந்தது.
- உடலுக்கு ஆரோக்கியமான உணவுமுறைகளை கடைபிடிப்பது சிறந்தது.
அத்தோடு நீங்கள் உங்களின் உடலை அடிக்கடி பரிசோதனை செய்து கொள்வது சிறந்தது. குறைந்தது 6 மாதங்களுக்கு ஒருதடவை வைத்தியரை சந்தித்து அறிவுரை பெறுவது நல்லது.