அதிகமாக உறங்குவதால் உடற்பருமன் ஏற்பட வாய்ப்புண்டு!

போதிய உறக்கம் இல்லையென்றால் ஒருவருக்கு பல வகையில் உடல்நலக் கோளாறுகள் ஏற்படும். இதை நாம் கேள்விப்பட்டிருப்போம். அதனால் தான் இன்சோம்னியா (Insomnia) எனப்படும் தூக்கமின்மையை குணப்படுத்த பல வகையான சிகிச்சைகள், மருந்துகள் மற்றும் முன்னோர்களின் வைத்தியங்களை கையாளுகின்றனர்.

ஆனால் இதே எதிர்மறையாக நடந்தால் என்ன செய்வது? என்ன புரியவில்லையா? அதிக நேரம் தூங்குவதால் என்ன ஆகும் என்று உங்களுக்கு தெரியுமா?

தினமும் இரவு அதிக நேரம் தூங்குவதால், சர்க்கரை நோயின் அளவு அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

அதிக நேரம் தூங்குவதால் உடல் எடையானது அதிகரிக்க பல வாய்ப்புகள் உள்ளது. ஆறு வருட காலத்தில் தினமும் 7-8 மணி நேரம் தூங்குபவர்களை விட, 9-10 மணி நேரம் தூங்குபவர்களில் 21 சதவிகித மக்களின் எடை அதிகரிக்க வாய்ப்புண்டு என்று சமீபத்திய ஆய்வு ஒன்று கூறியுள்ளது.

அடிக்கடி தலைவலி வரும் நபர்கள், வார இறுதி அல்லது விடுமுறைகளில் அதிக நேரம் தூங்க முற்பட்டால், அதனாலும் தலை வலி ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

அதிகமாக தூங்குவதால் ஏற்படும் பக்கவிளைவு மூளைகளில் உள்ள நரம்புக்கடத்தியை பாதிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இதில் செரோடோனினும் அடங்கும். முன்பெல்லாம் முதுகு வலி என்று மருத்துவர்களிடம் சென்றால், படுக்கையில் நேராக படுக்க அறிவுறுத்துவார்கள்.

ஆனால் அதையும் தாண்டி அதிகமாக தூங்குவதாலும் முதுகு வலி ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் புரிந்து கொண்டுள்ளார்கள். அதனால் முதுகு வலி உள்ளவர்களை அதிக நேரம் தூங்க வேண்டாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

தூக்கமின்மை மன அழுத்தத்துடன் அதிக தொடர்பில் இருப்பதால், மன அழுத்தம் உள்ளவர்களில் தோராயமாக 15% நபர்கள் அதிகமாக தூங்குகிறார்கள். இதனால் மன அழுத்தம் இன்னும் அதிகரிக்கவே செய்யும். ஆகவே எந்த ஒரு நோய்க்கும் சரியான அளவு தூக்கம் தான் நிவாரணியாக விளங்கும்.

இதய நோயிற்கு சிகிச்சை அளிக்கும் செவிலியர்களின் ஆரோக்கிய ஆய்வு, கிட்டத்தட்ட 72,000 பெண்களை ஆய்வில் பயன்படுத்தியது. அந்த ஆய்வின்படி 38 சதவிகித பெண்கள் தினமும் 11 மணி நேரம் தூங்குகிறார்கள் என்றும், தினமும் 8 மணி நேரம் தூங்கும் பெண்களைவிட இவர்களுக்கு தான் இதய நோய்கள் தாக்குவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என்றும் கூறுகிறது.

தினமும் இரவு ஒன்பது மணி நேரம் அல்லது அதற்கு மேலாக தூங்குபவர்கள், 7-8 மணி நேரம் தூங்குபவர்களை விட, விரைவிலேயே இறக்கிறார்கள் என்று பல ஆய்வுகள் கூறுகிறது. அதிக நேரம் தூங்க விரும்பினால், அதிக நேரம் படுக்கையில் இருக்க விரும்புகிறோம் என்று அர்த்தமாகும்.

பல நேரங்களில் அதிக நேரம் தூங்குவது என்பது கஷ்டங்களிலிருந்து தப்பிக்கும் வழிமுறையாக இருக்கின்றது. ஒரு வகையில் நிஜத்தை சந்திக்க தைரியம் இல்லாதவர்கள் கையாளும் வழி தான் இது. ஆகவே அதிக நேரம் தூங்க வேண்டும் என்று ஆசைபட்டால், எமனை சந்திக்க வேண்டியிருக்கும் என்று நினைத்தால், நீண்ட நேர தூக்கத்தில் இருந்து விடுபடலாம்.