நீங்கள் தவறாக புரிந்துகொண்டிருக்கும் உடற் சுகாதாரம் பற்றிய 5 உண்மைகள்! பாகம்-1

இக்காலத்தில் ஆரோக்கியம் சம்பந்தமாக புதிய ஆய்வுகள் மற்றும் அறிக்கைகள் தினசரி வெளியிடப்படுவதால், எந்த தகவல் புதியது என்பதைக் கண்காணிப்பது கடினமாக உள்ளது. உங்கள் உடல்நல அறிவை அதிகரிப்பதற்கு உதவ, உங்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் உடல்நலம் தொடர்பான 5 உண்மைகளை நாங்கள் இங்கு ஒன்றாக இணைத்துள்ளோம்.

1. உடலை குளிர்விக்க சூடான பானமொன்றை குடிக்கவும்.

உடல் உஷ்ணம் அதிகமாக இருந்தால், குளிர்ச்சியான ஏதாவது குடிப்பது உங்கள் உடலை குளிர்விக்கும் என்று வழக்கமான முறையில் நீங்கள் யோசிக்கக்கூடும். இருப்பினும், ஒரு சூடான நாளில், சூடான பானம் குடிப்பது உங்கள் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும் என்று ஆராய்ச்சி காட்டுகிறது. காரணம், நீங்கள் ஒரு சூடான பானம் குடிக்கும்போது, உங்கள் உடல் வெப்பநிலையை குளிர்விக்க வியர்வையை உருவாக்குகிறது. நீங்கள் சூடான திரவத்தை குடிக்கும்போது முதலில் உடலின் வெப்பம் அதிகமாகலாம், ஆனால் உடலில் உருவாகும் வியர்வையின் அளவு திரவத்திலிருந்து சேர்க்கப்படும் வெப்பத்தை விட அதிகமாக குளிர்விக்கும் தன்மை கொண்டது. உங்கள் தோலில் இருந்து வியர்வை ஆவியாகும்போது, அது உங்கள் உடல் வெப்பநிலையை குளிர்விக்கிறது.

2. உங்கள் வியர்வை பெரும்பாலும் தண்ணீரினால் ஆனது.

எங்கள் வியர்வை பெரும்பாலும் (சுமார் 99 சதவீதம்!) தண்ணீரால் ஆனது. வியர்வையின் அளவு ஒவ்வொரு நபருக்கும் தனித்துவமானது. பாலினம் அல்லது வயது போன்ற காரணிகளால் ஒரு நபருக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ வியர்க்க முடியும்.

3. உங்கள் உடலில் வலிமையான தசை எது?

நமது தசை வலிமையை வெவ்வேறு வழிகளில் அளவிட முடியும். நீங்கள் அதிக சக்தியை தரக்கூடிய தசை என்னவென கேட்கிறீர்கள் என்றால், அது கட்டாயமாக கெண்டைக்கால் தசையாகத்தான் இருக்கும். இருப்பினும், அதிக அழுத்தத்தை செலுத்தக்கூடிய தசை எதுவென உங்களுக்கு தெரியுமா? அது தாடை தசை ஆகும். இது மிகவும் வலிமையான தசையாகும். மனித தாடை தசையினால் 90 கிலோ எடை அழுத்தச்சக்தி வலிமையுடன் வாயை மூட முடியும்!

4. உங்கள் உடலின் மொத்த எலும்புகளில் பாதிக்கும் மேற்பட்டவை உங்கள் கைகளிலும் கால்களிலும் உள்ளன.

நாம் ஏறக்குறைய 300 எலும்புகள் மற்றும் குருத்தெலும்புகளுடன் பிறந்திருக்கிறோம். அவைகளில் சில நாம் இளமையை அடையும் நேரத்தில் ஒன்றாக இணைகின்றன. வயது வந்த மனித உடலில் 206 எலும்புகள் உள்ளன. இந்த எலும்புகளில் 106 நம் கைகளிலும் கால்களிலும் அமைந்துள்ளன. கைகளில் உள்ள எலும்புகளே உலகில் பொதுவாக விபத்தில் உடையும் எலும்புகளில் ஒன்றாகும். எலும்பு சம்பந்தமான விபத்துகளில் கிட்டத்தட்ட பாதி கைகளில் உள்ள எலும்பு முறிவே ஆகும்.

5. நீங்கள் அதிக கொழுப்பை (கொலஸ்டெரோல்) உடலை பார்த்தே கண்டுபிடிக்கலாம்.

உங்கள் உடலில் அதிக கொழுப்பு இருப்பதற்கான அறிகுறிகளை உடலின் வெளித்தோற்றத்திலேயே காணலாம். Xanthelasmata அல்லது xanthelasma எனப்படுவது உங்கள் தோலின் கீழ் உருவாகும் கொழுப்பு நிறைந்த புடைப்புகளாகும். இது இதய நோய்க்கான குறிகாட்டியாக இருக்கலாம். இந்த புடைப்புக்கள் உடலில் எங்கு வேண்டுமானாலும் உருவாகலாம். நீரிழிவு அல்லது பிற இதய நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் தோலில் இவை அதிகமாகத் தோன்றும்.

இது போன்ற உங்கள் உடலாரோக்கிய அறிவை அதிகரிக்கக்கூடிய தகவல்களை நாம் அடுத்த பாகத்திலும் பார்க்கலாம்.

இரண்டாவது பாகத்தை படிக்க இங்கே அழுத்தவும்.