இந்த பாகத்திலும் எமது ஆரோக்கியத்திற்கு அவசியமான சில தகவல்களை பார்ப்போம்.
1. கொலஸ்டிரால் இல்லாத உணவு என விற்கப்படுவது உங்கள் உடல் கொழுப்பிற்கு மோசமானவை.

உணவு லேபிள்களில் இது கொழுப்பு இல்லாதது என்று குறிப்பிடப்பட்டிருக்கலாம். இருப்பினும், இந்த உணவுகள் உங்கள் உடல் கொழுப்பின் அளவிற்கு நல்லது என்று அர்த்தமல்ல. கொழுப்பை வளர்க்கும் டிரான்ஸ் கொழுப்புகள் இயற்கையாகவே கொலஸ்டிராலை கொண்டிருக்காது. ஆனால், அவை உங்கள் உடலிலுள்ள கொழுப்பிற்கு தீங்கு விளைவிக்கும். டிரான்ஸ் கொழுப்புகள் பல வறுத்த உணவுகள் மற்றும் வேகவைத்த பொருட்களில் காணப்படும். ஓரளவு ஹைட்ரஜனேற்றப்பட்ட தாவர எண்ணெய்கள் மற்றும் நிறைவுற்ற கொழுப்புகள் போன்ற டிரான்ஸ் கொழுப்பு உங்கள் கொழுப்பின் அளவிற்கு நல்லதல்ல. நீங்கள் இவற்றை முடிந்தவரை தவிர்க்க வேண்டும்.
2. உங்கள் உடல் சோர்வாக இருந்தால், உடற்பயிற்சி செய்யவும்.

நீங்கள் உடல் ரீதியாக சோர்வாக இருந்தால் உடற்பயிற்சி செய்வது மிகச் சிறந்த விஷயம். ஏனென்றால் சோர்வாக உட்காந்திருக்கும் போது புதுப்பிக்கப்படும் சக்தியை விட உடற்பயிற்சியில் அதிக சக்தி கிடைக்கின்றது. இதனால் உடலில் இரத்தம் மற்றும் ஆக்ஸிஜன் ஓட்டம் கூடி அதிக ஆற்றலைக் கொடுக்கும் மற்றும் உங்கள் மனநிலையை மேம்படுத்தும் என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. உடற்பயிற்சியின் போது உருவாகும் எண்டோர்பின் எனும் ஹார்மோன் அதிகரிப்பது உடலின் ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்களிக்கின்றது.
3. குளிர் வெப்பநிலை உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது.

நீங்கள் கனடாவில் வசிக்கிறீர்கள் என்றால் குளிர் காலநிலை பற்றி உங்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும். ஆனால், குளிர்ந்த வெப்பநிலை உங்கள் ஆரோக்கியத்திற்கு பயனளிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? குளிர்ச்சியான வெப்பநிலை ஒவ்வாமை மற்றும் அழற்சியைக் குறைக்க உதவுகிறது. மேலும், இது நீங்கள் இன்னும் தெளிவாக சிந்திக்கவும், அன்றாட பணிகளை சிறப்பாகச் செய்யவும் உதவும் என்று ஆராய்ச்சி காட்டுகிறது.
நோய் ஆபத்தை குறைக்கவும் கூட குளிர் உதவுகிறது. எப்படியென்றால் ஸிகா (Zika), வெஸ்ட் நைல் வைரஸ் மற்றும் மலேரியா போன்ற நோய்களைக் கொண்டு செல்லும் கொசுக்கள் குளிர்காலத்தில் வெளிவருவதில்லை. இதனால் குளிர் காலத்தில் இந்த நோய்கள் ஏற்படும் வாய்ப்புக்கள் மிக மிகக் குறைவு.
4. உங்கள் மனநிலையை மேம்படுத்த வாழைப்பழங்கள் உதவும்.

உங்கள் உடலுக்கு தினசரி தேவையான வைட்டமின் B6 ஒரு வாழைப்பழத்தில் சுமார் 30 சதவிகிதம் உள்ளது. வைட்டமின் B6 மூளையில் செரோடோனினை தயாரிக்க உதவுகிறது. இது ஒரு மனநிலை நிலைப்படுத்தியாக செயல்படுகிறது. செரோடோனின் உங்கள் இயக்கத் திறன்கள் மற்றும் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துகின்றது. இந்த ரசாயனமே நீங்கள் தினமும் தூங்குவதற்கும், உண்ணும் உணவும் ஜீரணமாவதற்கும் உதவுகிறது. வாழைப்பழம் சாப்பிடும் போது உங்கள் உடலில் உள்ள செரோடோனின் அளவு தூண்டப்படுவதன் மூலம் மனச்சோர்வு மற்றும் பதட்ட உணர்வு போக்கப்படுகின்றது.
5. தன்னம்பிக்கை உங்கள் ஆயுளை அதிகரிக்கும்.

புற்றுநோய், வேறு பல நோய்கள், தொற்று மற்றும் பக்கவாதம் ஆகியவற்றின் மூலம் ஏற்படும் இறப்பின் அளவு குறைந்து வருவதற்கும் மக்களின் தங்கள் உடல் பற்றிய நம்பிக்கையின் அளவு அதிகரித்து வருவதற்கும் ஒரு தொடர்பு இருப்பதாக ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. இதை குறிப்பாக இருதய நோயாளர்களில் வெகுவாக காணலாம். தங்கள் உடல் பற்றி மிக உயர்ந்த அளவிலான தன்னம்பிக்கையுடன் இருப்பவர்களுக்கு இருதய நோய் ஏற்படும் ஆபத்து கிட்டத்தட்ட 40% குறைவாக உள்ளது.
முதல் பாகத்தை படிக்க இங்கே அழுத்தவும்.