நமக்கு உறக்கத்திலிருந்து எழும்புவது என்பது கடினமான சவால்களில் ஒன்றாகும், ஆனால் இன்றைய காலத்து தொழில்நுட்பம் இதற்கு உதவ முடியும். உங்கள் தொலைபேசியைப் பற்றி நாங்கள் பேசவில்லை. பல வருடங்களாக நீங்கள் நம்பியிருக்கும் ஸ்மார்ட்போன் அலாரத்தை விட, உங்கள் வாழ்க்கையை எளிதாக்கக்கூடிய இந்த 4 மாற்று வழிமுறைகளை முயற்சித்து பார்க்கவும்.
1. ஸ்மார்ட் விளக்குகள் (Smart Bulbs)

ஸ்மார்ட் விளக்குகள், ஆன் மற்றும் ஆஃப் செய்ய உங்கள் ஃபோனைப் பயன்படுத்த அனுமதிக்கின்றன. மேலும், அவற்றை விருப்பமான நேர அட்டவணையின்படி பணியாற்ற வைக்கவும் முடியும். அத்தோடு சில ஸ்மார்ட் விளக்குகளின் மூலம் சூரிய உதயம் மற்றும் அஸ்தமன நேரங்களில் பணியாற்ற வைக்க முடியும். அத்தோடு படிப்படியாக பிரகாசிக்கும் வகையில், இந்த விளக்குகள் சூரியனைப்போல் அதே வழியில் உங்களை எழுப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. பிலிப்ஸ் ஹியூ நிறுவன தயாரிப்புகள் போன்ற சில பல்புகள், உங்கள் இருப்பிடத்திற்கான சூரிய உதய காலங்களைக் கண்டறிந்து அதற்கேற்றவாறு உங்களை உறக்கத்திலிருந்து எழுப்புவதற்கு உதவுகின்றன.
நீங்கள் தினமும் இயற்கையான தாளத்திற்கு ஒத்துப் போக வேண்டியதில்லை, இருந்தாலும், உங்கள் வேலை அல்லது அன்றாட வேலைகள் அவற்றை தடுக்கின்றன. நீங்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் விழித்தெழ விரும்பினால் உங்கள் கைத்தொலைபேசியில் அதற்கேற்ப தேர்வுகளை செய்து கொள்ளலாம். அத்தோடு உங்களுக்கு விருப்பமான மனநிலைக்கேற்றவாறு நிறங்களையும் தேர்வு செய்து கொள்ளலாம். இதை இலகுவாக செய்ய நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கூகிள் அசிஸ்டன்ட் (Google Assistant) இணைக்கப்பட்ட கைத்தொலைபேசியில், என்ன செய்ய வேண்டும் என்று சொல்வது மட்டுமே.
LIFX விளக்குகள் இந்த திறன் கொண்ட மற்றொரு பிராண்ட் ஆகும். சில ஸ்மார்ட் விளக்குகள் நீங்கள் உறக்கத்திலிருந்து எழ குறிப்பாக தயாரிக்கப்படுகின்றன. நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒரு நேரத்தில், இந்த விளக்குகள் படிப்படியாக உங்கள் படுக்கையறையில் வெளிச்சத்தை நிரப்பி உங்களை விழிப்புற செய்யும். அத்தோடு நீங்கள் குறிப்பிடுகின்ற நேரத்தில் நிம்மதியுடன் தூங்குவதற்கு உதவுவதற்காக நிதானமான ஒளி சுழற்சிகளையும் ஒலிகளையும் உருவாக்குவதன் மூலம், உங்களை உறக்கத்தில் ஆழ்த்தவும் உதவுகின்றது.
2. ஸ்மார்ட்வாட்ச் (Smart Watch) அல்லது உடற்பயிற்சி கண்காணிப்பான் (Fitness Tracker)

உங்களை தூக்கத்திலிருந்து எழுப்புவதற்கு ஒரு ஸ்மார்ட்வாட்ச் அல்லது உடற்பயிற்சி கண்காணிப்பான் போன்ற சாதனங்களை பயன்படுத்துவது இரண்டு மடங்கு நன்மையை தருவதாக கூறப்படுகிறது. இந்த சாதனங்கள் உங்கள் உறக்கத்தின் ஒவ்வொரு கட்டத்தையும் கண்காணித்து உங்கள் உறக்கத்தின் தரத்தையும் அதற்கான குறிப்புகளையும் வழங்கும். அத்தோடு இரண்டாவதாக, உறக்கத்திலிருந்து விழித்தெழு பீப் சத்தத்திற்கு பதிலாக மென்மையான அதிர்வுகளை ஏற்படுத்தி விழிக்கச் செய்யும்.
அத்தோடு இரவு நேரங்களில் நம் செயற்பாடுகளையும் உறக்கத்தின் ஆழத்தையும் கண்காணித்து அதன் தகவல்களை சேகரித்து, நமக்கு சிறந்த குறிப்புக்களை வழங்குகிறது. இதன் மூலமாக ஒர் உறங்கும் நேர வழக்கத்தை கடைபிடிக்க உதவியாக இருக்கும்.
இப்போது அதிர்வு அமைப்பைப் பற்றிப் பேசலாம். இது தூக்கத்திலிருந்து திடீரென அதிர்ந்து எழுவதற்கான வாய்ப்பை மேலும் குறைக்கிறது. அத்தோடு வெவ்வேறு நேரத்தில் எழும் குடும்பத்தினருக்கு இந்த மௌனமான எச்சரிக்ககை (Alarm) முறை மிகவும் உதவியாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்.
3. வானொலி அலாரம் கடிகாரம் (Radio Alarm Clocks) மற்றும் ஸ்மார்ட் ஒலிபெருக்கி (Smart Speakers)

நவீன தொழில்நுட்பம் உங்கள் விருப்பங்களில் ஒன்றில்லையெனின் அல்லது பழங்கால பாணியில் (Retro Style) ஒரு சுவை வேண்டும் என்றால், ஒரு ரேடியோ அலார கடிகாரத்தில் முதலீடு செய்வதில் எந்த குற்றமுமில்லை அல்லது ஒரு ஸ்மார்ட்போன் வாங்கியதில் இருந்து பயன்படுத்தப்படாத பழைய கடிகார வானொலியை பயன்படுத்தலாம். இதன் மூலம் சற்று பழைய நினைவுகளுக்கு திரும்பி செல்ல முடியும்.
ஒரு வானொலி கடிகாரமானது உங்கள் தொலைபேசி எச்சரிக்கையை (Alarm) விட நன்றாக செயல்படுவதற்கான சில காரணங்கள்: நீங்கள் அதை படுக்கையிலிருந்து தூரத்தில் வைத்தால் அதை படுக்கையிலிருந்து எழுந்தே செயலிழக்க செய்ய முடியும். அத்தோடு இவற்றில் பிடித்த வானொலி அலையை தெரிவு செய்து கொண்டால் காலையில் உதாரணமாக செய்திகளுடன் விழித்தெழு முடியும். அத்தோடு வானொலி கடிகாரத்தை பயன்படுத்துவதனால் உங்கள் தொலைபேசியை இன்னொரு அறையில் வைப்பதன் மூலம் ஒரு மிதமான உறக்கத்திற்கு உதவியாக அமையும்.
உங்களிடம் ஏற்கெனவே ஒரு வானொலி கடிகாரம் இல்லையெனில், அதைப் பெறுவதற்கு ஒரு பெரிய தொகையை நீங்கள் செலவிட தேவையில்லை.
இப்பொழுது ஸ்மார்ட் ஒலியெழுப்பிகளை (Smart Speaker) பற்றி பார்க்கலாம். இக்காலத்தில் இளைய சமுதாயத்தினர் காலையில் எழ இந்த சாதனங்களில் ஒன்றைப் பயன்படுத்துவதாக அறிக்கைகள் வெளியாகி உள்ளன. இவை குறைந்த விலையில் சந்தையில் கிடைக்கின்றன. இதில் மிகவும் பிரபலமான இரண்டு சாதனங்கள் அமேசான் எக்கோ (Amazon Echo) மற்றும் கூகிள் ஹோம் (Google Home) என்பனவாகும்.
இதுவும் உங்கள் தொலைபேசியை இன்னொரு அறையில்வைத்துவிட்டு நிம்மதியாக உறங்க உதவுகிறது. அத்தோடு இவை ஒரு குரல் கட்டளையை கொடுப்பதன் மூலம் பல செயல்களை எளிதாக செய்யக் கூடிய வசதிகளை கொண்டுள்ளன. உதாரணமாக, உங்கள் ஸ்மார்ட் விளக்குகளை இயக்கவும், காலை செய்தி கேட்கவும், பாட்காஸ்ட்டைக் (Podcast) கேட்க ஆரம்பிக்கவும், நீங்கள் எழுந்திருக்கும் போது சில இனிமையான பாடல்களில் உங்களை மூழ்கடிக்கவும் முடியும்.
அத்தோடு இவற்றை உங்கள் கைத்தொலைபேசியின் மூலம் எல்லா விவரங்களையும் உங்களின் விருப்பப்படி மாற்றிக்கொள்ளலாம். நீங்கள் விரும்பினால், வழக்கமான சூழ்நிலையில் வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் ட்ராஃபிக் அறிக்கைகள் ஆகியவற்றைச் பெற்றுக்கொள்ளலாம். இந்த விருப்பத்தேர்வு காலப்போக்கில் விரிவாக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை.
ஒவ்வொரு நாளையும் உற்சாகத்துடன் ஆரம்பிக்க வேண்டியது அவசியம், மேலும் உறக்கத்தில் இருந்து எழுவதற்கான சரியான சாதனத்தை கண்டுபிடிப்பது ஒரு முக்கியமான அங்கமாகும். நினைவில் வைத்து கொள்ளுங்கள், அதை நிறைவாக செய்ய உங்கள் ஸ்மார்ட்பொனை மட்டும் நம்பியிருக்க வேண்டியதில்லை.