பழமையான மருத்துவ மூலிகை மஞ்சள்!

Tumeric powder and herbal medicine products.

இன்று நாம் மருத்துவ குணங்கள் நிறைந்த மஞ்சள் பற்றி பார்க்கலாம். உடலில் ஏற்படும் பல தொற்று நோய்களை எதிர்த்து போராடும் வல்லமையை இந்த மஞ்சள் கொண்டுள்ளது. இதை நாம் பாலில் கலந்தோ அல்லது பொடியாகவோ சாப்பிடலாம்.

இவற்றில் எது சிறந்தது? பாலில் கலந்து அருந்துவதா? மஞ்சள் கேப்ஸ்யூலா? மசாலாவாக எடுத்துக் கொள்வதா? வாருங்கள் தெரிந்து கொள்வோம். மஞ்சளில் குர்க்குமின் என்ற வேதிப்பொருள் இருக்கிறது. இது மஞ்சளுக்கு நிறத்தைத் தருவதுடன், ஏராளமான மருத்துவப் பயன்களையும் அளிக்கிறது. எனவே மஞ்சள் கேப்ஸ்யூல் எடுத்துக் கொண்டால், அதில் இருக்கும் குர்க்குமின் அளவை அறிந்து கொள்ள வேண்டும்.

மூட்டுவலியை போக்க மஞ்சள் பொடி ஒரு புகழ்பெற்ற மருத்துவமாகும். பல ஆய்வுகளில் மஞ்சள் ஒரு சிறந்த வலி நிவாரணி என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு ஆய்வில் இது மூட்டுவலி உள்ளவர்களுக்கு அட்வில் (Advil) என்ற மருந்துக்கு இணையாக வேலை செய்வதாக கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் பங்கேற்றவர்கள் ஒவ்வொரு நாளும் 800 மில்லிகிராம் மஞ்சள் காப்ஸ்யூல் எடுத்துக் கொண்டனர்.

நோய் எதிர்ப்புச் சக்தியாக பயன்படுத்த எண்ணினால், ஒரு நாளைக்கு 500 முதல் 1,000 மி.கி மஞ்சள் கேப்ஸ்யூல் எடுத்துக் கொள்ளவும். ஒரு சுத்தமான தேக்கரண்டி நில மஞ்சளில் 200 மி.கி குர்க்குமின் உள்ளது. இந்த அளவு மஞ்சளின் பிறப்பிடம், விளைச்சல் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடுகிறது. சரியான அளவு மஞ்சள் எடுத்துக் கொண்டால், உடல் ஆரோக்கியத்திற்கு எந்தவித பிரச்சனையும் இல்லை.

மஞ்சளின் ஆக்ஸிஜனேற்ற விளைவு மிகவும் சக்திவாய்ந்ததாகும். இது உங்கள் கல்லீரலை நச்சுகள் சேதப்படுத்தாமல் தடுக்கும். நீரிழிவு நோய்க்கான வலுவான மருந்துகளை உட்கொள்ளும் நபர்களுக்கு இது ஒரு நல்ல செய்தியாக இருக்கலாம். அத்தோடு, நீண்டகால மருந்து பயன்பாட்டால் கல்லீரலில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புக்களை குணப்படுத்துகிறது.

குர்க்குமின் ஒரு புற்றுநோய்க்கான சிறந்த மருந்தாக கருதப்படுகின்றது. கணைய புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய் மற்றும் பல வகையான புற்றுநோய்களுக்கு எதிராக இது பாதுகாப்பு வழங்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அதுமட்டுமல்லாமல், மஞ்சள் ஆயுர்வேத மருத்துவத்தில் உணவுச் சமிபாடு சம்பந்தமான நோய்களை குணப்படுத்தும் ஒரு முக்கிய மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய பல நன்மைகள் தரும் மஞ்சளை நாம் எந்நாளும் போதியளவு எடுத்துக்கொண்டால் நீண்ட காலம் நோயின்றி வாழலாம்.