வீட்டிலேயே செய்யக்கூடிய 5 அழகு சிகிச்சைகள் பாகம் – 1

பெண்கள் தங்கள் தோல், நகங்கள், பற்கள் மற்றும் முடி தொடர்பான அழகு பிரச்சினைகளை சரிசெய்ய அழகு பொருட்களுக்காக நிறைய செலவிடுகின்றனர். பெண்களை கவரும் விதத்தில் சந்தை முழுவதும் அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. எனினும், இந்த தயாரிப்புகளில் பலவும் விலை உயர்ந்தவை, நீங்கள் விரும்பும் விளைவை கூட கொடுக்காது.

ஒரு குறைபாடற்ற அழகை பெற, பெரிதளவு செலவிட வேண்டிய அவசியமில்லை. நல்ல முடிவுகளை அளிக்கும் சில அதிசய இயற்கை சிகிச்சைகள் எப்போதும் உள்ளன. உங்கள் அழகைப் பேண இந்த இயற்கை சிகிச்சைகளோடு, நல்ல நிம்மதியான தூக்கம், மன அழுத்த நிலையை குறைவாக பேணுதல் மற்றும் சரியான ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ளல் மற்றும் உடற்பயிற்சி ஆகியன உதவுகின்றன. இதன் மூலம் உங்கள் வெளி அழகு மட்டுமல்லாது உள் அழகும் பேணப்படுகின்றது.

1. முகப்பருவை போக்க உதவும் பற்பசை

முகப்பரு, வடுக்கள் மற்றும் தோல் முறிவுகள் இளைஞர்களிடையே மிகவும் பொதுவானவை. உண்மையில், இளைஞர்களில் 70 முதல் 87 சதவிகிதத்தினர் இந்த பிரச்சினையைப் பற்றி புகார் கூறுகிறார்கள்.முகப்பரு முகம், மார்பு, முதுகு மற்றும் உச்சந்தலையிலும் தோன்றும். அதிக எண்ணெய் உற்பத்தி, இறந்த சரும செல்கள் திரளுதல், மூடிய துளைகள் மற்றும் பாக்டீரியா ஆகியவை முகப்பருவுக்கு நான்கு பொதுவான காரணிகளாகும். இதனை குணமாக்க பற்பசை மூலம் செய்யக்கூடிய சிகிச்சை இதோ:

2. உதடு வெடிப்புக்கு உதவும் சர்க்கரை

அழகு என்று வரும்போது, உங்கள் உதடுகளை நீங்கள் வெறுமனே புறக்கணிக்க முடியாது. மென்மையான, இளஞ்சிவப்பு உதடுகள் உங்கள் முகத்தின் அழகை அதிகரிக்கின்றன, பட்டுப்போய், வறண்ட உதடுகள் உங்கள் ஒட்டுமொத்த அழகை கெடுத்துவிடும்.

விலை குறைந்த தரமற்ற உதடு பராமரிப்புப் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர, நேரடி சூரிய ஒளியின் அதிகப்படியான தாக்கம், அதிகப்படியான புகைபிடித்தல், உயர் காஃபின் (Caffeine) உட்கொள்ளல் மற்றும் ஹார்மோன் சமநிலைகள் ஆகியவை வறண்ட மற்றும் கருத்த உதடுகளுக்கு வழிவகுக்கும்.

உங்கள் உதடுகளின் மென்மை மற்றும் இயற்கை இளஞ்சிவப்பு வண்ணத்தை மீண்டும் பெற்று உங்கள் அழகான புன்னகையை மீளப்பெற, இந்த சர்க்கரை சிகிச்சையை முயற்சி செய்யுங்கள்.

3. மஞ்சள் கரை படிந்த பற்களுக்கு அப்பச்சோடா

ஒரு பிரகாசமான அழகான புன்னகைக்கு முத்து போன்ற வெள்ளை நிறமான பற்களை பராமரிப்பது முக்கியமாகும். உங்கள் பற்கள் வெளிறிய வெள்ளை நிறத்தில் இருப்பதற்கு நல்ல வாய்வழி சுகாதாரம் அவசியமாகும்.

எனினும், பரம்பரை காரணிகள், தேயிலை அல்லது காபி அதிகப்படியான நுகர்வு, அதிகப்படியான புகைபிடித்தல் மற்றும் மாறுபட்ட நீர் உபயோகம் ஆகியவை பற்களால் கரைக்கப்பட்டு அவற்றை மஞ்சள் நிறத்தில் தோற்றமளிக்கச் செய்கின்றன.

சந்தையில் பல பற்களை வெளுக்கச் செய்யும் பொருட்கள் உள்ளன அல்லது உங்கள் பல் மருத்துவரிடம் வெளுத்தும் சிகிச்சையைத் தேர்வு செய்யலாம். ஆனால் இந்த விருப்பத்தேர்வுகள் உங்கள் பணச்செலவை அதிகமாக்கலாம்.

ஒரு அழகான புன்னகையை பெற சில எளிமையான மற்றும் மலிவான இயற்கை வீட்டு வைத்தியம் இருப்பதால் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

4. எண்ணெய் தன்மை கொண்ட கூந்தலுக்கு பேபி பவுடர்

எண்ணெய் தன்மையுள்ள கூந்தல் உங்கள் அழகை குறைக்கவல்லது. அத்தோடு, இது தலைவலி மற்றும் தலை பொடுகு மற்றும் அரிப்பை ஏற்படுத்த அதிக வாய்ப்புள்ளது.

சில எண்ணெய் தன்மையுள்ள கூந்தல் பிரச்சினைகளை உங்கள் வழமையான முடி பராமரிப்பு மற்றும் எளிமையான சிகிச்சைகள் மூலம் வீட்டிலேயே எளிதாக சரி செய்ய முடியும்.

5. வீக்கமான கண்களுக்கு குளிரான கரண்டி

எவரிலும் தூங்கி எழுந்தபின் கண்கள் வீக்கமாகவும் கண்களின் கீழ் கருவளையமும் காணப்படலாம். இது பல காரணிகளால் ஏற்படுகிறது.

மிகவும் பொதுவான காரணிகளாக அழுகை, தாமதமான இரவுத்தூக்கம், அதிக மனஅழுத்தம், மரபியல் காரணிகள், உடலில் உள்ள ஹார்மோன் மாற்றங்கள், தூக்கம் இல்லாமை என்பன முக்கிய பங்கு வகிக்கின்றன.

இந்த அழகுப் பிரச்சனைக்கு, சில எளிமையான மற்றும் இலகுவான வழிகள் உள்ளன.

இன்னும் சில அழகு சிகிச்சைகளை நாம் அடுத்த பாகத்தில் பாப்போம். இரண்டாவது பாகத்தை படிக்க இங்கே அழுத்தவும்.