காட்டுத்தீ எவ்வாறு உருவாகின்றது? பாகம்-2

கடந்த பாகத்தில் காட்டுத்தீ என்றால் என்னவென்றும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் பற்றி பார்த்தோம். இந்த பாகத்தில் காட்டுத்தீ ஏற்படுவதை எப்படி தடுப்பது மற்றும் எப்படி கட்டுப்படுத்துவது என்பதைப் பார்ப்போம்.

காட்டுத்தீக்கான தீர்வுகள்

1. நீங்கள் குப்பைகளையோ அல்லது வேறு பொருட்களையோ தீமூட்ட எத்தனிக்கும் ஒவ்வொரு முறையும் எரிக்கப்படுவதற்கு அனுமதிக்கப்பட்ட பொருட்கள் என்னவென்பதையும், மேலும் அதற்கான அனைத்து விதிமுறைகளையும் சட்டங்களையும் பின்பற்றுகிறீர்கள் என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இந்த விதிகள் என்னவென்று உங்களுக்கு தெரியவில்லை என்றால், இணையத்தில் தேடித் தெரிந்து கொள்ளலாம். அங்கு விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின் பட்டியல் ஒன்றையும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

2. எந்நேரமும் வானிலை முன்னறிவிப்பை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். எனவே, அதிக காற்று அல்லது பிற சீரற்ற வானிலைகளின் போது எந்தவொரு பொருளையும் எரிக்க வேண்டாம். சில பகுதிகளில் மற்ற பகுதிகளை விட காட்டுத்தீக்கான ஆபத்து அதிகம் உள்ளது. எனவே இந்த பகுதிகளின் சுற்றுப்புறங்களைப் பற்றி தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

வனவிலங்கு பாதுகாப்புத் துறையின் தீ மதிப்பீட்டு முறைமையில் எந்தெந்த பகுதிகளில் ஆபத்து அதிகம் என்பதைப் பற்றிய புதுப்பிக்கப்பட்ட வரைபடத்தை உங்களுக்கு பெற்றுக் கொள்ளலாம். காட்டுத்தீ ஏற்படுவதற்கு வானிலை மிகப்பெரிய காரணங்களில் ஒன்றாகும். உங்கள் பயணத்தைத் திட்டமிடுவதற்கு முன்பு எப்போதும் வானிலை பற்றி நினைவில் கொள்ளுங்கள்.

3. எளிதில் கட்டுப்படுத்தக்கூடிய இடங்களில் சிறிய அளவில் தீயை உருவாக்கிக் கொள்ளுங்கள். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில், தீ குழிகள் அல்லது பிற தீக்களை உருவாக்கும் போது தீ மற்ற பகுதிகளுக்கு பரவாது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதனால் ஒரு ஆபத்தான சூழ்நிலை ஏற்பட்டால் அதை அணைப்பது எளிதாக இருக்கும்.

4. இயற்கையில் எரியக்கூடிய அல்லது அசாதாரணமான எந்தவொரு பொருளையும் எரிக்க வேண்டாம். உங்கள் குப்பைகளையோ அல்லது எரிக்கக் கூடாத வேறு எந்த பொருட்களையோ உங்கள் கேம்ப்ஃபயர் மீது வீச வேண்டாம்.

கேம்ப்ஃபயர் ஒன்றை உருவாக்கும் போது இலைகள், காடுகள் அல்லது கழிவுகள் போன்ற கரிம பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். நீங்கள் அசாதாரணமான பொருட்களை நெருப்பில் போட்டால், அது தீ வேகமாகப் பரவ ஏதுவாக அமையும். இது நீங்கள் இருக்கும் பகுதிக்கு அதிக சிக்கல்களை ஏற்படுத்தும்.

5. நீங்கள் சிகரெட் புகைப்பவராக இருந்தால் சிகரெட் புகைக்கத் தடை செய்யப்பட்டுள்ள இடத்தில் புகைக்காதீர்கள். புகைபிடித்தால், உங்கள் சிகரெட்டை அப்புறப்படுத்துவதற்கு முன்பு அதை முழுவதுமாக அணைப்பதை உறுதி செய்ய வேண்டும். எந்த சூழ்நிலையிலும் எரியும் சிகரெட்டை தரையில் வீசக்கூடாது. பெரும்பாலான முகாம் மற்றும் சுற்றுலாப் பகுதிகள் புகைபிடிப்பதை அனுமதிக்காது. எனவே, நீங்கள் புகைபிடிக்கப் போகிறீர்கள் என்றால் முன்பே விதிகளை அறிந்து கொள்ள வேண்டும்.

6. முகாமிட்டு வெளியில் இருப்பதற்கான விதிகள் மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உங்கள் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுங்கள். தீவிபத்துகளிலிருந்து விலகி இருக்கவும், ஒரு பெரியவரை எப்போதும் தீயை மூட்ட அனுமதிக்கவும் அவர்களுக்குத் தெரியும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தீக்கு அருகில் விளையாடும் கவனிக்கப்படாத குழந்தைகளால் பல காட்டுத்தீ ஏற்படுகிறது.

காட்டுத்தீ ஒரு துரதிர்ஷ்டவசமான நிகழ்வு, ஆனால் அவை தடுக்கப்படலாம். நீங்கள் முகாமிட்டுள்ள பகுதியின் விதிகளைக் கற்றுக் கொள்ளுங்கள், அவற்றை நீங்கள் கவனமாகப் பின்பற்றுகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். காட்டுத்தீ மிகவும் ஆபத்தானவை, மேலும் அவை நம் நிலத்துக்கும் பல உயிரினங்களின் வாழ்விடத்துக்கும் அழிவை ஏற்படுத்தும்.

சரியான விதிகளைப் பின்பற்றினால் இந்த பூமியில் உள்ள பல மக்கள் மற்றும் பல உயிரினங்களின் உயிர்களையும் வீடுகளையும் காப்பாற்ற முடியும். காட்டுத்தீக்கு காரணமாக மனிதர்களே முதலிடத்தில் உள்ளனர், ஆனால் மனிதர்களே இதற்கு முதலிட தீர்வாகவும் இருக்கலாம். அந்த தீர்வுக்கு நீங்களும் பங்களியுங்கள் மற்றும் விதிகளை அறிந்து கொள்ளுங்கள்.