கடவுச்சொல் மறதிக்கு தீர்வான LastPass ஆப்!

லாஸ்ட்பாஸ் (LastPass) என்பது உங்கள் கடவுச்சொற்களை எழுதி சேமிப்பதற்கான ஒரு இடமாகும். கடவுச்சொற்கள் மற்றும் ரகசிய தகவல்களுக்கு ஏற்ற வடிவமைப்புடன் விஷயங்களைச் சேமிக்கும் ஒரு நோட்புக் இதுவாகும். டிராயரில் உள்ள நோட்புக்கை விட இது மிகவும் வசதியானது, ஏனென்றால் இதில் விஷயங்களைத் தேடுவது எளிதானது, மேலும் உங்கள் எல்லா சாதனங்களிலிருந்தும் இந்த ஆப்-ஐ எளிதாகப் பெறலாம்.

உங்கள் பாதுகாப்பை மேம்படுத்த நீங்கள் செய்யக்கூடிய மிக முக்கியமான விஷயம் லாஸ்ட்பாஸ் ஆப்-ஐ பயன்படுத்துவதாகும். மேசை டிராயரில் உள்ள நோட்புக் அல்லது உங்கள் ஞாபகத்தை நம்பியுள்ள எந்த கடவுச்சொல் அமைப்பையும் விட இது மிகவும் வசதியானது மற்றும் பாதுகாப்பானது.

லாஸ்ட்பாஸில் ஒவ்வொரு வலைத்தளத்திற்கும் தனித்துவமான சீரற்ற கடவுச்சொற்களை (உதாரணமாக: g88*GZ&&HwRx) பயன்படுத்தலாம். உங்கள் கடவுச்சொல்லை யூகிக்க வழிமுறைகளை இயக்கும் ஒருவரால் நீங்கள் ஹேக் செய்யப்படுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவாக இருக்கும், மேலும் உங்கள் கடவுச்சொற்களில் ஒன்று பெரிய அளவிலான ஒரு ஹேக்கில் கசிந்தால் கூட மற்ற கணக்குகளைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை.

லாஸ்ட்பாஸ் ஒரு இலவச ஆப் ஆகும். நீங்கள் இந்த ஆப்-ஐ பயன்படுத்த தொடங்கும்போது www.lastpass.com இல் கணக்கொன்றை ஆரம்பித்துக் கொள்ளுங்கள். கணினியில், Chrome இணைய உலாவியில் மேல் வலது மூலையில் லாஸ்ட்பாஸ் ஐகானை வைத்து அதன் நீட்டிப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

லாஸ்ட்பாஸை IOS மற்றும் Android தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், லாஸ்ட்பாஸ் வலைத்தளத்திலிருந்து உங்கள் தகவல்களை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம்.

லாஸ்ட்பாஸ் எவ்வாறு இயங்குகிறது?

அனைத்து கடவுச்சொல் ஆப்களும் ஒரே மாதிரியாகவே செயல்படுகின்றன. அதை நாம் உங்களுக்கு மிக எளிமையாக விளக்குகிறோம். உங்கள் தனிப்பட்ட தகவல்கள் நீங்கள் மட்டுமே திறக்கக்கூடிய ஒரு பெட்டகத்தில் சேமிக்கப்பட்டுள்ளன. பெட்டகத்தைத் திறக்க ஒரு முதன்மை கடவுச்சொல் உள்ளது. இது உங்களுக்கு மட்டுமே தெரிந்த ஒரு தனித்துவமான சிக்கலான கடவுச்சொல். அது இல்லாமல் நீங்கள் பெட்டகத்தை திறக்க முடியாது.

லாஸ்ட்பாஸ் மற்றும் பிற கடவுச்சொல் ஆப்களை பயன்படுத்தும் போது நீங்கள் இரண்டு முக்கியமான விடயங்களைப் பின்பற்ற வேண்டும்.

  1. உங்களின் அனைத்து கடவுச் சொற்களையும் பாதுகாக்கும் “முதன்மை கடவுச்சொல்” தனித்துவமாகவும் மிகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும்.
  2. முதன்மை கடவுச்சொல்லை நீங்கள் ஒருபோதும் மறக்கக்கூடாது.

கணினிகள், தொலைபேசிகள் அல்லது எந்த சாதனத்திலும் லாஸ்ட்பாஸ் இணையதளத்திலுள்ள உங்கள் லாஸ்ட்பாஸ் பெட்டகத்தை திறக்கலாம். நீங்கள் உங்கள் ஒவ்வொரு சாதனங்களிலும் உள்ளீடு செய்திருக்கும் கடவுச்சொற்கள் அனைத்தையும் லாஸ்ட்பாஸ் ஒரே இடத்தில் சேமித்து வைக்கிறது.

உங்களது முதன்மைக் கடவுச்சொல் என்க்ரிப்ட் (Encrypt) செய்யப்பட்டு லாஸ்ட்பாஸ் ஆன்லைன் சேவையகங்களுக்கு அனுப்பப்படுவதால் இந்நிறுவனத்திற்கு உங்கள் முதன்மை கடவுச்சொல் ஒருபோதும் தெரியாது. இந்நிறுவனத்திற்கு உங்கள் தரவை டிக்ரிப்ட் (Decrypt) செய்ய முடியாது. லாஸ்ட்பாஸ் சேவையகங்கள் ஹேக் செய்யப்பட்டாலும் உங்கள் தரவுகள் என்க்ரிப்ட் செய்யப்பட்டிருப்பதால் அதனை ஹேக் செய்தவர்களால் பார்க்க முடியாது.

லாஸ்ட்பாஸின் முக்கியமான அம்சங்களில் சில

  1. Chrome இல் உள்ள லாஸ்ட்பாஸ் ஐகானின் மூலம் உங்கள் தகவல்களை எளிதாக அணுகலாம். இதனை ஒரே கிளிக்கில் திறந்து பயன்படுத்தலாம். லாஸ்ட்பாஸ் அங்கீகரிக்கும் தளத்தில் நீங்கள் இருந்தால், உங்கள் உள்நுழைவுப் பெயர் மற்றும் கடவுச்சொல்லை தானாக நிரப்பிக் கொள்ளலாம்.
  2. பேஸ்புக், அமேசான், கூகிள் போன்ற பல பிரபலமான வலைத்தளங்களில், ஒரே கடவுச்சொல்லை ஒரே கிளிக்கில் புதுப்பித்துக் கொள்ளலாம். லாஸ்ட்பாஸ் தானாகவே ஒரு பாதுகாப்பான கடவுச்சொல்லை தேர்ந்தெடுத்து உங்கள் லாஸ்ட்பாஸ் பெட்டகத்திற்குள் சேமித்து வைத்துக் கொள்ளும்.
  3. லாஸ்ட்பாஸ் உங்கள் கடவுச்சொற்களை ஏதேனும் அல்லது அனைத்தையும் பகிர்வதற்கான உள்ளமைக்கப்பட்ட கருவிகளைக் கொண்டுள்ளது. அதாவது நீங்கள் உங்கள் கணக்கை பயன்படுத்த முடியாமல் போனால் நீங்கள் நம்பும் ஒருவருக்கு அவசர அணுகலை வழங்கும் செயல்முறையை இது வழங்குகிறது.
  4. கிரெடிட் கார்டுகள், காப்பீட்டு தகவல்கள், வங்கி கணக்குகள், குறிப்பிட்ட படிவங்கள், படங்கள் மற்றும் முக்கியமான கோப்புகளையும் லாஸ்ட்பாஸில் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.
  5. ஒரு தளத்தில் கணக்கொன்றை ஆரம்பிக்கும் போது அது பாதுகாப்பு கேள்விகள் கேட்டால் அந்த கேள்விகள் மற்றும் பதில்களை லாஸ்ட்பாஸில் அந்த வலைத்தளத்திற்கான கடவுச்சொல்லுடன் குறித்து வைத்துக் கொள்ளலாம்.

லாஸ்ட்பாஸ் எவ்வாறு இயங்குகிறது என்பதைக் கற்றுக்கொள்ள சில நிமிடங்கள் செலவிட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் முக்கியமான தகவல்களுக்கு நீங்கள் அதை நம்புகிறீர்கள், அதனால் சிறிது நேரத்தை முதலீடு செய்வது அவசியமான ஒன்றாகும்.

லாஸ்ட்பாஸைப் பயன்படுத்தத் தொடங்குங்கள். நீங்கள் பாதுகாப்பாக உணருவீர்கள். அடுத்த ஒரு பெரிய ஹேக் பற்றி அறிவிக்கப்படும் போது நீங்கள் கவலைப்பட மாட்டீர்கள்.

Last Pass App (லாஸ்ட் பாஸ்) ஐ தரவிறக்கம் செய்ய இங்கே Android App / iOS App / Chrome / Mozilla அழுத்தவும்.