உங்களை வயதான தோற்றத்தில் காட்டும் ரஷ்ய ஆப் தகவல்களைத் திருடுவது உண்மையா?

Faceapp

ஃபேஸ்ஆப் (FaceApp) என்பது கூகிள் பிளே மற்றும் ஆப்பிளின் ஆப் ஸ்டோரில் தற்போது மிகவும் பிரபலமாகி வரும் ஒரு இலவச ஆப் ஆகும். இது புகைப்படங்களில் உள்ளவர்களை வயதானவராகக் காட்டுகிறது. கடந்த வாரத்தில் வயதான பிரபலங்கள் மற்றும் சாதாரண ஃபேஸ்ஆப் பயனர்களின் எண்ணற்ற புகைப்படங்கள் ஆன்லைனில் பகிரப்பட்டாலும், பயனர் தரவை ஃபேஸ்ஆப் எவ்வாறு கையாளுகிறது என்பதில் கவலைகள் அதிகரித்து வருகின்றன.

ஃபேஸ்ஆப் முதன்முதலில் 2017 இல் பிரபலமானது. இந்த ஆப் பல்வேறு ஃபில்டர்களுடன் மக்களின் முகங்களை மாற்ற செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகிறது. ஃபேஸ்ஆப்பில் சேர்க்கப்பட்ட புகைப்படங்கள் பயனருக்கு திருப்பி அனுப்பப்படுவதற்கு முன்பு செயலாக்கத்திற்காக ஒரு சேவையகத்தில் (server) பதிவேற்றப்படுகின்றன.

ஃபேஸ்ஆப்பின் தனியுரிமைக் கொள்கை

ஃபேஸ்ஆப்பின் சேவை விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளதாவது, பயனர்கள் பதிவேற்றிய புகைப்படங்கள் மற்றும் பிற தகவல்களை உதாரணமாக பெயர்கள், ஒற்றுமைகள் மற்றும் குரல்கள் உள்ளிட்டவற்றை வணிக நோக்கங்களுக்காக பயன்படுத்த முடியும் என்பதாகும். ஃபேஸ்ஆப் இன் பயன்பாட்டில் இருந்து புகைப்படம் நீக்கப்பட்ட பிறகும் அந்த தரவுகளை தொடர்ந்தும் சேமித்து வைத்துக்கொள்ள முடியும் என்றும் இந்த ஆப் இன் சேவை விதிமுறைகள் கூறுகின்றன.

“சில சட்டபூர்வமான கடமைகளுக்கு” இணங்க தரவைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று நிறுவனம் கூறுகிறது. ஆனால், இந்த தரவுகளை எவ்வளவு காலம் வைத்திருக்க முடியும் என்பதற்கு வரம்பு இல்லை.

மேலும், ஃபேஸ்ஆப்பின் தனியுரிமைக் கொள்கையானது, பயன்பாட்டின் மூலம் சேகரிக்கப்பட்ட அனைத்து தகவல்களையும் ஃபேஸ்ஆப் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் எந்த நாடுகளிலிருந்து இயங்கினாலும் அவற்றுடன் பகிரலாம் என்று கூறுகிறது. இதன் அர்த்தம் என்னவென்றால் பயனர் புகைப்படங்கள் மற்றும் தரவுகள் ஆப் இன் மேம்பாட்டுக் குழு அடிப்படையாகக் காணப்படும் ரஷ்யாவில் சேமிக்கப்பட்டிருக்கும் என்பதாகும்.

ஃபேஸ்ஆப் அமெரிக்காவில் கூகிள் மற்றும் அமேசானுக்கு சொந்தமான சேவையகங்களைப் பயன்படுத்துவதாக டெக் க்ரஞ்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த கருத்துக்கு ஃபேஸ்ஆப் உடனடியாக பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

தனியுரிமை தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஃபேஸ்ஆப் வெளியிட்ட அறிக்கை

தனியுரிமைக் கவலைகளுக்கு மத்தியில் அதன் கொள்கையை தெளிவுபடுத்துவதற்காக ஃபேஸ்ஆப் டெக் க்ரஞ்சிற்கு ஒரு வகைப்படுத்தப்பட்ட அறிக்கையை வழங்கியது. சேவை விதிமுறைகள் தரவை ரஷ்ய மேம்பாட்டுக் குழுவுடன் பகிர முடியும் என்று பரிந்துரைத்தாலும், பயனர் தரவு சேவையகத்தின் இடத்தைப் பொறுத்து பகிரப்படுவதாக நிறுவனம் கூறுகிறது.

எடிட்டிங் செயல்முறையை அதன் பயனர்களுக்கு மிகவும் திறமையாக்குவதற்காக சேவையகத்தில் சேமிக்கப்பட்ட புகைப்படங்கள் வழக்கமாக இரண்டு நாட்கள் சேமிக்கப்பட்டு பின் நீக்கப்படும் என்றும் ஃபேஸ்ஆப் கூறுகிறது.

அனைத்து தனிப்பட்ட தரவையும் தங்கள் சேவையகங்களிலிருந்து அகற்றுவதற்கான பயனர் கோரிக்கைகளையும் ஏற்றுக்கொண்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரஷ்ய தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிக சந்தேகங்களை எதிர்கொள்கின்றன

கடந்த ஆண்டு, 2016 ஜனாதிபதித் தேர்தலில் செல்வாக்கு செலுத்திய ஒரு பரந்த சமூக ஊடக பிரச்சாரம் தொடர்பான குற்றங்களுக்காக ஒரு டஜன் ரஷ்ய குடிமக்களுக்கு எதிராக முன்னாள் சிறப்பு ஆலோசகர் ராபர்ட் முல்லரின் அலுவலகம் குற்றம் சாட்டியது. இதற்காக ரஷ்யாவிலுள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கைத் தளமாகக் கொண்ட இணைய ஆராய்ச்சி நிறுவனம், பேஸ்புக், ட்விட்டர் மற்றும் பிற சமூக ஊடக தளங்களில் தவறான அடையாளங்களையும் போலி செய்திகளையும் பிரச்சாரங்களையும் பரப்பியது.

சில ரஷ்ய நடிகர்கள், சில ஃபேஸ்ஆப் பயனர்களும் விமர்சகர்களும் ஃபேஸ்ஆப்பில் பதிவேற்றிய அவர்களின் பெயர்களும் புகைப்படங்களும் தவறாகப் பயன்படுத்தப்படலாம் அல்லது தவறான நிறுவனத்திற்கு கசிந்து போகக்கூடும் என்று நியாயமான கருத்தை வெளியிட்டுள்ளனர். எனினும், மூன்றாம் தரப்பு நிறுவனங்களுக்கு தரவை விற்க மாட்டோம் என்றும் தரவு ரஷ்யாவிற்கு பகிரப்படவில்லை என்றும் ஃபேஸ்ஆப்பின் அறிக்கை கூறுகிறது.

ஃபேஸ்ஆப்பின் iOS பதிப்பில் சில கூடுதல் பாதுகாப்பு முறைகள் உள்ளன. ஏனெனில் ஐபோன்கள் அடிப்படையாகவே புகைப்பட பாதுகாப்பைக் கையாளுகின்றன. பயனர்கள் ஃபேஸ்ஆப் மற்றும் பிற ஆப்களை ஐபோனின் அமைப்புகள் மூலம் போனின் முழு புகைப்பட நூலகங்களைப் பார்ப்பதைத் தடுக்க முடியும் என்றாலும், டெக் க்ரஞ்ச் iOS 11 இல் உள்ள ஒரு பிழை குறித்து அறிக்கை அளித்துள்ளது. இது பயனர் அனுமதி அளித்தால் ஒரே நேரத்தில் ஒவ்வொரு புகைப்படமாக போனிலிலுள்ள எல்லா புகைப்படங்களையும் அணுக பயன்பாடுகளுக்கு அனுமதி அளிக்கிறது என சுட்டிக் காட்டியுள்ளது.

இதுவரை, ஃபேஸ்ஆப்பின் தற்போதைய பதிப்பில் பாதுகாப்பு வல்லுநர்கள் எந்த அசாதாரண நடைமுறைகளையும் கண்டறியவில்லை, ஆனால் எல்லா ஆப்களையும் போலவே, புகைப்படங்கள் மற்றும் பிற தனிப்பட்ட தரவைப் பகிரும்போது பயனர்கள் தங்கள் கட்டுப்பாட்டின் பற்றாக்குறையை கவனத்தில் கொள்ள வேண்டும் என நாம் கூற கடமைப்பட்டுள்ளோம்.