ஆவணங்களை ஸ்கேன் செய்ய உதவும் CamScanner ஆப்!

ஆவணங்களை ஸ்கேன் செய்ய உதவும் CamScanner ஆப்!

ஸ்மார்ட்போனின் கேமரா புகைப்படம் எடுத்தல் தவிர பல வழிகளில் பயன்படுத்தக்கூடியது. அவற்றில் ஒன்று ரசீதுகள் மற்றும் ஆவணங்களை ஸ்கேன் செய்வது. இந்த ஆப் IOS மற்றும் Android இயங்குதளங்களில் செயற்படும். ஸ்கேன் செய்வதற்கு பல ஆப்கள் இருப்பினும், கெம்ஸ்கேனர் மிகவும் இலகுவாக பயன்படுத்தக்கூடிய ஒரு ஆப் ஆகும். இன்று நாம் இந்த ஆப்-ஐ பற்றி பார்ப்போம்.

பாஸ்போர்ட், அடையாள அட்டை, புத்தகங்கள் மற்றும் QR குறியீடுகள் போன்ற பல்வேறு வகையான ஆவணங்களை ஸ்கேன் செய்ய கெம்ஸ்கேனர் உங்களை அனுமதிக்கும். இந்த ஆப் அடையாள அட்டைகள், ஓட்டுநர் உரிமம் மற்றும் பாஸ்போர்ட்டுக்கு தனியான அமைப்புகளைக் கொண்டுள்ளது.

நீங்கள் முதன்முதலில் கெம்ஸ்கேனரை நிறுவும்போது ஒரு கணக்கை உருவாக்க வேண்டும். அதைச் செய்தவுடன், நீங்கள் ஒரு அழகான செயல்பாட்டு தளத்திற்கு வரவேற்கப்படுவீர்கள். திரையின் அடிப்பகுதியில் ஸ்கேன் பொத்தான் உள்ளது. அதைத் தட்டும்போது, PPT, Tax, ஐடி கார்டு போன்ற பல விருப்பங்களைக் காண்பீர்கள். நீங்கள் ஸ்கேன் செய்ய விரும்பும் ஆவண வகையைப் பொறுத்து இதில் ஒரு விருப்பத்தைத் தெரிவு செய்துகொள்ளலாம்.

நீங்கள் ஒரு ஆவணத்தை ஸ்கேன் செய்யும் போது, இந்த ஆப் அந்த ஆவணத்தின் விளிம்புகளைக் கண்டறிய முயற்சிக்கும், அல்லது நீங்கள் அதை உங்கள் விருப்பப்படியும் தேர்வு செய்துகொள்ளலாம். அதை 360 டிகிரி வரை சுழற்றக் கூடிய வசதியும் உள்ளது. நீங்கள் திருப்தி அடைந்ததும், ஸ்கேன் செய்யப்பட்ட கோப்பை சேமிக்க கெம்ஸ்கேனர் பல விருப்பங்களை உங்களுக்கு வழங்கும். நீங்கள் அதை கருப்பு & வெள்ளை அல்லது சாம்பல் நிற படமாக சேமிக்கலாம். இதன் போது Auto முறையும் மிகச் சிறப்பாக செயல்படும்.

அதுமட்டுமல்லாமல், நீங்கள் உங்கள் கையால் எழுதிய ஆவணங்களை ஸ்கேன் செய்யும்பொழுது தானாகவே தவறுகளைச் சரிபார்த்து கணினியின் எழுத்து வடிவில் மாற்றிக்கொள்ளும். ஸ்கேன் செய்யப்பட்ட மற்றும் மாற்றப்பட்ட உரையை வெளிநாட்டு மொழிகளுக்கு மொழிபெயர்க்கவும் கெம்ஸ்கேனர் உங்களுக்கு உதவுகிறது.

ஆவணங்களை ஸ்கேன் செய்வதில் கெம்ஸ்கேனர் ஒரு சக்திவாய்ந்த ஆப் ஆகும். இது பல வசதிகளைக் கொண்டுள்ளதால் உங்கள் அன்றாட வாழ்வின் தேவைகளுக்கு உபயோகமான ஆப் ஆக அமையும் என்று நம்புகிறோம்.

கேம்ஸ்கேனர் (CamScanner) ஐ தரவிறக்கம் செய்ய இங்கே Android App / iOS App அழுத்தவும். இன்றே முயற்சித்து பார்க்கலாமே!