கூகிள் அசிஸ்டன்ட் எனப்படும் செயற்கை அறிவாற்றலுடைய ஆப்!

அமேசானின் அலெக்சா, ஆப்பிளின் சிரி மற்றும் மைக்ரோசாப்டின் கோர்டானா என்பன போல கூகிளின் பதிப்பே கூகிள் அசிஸ்டன்ட். இது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து நம்பமுடியாத முன்னேற்றத்தை அடைந்துள்ளது.

கூகிள் தனது சொந்த சாதனங்களில் மட்டுமல்லாமல், கூகிள் அசிஸ்டன்டை ஃப்ரிட்ஜ்கள் மற்றும் ஹெட்ஃபோன்கள் முதல் ஸ்பீக்கர்கள் மற்றும் கார்கள் வரை ஒரு பெரிய அளவிலான சாதனங்களில் பிற நிறுவனங்களுடனான கூட்டாண்மை மூலம் தொலைதூரத்திற்கு பரப்பியுள்ளது.

கூகிள் அசிஸ்டன்ட் எவ்வாறு செயல்படுகிறது மற்றும் கூகிளின் செயற்கை அறிவாற்றல் பற்றி இப்போது தெரிந்து கொள்வோம்.

கூகிள் அசிஸ்டன்ட் என்றால் என்ன?

கூகிள் அசிஸ்டன்ட் ஒரு குரலின் மூலம் செயற்படுகிறது. இந்த ஆப் தொடங்கப்பட்டபோது, Goolge Now எனப் பெயரிடப்பட்டிருந்தது. கூகிளின் தற்போதைய “ஓகே கூகிள்” குரல் கட்டுப்பாட்டு ஆப்-ஐ விரிவாக்கம் செய்யும்போது Google Now வடிவமைக்கப்பட்டது.

முதலில், Google Now உங்களுக்காக பொருத்தமான தகவல்களை புத்திசாலித்தனமாக பெற்றுத்தந்தது. நீங்கள் எங்கு பணிபுரிந்தீர்கள், உங்கள் சந்திப்புகள் மற்றும் பயணத் திட்டங்கள், நீங்கள் விரும்பிய விளையாட்டுக் குழுக்கள் மற்றும் உங்களுக்கு எது ஆர்வமாக இருக்கிறது என்பதன் மூலம் இது உங்களுக்கு முக்கியமான தகவல்களை உங்களுக்கு வழங்கியது.

இப்போது கூகுளை அசிஸ்டன்ட் என பெயர் மாற்றப்பட்டுள்ள Google Now குரல் கட்டுப்பாட்டுடன் இணைந்து அதே பணியைப் புரிகின்றது. கூகிள் அசிஸ்டன்ட் உரை அல்லது குரல் நுழைவு இரண்டு முறைகளிலும் பதிலளிக்கும். மேலும், நீங்கள் பயன்படுத்தும் எந்த நுழைவு முறையிலும் இது உரையாடலைப் பின்பற்றும்.

கூகிள் அசிஸ்டன்ட்டால் என்ன செய்ய முடியும்?

கூகிள் அசிஸ்டன்ட் குரல் கட்டளைகள், குரல் தேடல் மற்றும் குரல்-செயல்படுத்தப்பட்ட சாதனக் கட்டுப்பாடு ஆகிய வசதிகளை வழங்குகிறது, நீங்கள் “ஓகே கூகிள்” அல்லது “ஹேய் கூகிள்” என்ற சொற்களைக் கூறிய பிறகு இது பல பணிகளை முடிக்க அனுமதிக்கிறது. இதற்கு உங்களுடன் மனிதனைப் போல் உரையாடவும் முடியும்.

கூகிள் அசிஸ்டன்ட் மூலம் செய்யக்கூடிய சில விடயங்கள்:

தொடர்ச்சியான உரையாடலின் போது மீண்டும் ஒரு கோரிக்கைக்காக “ஹேய் கூகிள்” என்று சொல்ல வேண்டியதில்லை. நீங்கள் Google உடன் பேசத் தொடங்கிய பின் அது உங்கள் அடுத்தடுத்த கேள்விகளுக்கு சரளமாக பதிலளிக்கும். கூகிள் அசிஸ்டன்ட்டிற்கு வெவ்வேறு நபர்களின் குரல்களையும் அடையாளம் காண முடியும், எனவே அதனுடன் யார் பேசுகிறார்கள் என்பது அதற்கு தெரியும். அதற்கேற்பவே அதன் பதில்களும் அமையும். நீங்கள் ஒரே நேரத்தில் பல விஷயங்களையும் கேட்கலாம்.

பிற அம்சங்களாக உங்கள் விமானச் சீட்டை பதிவு செய்யும் திறன் (விமானம் மற்றும் இலக்கு சார்ந்தது), ஒரு அறையை முன்பதிவு செய்யும் திறன் மற்றும் கூகிள் ஹோம் சாதனங்கள் மற்றும் ஸ்மார்ட் டிஸ்ப்ளேக்கள் என்பவற்றுடன் இணைந்து செயல்படல் என்பனவும் இதனால் செய்ய முடிகின்றது. கூகிள் அசிஸ்டன்ட் உதவியுடன் டஜன் கணக்கான மொழிகளில் உரையாடல் நடத்த உங்களால் முடிகின்றது. மொழிபெயர்ப்பாளர் பயன்முறையைத் தொடங்க “ஹேய் கூகிள், எனது ஸ்பானிஷ் மொழிபெயர்ப்பாளராக இருங்கள்” என்று கூறினால் போதும். உடனுக்குடன் மொழிபெயர்ப்பைத் தருவதோடு ஸ்மார்ட் டிஸ்ப்ளேக்களில் உரையாடலுக்கு உதவுவதற்காக எழுதப்பட்ட மொழிபெயர்ப்பையும் காட்டுகிறது.

கூகிள் அசிஸ்டன்ட் மூலம் பரந்த அளவிலான சாதனங்களை கட்டுப்படுத்த முடியுமாகையால் உங்கள் குரல் மூலம் அறை வெப்பம், விளக்குகள் மற்றும் அதன் நிறங்கள் போன்றவற்றையும் கட்டுப்படுத்தலாம்.

கூகுளை அசிஸ்டன்ட் மூலம் எந்த சாதனங்களைக் கட்டுப்படுத்த முடியும்?

கூகிள் அசிஸ்டென்ட் முதலில் கூகிள் பிக்சல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் கூகிள் ஹோம் ஆகியவற்றில் தொடங்கப்பட்டது, ஆனால் இது இப்போது ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள், ஆண்ட்ராய்டு டிவி, என்விடியா ஷீல்ட், சில கார்கள் மற்றும் அனைத்து நவீன ஆண்ட்ராய்டு சாதனங்களிலும் செயல்படுகிறது.

கூகிள் அசிஸ்டன்ட்டால் கட்டுப்படுத்தக்கூடிய சாதனங்களில் சில:

எதிர்காலத்தில் நம் வேலைகளை இலகுவாக்க கண்டுபிடிக்கப்படும் சாதனங்களில் முக்கியமான ஒரு சாதனமாக இந்த கூகிள் அசிஸ்டன்ட் அமையும் என்பதில் சந்தேகமே இல்லை.