அமேசான் நிறுவனம் மனித உணர்ச்சிகளை புரிந்துகொள்ளும் கைக்கடிகாரமொன்றை தயாரித்து வருகின்றது

சமீபத்தில் சுவாரஸ்யமான அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது. தனது அலெக்ஸா (Alexa) எனப்படும் குரல் மென்பொருள் மூலம் இயங்கும் கைக்கடிகாரம் ஒன்றை அமேசான் நிறுவனம் தயாரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கைக்கடிகாரம் மனித உணர்ச்சிகளை புரிந்து கொள்ளும் ஒரு சாதனமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கைக்கடிகாரத்தை தயாரிக்க அலெக்ஸா குரல் மென்பொருள் குழு மற்றும் அமேசான் லேப் 126 வன்பொருள் ஆய்வகம் ஒன்றிணைந்திருக்கின்றது.

இது ஒரு ஸ்மார்ட்போன் பயன்பாட்டுடன் ஒத்திசைவில் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது என்றும் “தனது குரலின் சத்தத்திலிருந்து அவரின் உணர்ச்சியைக் கண்டறிந்து கொள்ளும் ஒலிவாங்கிகளைக் கொண்டிருக்கும்” எனவும் கூறப்படுகிறது.

உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு சாதனம் மிகத் தொலைவில் இல்லை. மக்கள் பேசும் விதத்தில் உள்ள அனைத்து தகவல்களையும் அமேசான் நிறுவனம் ஆய்வு செய்வதனால் அதிகூடிய உணர்திறன் கொண்ட சாதனத்தை அமேசான் வெளியிடும் என கூறப்படுகிறது. ஒரு துல்லியமான அல்லது குறைந்தபட்சம் நம்பகமான, ஒரு நபரின் உணர்ச்சிவசமான தகவல்களை சேகரிப்பென்பது, ​​மிகப்பெரிய காரியத்தை போல தோன்றுகிறது. இது நிச்சயமாக இன்னும் செயட்பாட்டில் இல்லை, ஏனெனில் அது மிகவும் கடினமான ஒரு விடயமாக உள்ளது என்பதே காரணம். இன்றைய அறிக்கையின் படி அமேசான் திட்டத்தில் எவ்வளவு தூரம் தொலைவில் உள்ளது என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனாலும் கூடிய விரைவில் அமேசான் இந்த கைக்கடிகாரத்தை சந்தையில் அறிமுகப்படுத்தக்கூடும் என செய்திகள் வெளியாகி வருகின்றது.