அதிர்ச்சியூட்டும் 6 மொபைல் போன் உண்மைகள்! பாகம் – 2

கடந்த பாகத்தைப் போலவே இந்த பாகத்திலும் சில ஆச்சரியமான தகவல்களை நாம் பார்க்கவுள்ளோம்.

1. நம் உலகில் உள்ள மக்கள் தொகையை விட அதிகமான மொபைல் போன்கள் உள்ளன.

இது இப்பொழுது நடந்து கொண்டிருக்கின்றது, ஏனெனில் உலகில் மொபைல் போன் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது (சுமார் 5,000 மில்லியன்). நாங்கள் தற்போது இதைப்பற்றி பேசும்போது இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரித்து வருகிறது. மேலும், ஒவ்வொரு பயனருக்கும் சராசரியாக சுமார் 1.5 தொலைபேசிகள் உள்ளன. கடைசியாக கணிக்கப்பட்ட ஆய்வின் படி உலகிலுள்ள மொபைல் இணைப்புகளின் எண்ணிக்கை 7,500 மில்லியனையும் தாண்டியுள்ளது. ஆனால், உலகில் 7,350 மில்லியன் மக்களே வசிக்கின்றனர் என அந்த ஆய்வு சுட்டிக்காட்டியது.

2. உலகின் மிக விலையுயர்ந்த மொபைல் போனின் விலை 95.5 மில்லியன் டாலர்கள்!

இது பால்கன் சூப்பர்நோவா எனப்படும் இளஞ்சிவப்பு நிற வைரத்தைக் கொண்ட ஐபோன் 6 ஆகும். மற்றும் இந்த கைத்தொலைபேசியின் பாகங்கள் 18 காரட் தங்கத்தால் ஆனது. இந்த வைரம் போனின் பின்புறத்தில் பதிக்கப்பட்டுள்ளது. இந்த கைத்தொலைபேசியின் மலிவான பதிப்பொன்றும் வெளியானது. அதன் விலை 48.5 மில்லியன் டாலர்கள்!

3. மொபைல் தொலைபேசிகளில் கழிப்பறையை விட அதிக பாக்டீரியாக்கள் வாழ்கின்றன.

பல ஆய்வுகளின்படி, மொபைல் போன்களின் திரைகளில் காணப்படும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கை கழிப்பறையில் காணப்பட்டதை விட 20 மற்றும் 30 மடங்கு அதிகம். எனவே அதை உங்கள் வாயிலிருந்து விலக்கி வைக்க இது ஒரு நல்ல காரணம் என நீங்கள் நினைக்கவில்லையா?

4. புளூடூத் (Bluetooth) என்ற சொல் ஒரு நோர்வே நாட்டு மன்னரிடமிருந்து வந்தது.

இது 10 ஆம் நூற்றாண்டின் டேனிஷ் மற்றும் நோர்வே மன்னர் ஹரால்ட் பிளாடண்ட் என்பவரின் பெயரை ஆங்கிலத்தில் ஹரால்ட் புளூடூத் என்று தவறாக மொழிபெயர்க்கப்பட்டதால் உருவான சொல்லே ஆகும். அவர் பேச்சு மற்றும் உறுதியான திறன்களுக்காக அறியப்பட்டார். இந்த மன்னர் நோர்வே, ஸ்வீடிஷ் மற்றும் டேனிஷ் பழங்குடியினரை ஒன்றிணைத்து கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாற்றியவர் ஆவார்.

5. பின்லாந்தில், மொபைல் போன்களை வீசுவது ஒரு விளையாட்டு.

ஆனால் இதில் சிறந்த அம்சம் என்னவென்றால், இது ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்படுகிறது. 2000 ஆம் ஆண்டு முதல், மொபைல் போன்களை வீசும் விளையாட்டு உலக சாம்பியன்ஷிப் போட்டியாக நடைபெற்று வருகிறது. தூரத்தின் எல்லை, ஆண்களுக்கு 97 மீட்டர் என்றும் பெண்களுக்கு 40 மீட்டர் என்றும் அமைக்கப்பட்டுள்ளது.

6. விண்ணிற்கு ஏவப்பட்டுள்ள மொபைல் போன்!

இது கூகிள் நெக்ஸஸ் தொலைபேசியாகும். இது 2013 ஆம் ஆண்டில் சர்ரே பல்கலைக்கழகத்தின் (ஐக்கிய இராச்சியம்) ஆராய்ச்சியாளர்களால் விண்ணில் ஏவப்பட்டது. அதன் கூறுகளின் வெற்றிட நிலைமைகளில் உள்ள உறுதியையும், விண்வெளியில் ஒரு செயற்கைக்கோளைக் கட்டுப்படுத்தும் திறனையும் சோதித்தது பார்க்கவே இது விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. இந்த நேரத்திலும் கூட அது பூமியைச் சுற்றி வந்து கொண்டிருக்கும்.

முதல் பாகத்தை படிக்க இங்கே அழுத்தவும்.