அதிர்ச்சியூட்டும் 6 மொபைல் போன் உண்மைகள்! பாகம் – 1

ஸ்மார்ட்போன்கள் எங்கள் உடலுடன் இணையப்போகும் இலத்திரனியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் முதல் படி என்று சிலர் நம்புகிறார்கள். நம் மூளை மற்றும் நம் புலன்களின் நீட்டிப்பைப் போலவே, ஸ்மார்ட்போன்களின் கூடுதல் அறிவு, கூடுதல் நினைவகம் மற்றும் கூடுதல் பார்வை ஆகியவற்றை நமக்கு வழங்குகின்றன.

இணையத்தில் தகவல்களைத் தேட, சில குறிப்புகளைக் கலந்தாலோசிக்க, சில உரையை மொழிபெயர்க்க அல்லது படங்களை தரவிறக்கம் செய்ய உங்கள் மொபைல் தொலைபேசியை நீங்கள் எப்போதாவது பயன்படுத்தியிருக்கிறீர்களா? ஸ்மார்ட்போன்கள் எங்கள் சில குறைபாடுகளை பூர்த்திசெய்து, நம்மை புத்திசாலித்தனமாக்குகின்றன (அவற்றை நம் கையில் வைத்திருக்கும்போது!).

மொபைல் போன்கள் வெளிவந்து பல ஆண்டுகளாகின்றன, எனவே அவற்றைப் பற்றி எங்களுக்குத் தெரியும் என்று தோன்றினாலும், நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில மொபைல் போன் பற்றிய உண்மைகள் இன்னும் உள்ளன என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். இன்று நாம் அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.

1. மொபைல் தொலைபேசியின் மூலம் முதல் அழைப்பு ஏப்ரல் 3, 1973 அன்று ஏற்படுத்தப்பட்டது.

நியூயார்க்கின் ஒரு தெருவிலிருந்து ஒரு மொபைல் தொலைபேசியிலிருந்து மோட்டோரோலாவின் பொறியாளர் மார்ட்டின் கூப்பர் இந்த அழைப்பை ஏற்படுத்தியுள்ளார். அவர் இந்த துறையில் தனது மிகப்பெரிய போட்டியாளரான AT&T இன் பொறியியலாளர் ஜோயல் ஏங்கல் என்பவருக்கே முதல் அழைப்பை தான் செய்ததாக பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவித்தார். அவர் அந்த முதல் தொலைபேசி அழைப்பில் ஜோயல் ஏங்கலிடம் கேட்டதாவது, “நான் உங்களை எங்கிருந்து அழைக்கிறேன் என்று உங்களுக்குத் தெரியுமா?”

2. முதல் “ஸ்மார்ட்போன்” 1997 ல் வெளிவந்தது.

எரிக்சன் ஜி.எஸ். 88 “பெனிலோப்” மாடலைப் பற்றிதான் நாங்கள் இங்கு பேசுகின்றோம். இது இன்றைய காலத்தில் எல்லோராலும் சொல்லப்படும் மிகப் பிரபலமான பெயரான “ஸ்மார்ட்போன்” என அழைக்கப்பட்ட முதல் மொபைல் போன் ஆகும்.

3. அதிகம் விற்பனையாகும் மொபைல் போன் நோக்கியா 1100 ஆகும்.

இன்றுவரை, 250 மில்லியன் நோக்கியா 1100 மொபைல் போன்கள் விற்கப்பட்டுள்ளன. இது இதுவரை உருவாக்கப்பட்ட உறுதியான தொலைபேசிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இதுவே இந்த மொபைல் போனின் வெற்றிக்கு காரணமாகும்.

4. கடிகாரங்கள் மற்றும் அலார கடிகாரங்கள் சிலநாட்களில் காணாமல் போய்விடும்.

நாம் நீண்ட காலத்திற்கு முன்னர் கைக்கடிகாரத்தை எல்லா நேரங்களிலும் அணிந்து, எங்கள் அலமாரியில் அல்லது மேஜை மீது இருந்த அந்த அலார கடிகாரங்களைப் பயன்படுத்தினோம் என்பது உண்மையில் உங்களுக்கு நினைவிருக்கிறதா? இன்று நாம் அவற்றைப் பற்றி கிட்டத்தட்ட மறந்துவிட்டோம், விரைவில் அவை முற்றுமுழுதாக மறைந்துவிடும். 60 சதவிகித பயனர்கள் இந்த பொருட்களை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டார்கள். இவர்கள் அதற்கு பதிலாக ஸ்மார்ட்போன்களில் உள்ள கடிகார மற்றும் அலார கடிகார அம்சங்களை பயன்படுத்துவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

5. மொபைல் போன்களை பாவிப்பதும் ஒருவித போதையாகும். அது நோமோபோபியா என்று அழைக்கப்படுகிறது.

சுமார் 200,000 மில்லியன் மக்கள் இந்த நிலைமையால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் தமது மொபைல் போனில்லாமல் தங்கள் வீட்டை விட்டு வெளியேற பயப்படுகிறார்கள். மற்றொரு வார்த்தை, “ரிங்சைட்டி” (Ringxiety) என்றழைக்கப்படுகிறது. இது போனின் அழைப்பு மணி ஒலிக்கவிட்டாலும் அது ஒலிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துவதே ஆகும். மேலும், “ஃபுப்பிங்” (Phubbing) என்றொரு வார்த்தை உள்ளது. இது மொபைல் போன் பயன்பாட்டின் போது ஒருவரைச் சுற்றி உள்ள அனைத்தையும் (மனிதர்கள் உட்பட) புறக்கணிப்பவரின் நடத்தையை விவரிக்கிறது. இந்த தருணத்தில் நீங்கள் இதைச் செய்து கொண்டிருக்கலாம்… இல்லையா?

6. நாம் மொபைல் தொலைபேசியை ஒரு நாளைக்கு சராசரியாக 150 முறை பார்க்கின்றோம்.

நோமோபோபியாவால் பாதிக்கப்பட்டவர்கள் இதை சராசரியை விட அதிகமாக செய்கிறார்கள் என்பது மிகவும் சாத்தியம் என்றாலும், சராசரியாக ஒவ்வொரு 6 நிமிடங்களுக்கு ஒரு தடவை நாம் எமது தொலைபேசிகளை சரிபார்க்கிறோம் என்று கூறப்படுகிறது. நீங்கள் இப்போதும் கூட இந்த கட்டுரையை வாசித்த பின் மீண்டும் ஒருமுறை உங்கள் மொபைல் போனை சரிபார்க்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் அல்லவா?

நாம் இன்னும் சில அற்புதமான தகவல்களை அடுத்த பாகத்திலும் பார்ப்போம்.

இரண்டாவது பாகத்தை படிக்க இங்கே அழுத்தவும்.