ஸ்மார்ட்போனிற்கு அடிமையாவதை நிறுத்த 6 ஆப்ஸ்!

நீங்கள் இன்று எவ்வளவு பிஸியான வேலையில் இருந்தாலும், உங்கள் ஸ்மார்ட்போன் திரையில் இருந்து உங்களை விலக்கிக் கொள்வது கடினமாக இருக்கின்றது. ஆப்ஸ், மின்னஞ்சல் மற்றும் சமூக ஊடகங்கள் அனைத்தும் நம் விரல்களின் நுனியில் இருப்பதால், மொபைல் உலகத்தால் தொடர்ந்து திசைதிருப்பப்படுகிறோம்.

ஒரு ஆப்-இன் பயன்பாட்டைப் நிறுத்த இன்னொரு ஆப்-ஐ பயன்படுத்துவது எதிர்மறையானதாகத் தோன்றலாம், ஆனால் கிட்டத்தட்ட எல்லாவற்றிற்கும் எங்கள் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்தும் ஒரு யுகத்தில், நெருப்பைக் கொண்டு நெருப்பை எதிர்த்துப் போராடுவது அர்த்தமுள்ளதாக இருக்கிறது.

உங்கள் ஸ்மார்ட்போனுக்கு நீங்கள் அடிமையாவதை நிறுத்த உங்களுக்கு உதவக்கூடிய ஆறு ஆப்களை இங்கே காண்போம்.

1. Offtime (iOS, Android)

பேஸ்புக் மற்றும் கேம்கள் போன்றவற்றின் கவனத்தை சிதறடிப்பதன் மூலம் மற்றும் தகவல்தொடர்புகளை வடிகட்டுவதன் மூலம் பயனர்களின் ஸ்மார்ட்போன் பாவனையைக் குறைக்க இந்த ஆப் உதவுகிறது. உங்கள் ஸ்மார்ட்போனை நீங்கள் உண்மையில் எவ்வளவு பயன்படுத்துகிறீர்கள் என்பது பற்றிய தகவல்களும் இதில் கணக்கிடப்படும்.

உங்களுக்குத் தேவையான விஷயங்களை அணுகுவதை உறுதிசெய்ய வேலை, குடும்பம் அல்லது உங்கள் நேரம் போன்ற வடிவமைக்கப்பட்ட முறைகளை நீங்கள் தேர்வு செய்யலாம். உங்கள் ஸ்மார்ட்போன் மற்றும் ஆப்களின் பயன்பாட்டின் பகுப்பாய்வுகளை கூறுவதன் மூலம் இது உங்கள் ஸ்மார்ட்போன் போதையை கட்டுப்படுத்த உதவுகிறது.

Offtime (iOS, Android) ஐ தரவிறக்கம் செய்ய இங்கே Android App / iOS App  அழுத்தவும்

2. Moment (iOS)

Moment உங்கள் ஸ்மார்ட்போன் பயன்பாட்டைக் கண்காணிக்கிறது மற்றும் தினசரி வரம்புகளை அமைக்க உங்களை அனுமதிக்கிறது. அவற்றை மீறினால் இது உடனடியாக உங்களுக்குத் தெரிவிக்கும். உங்கள் திரை நேரத்தை நீட்டிக்க முயற்சிக்கும்போது எரிச்சலூட்டும் எச்சரிக்கைகள் மூலம் உங்கள் ஸ்மார்ட்போன் பாவனையை நிறுத்த “கட்டாயப்படுத்தும்” ஒரு அமைப்பைப் பயன்படுத்தலாம். உங்கள் சொந்த ஸ்மார்ட்போனிலிருந்து உங்கள் குடும்பத்தின் அனைத்தது சாதனங்களின் பயன்பாட்டையும் கண்காணிப்பதற்கும் Moment ஐ பயன்படுத்தப்படலாம்.

Moment (iOS) ஐ தரவிறக்கம் செய்ய இங்கே iOS App  அழுத்தவும்

3. SPACE (iOS, Android)

இது போன்ற பல ஆப்களில் காணப்படும் பயன்பாட்டு கண்காணிப்பு அம்சங்களை SPACE ஒருங்கிணைக்கிறது. ஆனால் இந்த ஆப்-இன் முக்கியமான அம்சம் என்னவென்றால், இது தகவலை எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் நாம் எந்தெந்த ஆப்களை அதிகமாக பயன்படுத்துகிறோம் என்று மதிப்பெண் இடுவதாகும்.

உங்கள் தொலைபேசி திரையை நீங்கள் எத்தனை முறை திறக்கிறீர்கள் என்பதையும் இது காட்டுகிறது. மேலும், உங்கள் பயன்பாட்டை நாள் முழுவதும் விரிவாக பதிவு செய்கிறது. இலக்குகளை நிர்ணயிக்கவும், தங்களை சவால்களை செய்ய விரும்புபவர்களுக்கும் இந்த ஆப் ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது. ஒரு முரண்பாடான திருப்பம் என்னவென்றால், உங்கள் அடிமையாதல் மதிப்பெண்ணை நீங்கள் எவ்வளவு குறைவாகப் பெற முடியும் என்பதை அடிக்கடி பார்க்க முயற்சிப்பது கிட்டத்தட்ட ஒரு போதையாக மாறலாம்.

SPACE (iOS, Android) ஐ தரவிறக்கம் செய்ய இங்கே Android App / iOS App  அழுத்தவும்

4. Flipd (iOS, Android)

ஸ்மார்ட்போனுக்கு அடிமையாவதைத் தடுக்க உங்களுக்கு மிகவும் ஆக்ரோஷமான அணுகுமுறையொன்று தேவை என்றால், Flipd அதற்கான சரியான ஆப் ஆகும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு உங்கள் தொலைபேசியை லாக் செய்ய Flipd உங்களை அனுமதிக்கிறது. லாக் செய்த பின் குறிப்பிட்ட நேரத்திற்கு அதனை திறக்க முடியாது. உங்கள் ஸ்மார்ட்போனை மறுதொடக்கம் செய்தாலும் அந்நேரம் முடியும் வரை திறக்க முடியாது. எனவே, நீங்கள் இந்த ஆப்-ஐ ஏமாற்றுவது சாத்தியமில்லை! ஒரு பயனரின் சாதனத்தை மற்றொரு பயனரின் சாதனத்திலிருந்து தொலைவிலிருந்து லாக் செய்யவும் Flipd ஐ பயன்படுத்தப்படலாம்.

Flipd (iOS, Android) ஐ தரவிறக்கம் செய்ய இங்கே Android App / iOS App  அழுத்தவும்

5. AppDetox (Android)

எந்நேரமும் மொபைல் கேம்களில் நேரத்தை செலவழிக்கிறீர்களா? ட்விட்டரைப் புதுப்பிப்பதை நிறுத்த முடியவில்லையா? இவ்வகையான ஆப்கள் உங்கள் போதை என்றால், உங்கள் பாவனையைக் கட்டுக்குள் கொண்டுவர AppDetox உதவும்.

இந்த ஆப்-இன் மூலம் உங்கள் சொந்த அளவுருக்களை நீங்கள் அமைத்துக் கொள்ளலாம், எனவே ஒரு ஆப் தேவையான போது மட்டும் அதனை பயன்படுத்த இந்த ஆப் வழிவிடும். ஒவ்வொரு முறையும் உங்கள் சொந்த அமைப்புகளில் ஒன்றை மீறும்போது, உங்கள் ஸ்மார்ட்போனை கீழே வைக்க இந்த ஆப் நினைவூட்டுகிறது.

AppDetox (Android) ஐ தரவிறக்கம் செய்ய இங்கே Android App அழுத்தவும்

6. Stay on Task (Android)

இது உங்களுக்கு மென்மையான வழியில் உதவுகிறது. நீங்கள் வேலை நேரத்தில் உங்கள் போனை அதிக நேரம் பயன்படுத்தும் போது “உங்கள் பணி முடிந்ததா?” என்று மென்மையாக இந்த ஆப் கேட்கிறது. நீங்கள் எளிதில் திசைதிருப்பப்படக்கூடிய ஒருவர் என்றால், உங்கள் கவனத்தை உங்கள் பணியில் திருப்பிவிட இந்த ஆப் சிறந்த ஒரு வழியாகும்.

நீங்களும் ஸ்மார்ட்போனிற்கு அடிமையாகி இருக்கின்றீர்களா? உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து உங்களை விலக்க இவற்றை பயன்படுத்திப் பாருங்கள்.

Stay on Task (Android) ஐ தரவிறக்கம் செய்ய இங்கே Android App அழுத்தவும்