இணையம் பற்றிய 5 பிரமிக்க வைக்கும் உண்மைகள்! பாகம் – 2

நாம் இந்த பாகத்திலும் இணையத்தைப் பற்றிய பல ஆச்சரியமான தகவல்களைப் பார்ப்போம்.

1. ஒவ்வொரு மணி நேரத்திலும் 5000 டொமைன் (Domain) பெயர்கள் பதிவு செய்யப்படுகின்றன.

இதுவரை ஒரு நாளிற்கு என்று பார்த்தால் 120,000 டொமைன்களும், ஒரு வருடத்திற்கு 43 மில்லியன் டொமைன் பெயர்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அனால் அவற்றில் 75% க்கும் மேற்பட்ட வலைத்தளங்கள் தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளன அல்லது பூரணப்படுத்தப்படாதவையாக உள்ளன. இதனாலேயே உங்களுக்கு விருப்பமான டொமைன் பெயரைப் பெற முடியாததாக உள்ளது.

2. பேஸ்புக் 2.234 பில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ளது.

உலக மக்கள் தொகையில் ஏறக்குறைய 30 சதவிகிதமானோர் பேஸ்புக்கில் உள்ளனர். இந்த எண்ணிக்கை 2018 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 1.74 பில்லியன் பயனர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இணையத்தள பயனாளர்களில் சுமார் 50% பேர் பேஸ்புக்கில் இருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

3. உலகின் முதல் மின்னஞ்சல் 1971 இல் அனுப்பப்பட்டது.

மின்னஞ்சலை உருவாக்கிய ரே டாம்லின்சன் (அமெரிக்க புரோகிராமர்) என்பவராலேயே இந்த முதல் மின்னஞ்சல் அனுப்பப்பட்டது. “@” சின்னம் பயன்படுத்தப்பட்டதற்கு காரணம் இது ஒரு கணினியால் அல்லாமல் மனிதரால் அனுப்பப்பட்டது என்பதை உறுதிப்படுத்துவதற்கே ஆகும். எனினும், அவர் அனுப்பிய அந்த முதல் மின்னஞ்சல் அவர் நினைவில் இல்லை என்பது வருத்தமளிக்கிறது.

4. தினசரி 250 பில்லியன் மின்னஞ்சல்கள் அனுப்பப்படுகின்றன.

இல்லை, இந்த அதிர்ச்சி தரும் எண்ணிக்கை முழுவதும் மனிதர்களால் அனுப்பப்படுபவை அல்ல. ஆச்சரியமான உண்மை என்னவென்றால், அனைத்து மின்னஞ்சல்களிலும் 81% தானியங்கு வழிமுறையைப் பயன்படுத்தி அனுப்பப்படும் ஸ்பேம் (Spam) ஆகும். அதன்படி ஒவ்வொரு நாளும் 200 மில்லியனுக்கும் அதிகமான ஸ்பேம் மின்னஞ்சல்கள் அனுப்பப்படுகின்றன.

முதல் ஸ்பேம் மின்னஞ்சல் 1978 ஆம் ஆண்டில் அனுப்பப்பட்டது. இது டிஜிட்டல் எலக்ட்ரானிக் கார்ப்பரேஷன் எனும் நிறுவனத்தால் டி.இ.சி சிஸ்டம் 2020 என்ற அமைப்புக்கு வழங்கப்பட்ட ஒரு விளம்பரமாகும். இந்த மின்னஞ்சலில் 600 பெறுநர்கள் இருந்தனர், அனால் அவர்கள் எல்லோரும் அந்த மின்னஞ்சலை அதிருப்தியுடனே பெற்றனர். ஏனெனில் ஒரு விளம்பரத்தை மின்னஞ்சலாக பெற யாரும் விருப்பப்படுவதில்லை என்பதே காரணமாகும்.

5. உலகின் முதல் வலைத்தளம் இன்னும் செயல்பாட்டில் உள்ளது.

உலகில் முதன் முதலில் உருவாக்கப்பட்ட வலைத்தளம் info.cern.ch ஆகும். அது இன்றும் செயல்பாட்டில் உள்ளது. இது ஒரு அடிப்படை HTML எனப்படும் வலைத்தளங்களை உருவாக்க பயன்படும் மொழி தளத்தின் மூலம் அமைக்கப்பட்டது, மற்றும் இந்த வலைத்தளம் சில வரிகளைக் கொண்ட பக்கங்களைக் கொண்டுள்ளது. HTML முதல் பதிப்பின் உதவியுடன் இந்த வலைத்தளம் எழுதப்பட்டுள்ளது. முதல் பாகத்தை படிக்க இங்கே அழுத்தவும்.