இணையம் பற்றிய 5 பிரமிக்க வைக்கும் உண்மைகள்! பாகம் – 1

இன்று நீங்கள் பார்க்கும் இணையம் நீங்கள் கற்பனை செய்வதைவிட வேகமாக விரிவடைகிறது. இணையம் தொடங்கியதிலிருந்து வலைத்தளங்களின் எண்ணிக்கை கடுமையாக அதிகரிப்பதோடு இணையத்திலேயே தரவுகளை சேமிக்கும் தொழிநுட்பமும் வந்துவிட்டது.

கூகிள் வெளியிட்ட சமீபத்திய மதிப்பீடுகள் மற்றும் தகவல்கள் இணையத்தைப் பற்றி சில அதிர்ச்சி தரும் உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளன.

இணையம் முதன்முதலாக எப்படி துவங்கியது மற்றும் அதனுடைய தற்போதைய நிலை என்ன என்று பல விடயங்களை நாம் இங்கு பார்ப்போம்.

1. Google இன் கூற்றுப்படி, 2010 இல் இணையம் 5 மில்லியன் டெராபைட் (Terabyte) தரவு தகவலை கொண்டிருந்தது.

மிக ஆச்சரியமான உண்மை என்னவென்றால், இணையத்தில் உள்ள அனைத்து உள்ளடக்கத்திலும் வெறும் 0.004 சதவிகிதமான தகவலை மட்டுமே கூகிள் காட்டுவதாக கூகிள் நிறுவனமே கூறுகிறது.

அக்டோபர் 14, 2018 வரை, குறைந்தது 4.46 பில்லியன் பக்கங்கள் இணையத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு டெராபைட் என்பது 1024 GB ஆகும். இந்த எண்ணிக்கையை உங்களால் நம்ப முடிகிறதா!

2. அக்டோபர் 2018 வரை இணையத்தில் 1.9 பில்லியன் இணைய தளங்கள் உள்ளன.

மேலும், அக்டோபர் 14, 2018 ஆம் தேதி வரை இணையத்தில் 441 மில்லியன் Tumblr வலைப்பதிவுகள் உள்ளன எனவும் 75.8 மில்லியன் ப்லோக் (Blogs) மற்றும் வணிக தளங்கள் WordPress இல் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், 5 மில்லியனுக்கும் அதிகமான Blog Posts ஒவ்வொரு நாளும் வெளியிடப்படுகின்றன.

3. ஒவ்வொரு நாளும் Instagram இல் 95 மில்லியன் புகைப்படங்கள் பதிவேற்றப்படுகின்றன.

சோகமான விஷயம் என்னவென்றால் அவற்றில் 70% Instagram பதிவுகள் யாராலும் பார்க்கப்படுவதில்லை என்பதாகும்.

4. பூமியில் 7 பில்லியன் மக்களில் 4 பில்லியன்கள் ஏற்கனவே ஆன்லைனில் உள்ளனர்.

InternetLiveStats (ILS) இணையத்தின் செயலூக்க நிலையை கண்காணிக்கும் நிறுவனம், அக்டோபர் 2018 இல் இணையத்தில் 4,045,421,895 பயனர்கள் உள்ளனர், இது 2020 ஆம் ஆண்டளவில் இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பதாக கூறுகின்றது.

5. ஒவ்வொரு நாளும் 85,000 வலைத்தளங்கள் ஹேக் (Hack) செய்யப்படுகின்றன.

குறிப்பாக WordPress மற்றும் Joomla எனும் வலைத்தளங்களை உருவாக்க பயன்படும் அமைப்புக்களால் உருவாக்கப்பட்ட வலைத்தளங்களே மிகவும் பாதிக்கப்படுகின்றன. இரண்டாவது பாகத்தை படிக்க இங்கே அழுத்தவும்.