உங்கள் அறிவாற்றலை அதிகரிக்க 4 சிறந்த ஸ்மார்ட்போன் விளையாட்டுகள்

இன்று ஸ்மார்ட்போன்கள் இணையத்தில் உலாவவும், பார்க்கவும், பகிரவும், மட்டுமல்லாமல் நமது நுண்ணறிவு, கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றிற்கும் பங்களிக்கின்றன.

இவை ஒருபுறமிருக்க, நாம் இன்னும் சிறு பருவத்தைப் போலவே கேம்களால் ஈர்க்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். அது கம்ப்யூட்டர் கேம் ஆக இருக்கலாம் அல்லது மொபைல்போன் கேம்களாக கூட இருக்கலாம். ஒரு நாளில் சிறிது நேரம் விருப்பமான கேமை விளையாடுவது என்பது எமக்கு ஒரு மிகப்பெரிய மனநிறைவாக இருக்கும்.

Temple Run அல்லது Flappy Birds போன்ற புதிய விஷயங்கள் ஏதுமற்ற சில கேம்களை விளையாடி குற்ற உணர்ச்சியைப் பெறுவதற்குப் பதிலாக, உங்கள் மூளை சக்தியையும் அறிவாற்றலையும் மேம்படுத்த உதவும் பல வகையான கேம்களை அதே உற்சாகத்துடன் விளையாடலாம்.

உங்கள் கவனம் மற்றும் பதிலளிக்கும் நேரம் படிப்படியாக அதிகரிக்கவும் இவ்வகையான கேம்களுக்கும் ஒரு தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், இது போன்ற ஸ்மார்ட் கேம்கள் உங்களை விழித்திருக்கவும் சுறுசுறுப்பாகவும் இருக்க உதவுகின்றன. அவற்றில் சிலவற்றை நாம் இங்கு பார்ப்போம்.

1. Lumosity (லுமோஸிட்டி)

இந்த கேமின் வெளியீட்டாளர் கூறுவது என்னவென்றால் இந்த கேமிற்க்கு ஆயிரக்கணக்கான மகிழ்ச்சியான பயனர்கள் உள்ளனர். மேலும், அவர்கள் இந்த கேமின் மூலம் மேம்பட்ட நினைவகம், கவனச்சிதறலற்ற அறிவு மற்றும் மகிழ்ச்சியான மனநிலையை பெறுவதாக கூறியுள்ளனர்.

Lumosity கேமின் சிறந்த அம்சம் என்னவென்றால், அதனுள்ளேயே நிறைய மினி-கேம்கள் உள்ளன, எனவே நீங்கள் ஒருபோதும் சலிப்படைய மாட்டீர்கள். அனைத்து விளையாட்டுகளும் ஒப்பீட்டளவில் எளிமையானவையாக இருப்பதோடு நினைவகத் தக்கவைப்பு, வேகம் மற்றும் அடிப்படை சிக்கல் தீர்க்கும் மினி-கேம் வகைகளையும் உள்ளடக்குகின்றன. இதில் உங்கள் மதிப்பெண்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டு ஒப்பிட்டு பார்த்து கொள்ளலாம்.

Lumosity (லுமோஸிட்டி) ஐ தரவிறக்கம் செய்ய இங்கே Android App / iOS App அழுத்தவும். இன்றே முயற்சித்து பார்க்கலாமே!

2. Mensa Brain Test (மென்ஸா பிரைன் டெஸ்ட்)

மென்சா என்பது நம்மிடையே புத்திசாலித்தனமான நபர்களைச் சோதிக்கும் ஒரு முன்னணி அமைப்பாகும், மேலும் இதில் வெற்றி பெறுபவர்களின் ஒரு தனி அமைப்பொன்று காணப்படுகிறது. இப்போது அதனை நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போன் மூலமே சோதித்துப் பார்த்துக் கொள்ளலாம்.

முதலில் உலகளாவிய அதிக மதிப்பெண்களுடன் உங்களை ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டு பின் அதற்கான பயிற்சி முறைகளையும் கற்றுக் கொள்ளலாம். இதில் ஒரு கஷ்டமான பகுதி என்றால் 60 நிமிடங்களில் 60 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்ற பகுதி. இதனை விளையாட உங்கள் அதிகப்படியான கவனம் தேவை.

Mensa Brain Test (மென்ஸா) ஐ தரவிறக்கம் செய்ய இங்கே Android App / iOS App அழுத்தவும்.

3. Elevate – Brain Training ( எழவேட் பிரைன் ட்ரைனிங்)

இந்த புதிய கேமில் சுமார் 29 மினி கேம்கள் உள்ளன. அவை மொழிப் புலமை, நினைவக தக்கவைப்பு, கவனம் மற்றும் விரைவான செயல்பாட்டுத் திறனை சோதிக்க பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

நீங்கள் இந்த கேமை விளையாடும்போது ஒவ்வொரு நிலைகள் முன்னேறும்போதும் அடுத்த நிலையின் கடினத்தன்மை அதிகரிக்கப்படுகின்றது. இந்த கேம்கள் உங்களை கவர்ந்திழும் வகையிலும் இருக்கின்றன. மேலும் ஒவ்வொரு மினி கேமையும் மிகக் குறுகிய நேரத்திலேயே முடிக்கலாம்.

Elevate – Brain Training (எழவேட்) ஐ தரவிறக்கம் செய்ய இங்கே Android App / iOS App அழுத்தவும்

4. Peak ( பீக் )

இந்த கேமின் ஒரு சிறந்த அம்சம், நீங்கள் ஒரு சில கேம்களை விளையாடியவுடனேயே உங்கள் மதிப்பெண்கள் சுருக்கமாக வழங்கப்படும். இது வரைபடம் மற்றும் பை (Pie) விளக்கப்படத்தில் காட்டப்படும். உங்கள் சராசரி நினைவக மதிப்பெண், மன சுறுசுறுப்பு, சிக்கலைத் தீர்ப்பது, மொழி, கவனம் மற்றும் உச்ச மூளை மதிப்பெண் ஆகியவற்றை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். உங்கள் மூளையின் தினசரி பயிற்சிக்காக எளிதில் விளையாடக் கூடியவாறு இந்த கேம் அமைக்கப்பட்டுள்ளது.

Peak (பீக்) ஐ தரவிறக்கம் செய்ய இங்கே Android App / iOS App அழுத்தவும்

இன்றே இந்த கேம்களை முயற்சி செய்து பார்த்து உங்கள் அறிவாற்றலைக் கூட்டிக் கொள்ளுங்கள்!