தமிழ் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 6 சுவாரஸ்யமான உண்மைகள்!

தமிழ் மொழி எப்பொழுதும் தனிச்சிறப்பு வாய்ந்தது என்பது யாராலும் மறுக்க முடியாத ஒரு உண்மையாகும். ஆனால் இதற்கான பலவிதமான காரணங்களை நாம் இங்கு சுட்டிக்காட்டினால் நல்லது. தமிழின் வளமான கலாச்சார வரலாற்றிலிருந்து, அதன் சுலபமான பயன்பாடு, மற்றும் உலகெங்கிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுவது வரை, தமிழ் பல முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளது.

எமது தாய்மொழியான தமிழ் குறித்த சில சுவாரஸ்யமான உண்மைகள் இதோ!

1. உலகின் மிகப் பழமையான மொழி தமிழ்!

தமிழ் மொழி இன்னும் பரந்த பயன்பாட்டில் உள்ளது என்ற உண்மை ஆச்சரியமாக இருக்கிறது. கி.மு. 500க்கு முந்தைய தமிழ்-பிராமண கல்வெட்டுகள் தமிழ்நாட்டின் தொல்பொருள் தளமான அடிச்சனல்லூரில் காணப்படுவதால் இது கி.மு. 500க்கு முன்னர் பிறந்ததாக கருதப்படுகிறது. உலகின் பழமையான மொழிகள் என பல காணப்படுகின்றன. ஆனால், இக்காலத்திலும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் பழமையான மொழி தமிழ் ஆகும்.

2. தமிழை யுனெஸ்கோ (UNESCO) ஒரு பாரம்பரிய மொழியாக அறிவித்துள்ளது!

2004 ஆம் ஆண்டில், யுனெஸ்கோ நிறுவனத்தின் அமைச்சரவை பாரம்பரிய மொழிகள் எனப்படும் ஒரு புதிய வகையை உருவாக்கியது. அவை சில அளவுகோல்களை அடிப்படையாகக் கொண்டவை. இதில் முதன்முதலில் சேர்க்கப்பட்ட மொழி தமிழ் ஆகும். அந்த அளவுகோல்களில் சிலவற்றை இங்கு பார்ப்போம். குறிப்பிட்ட மொழி பழங்காலத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். அந்த மொழி செல்வாக்கான மற்றும் முற்றிலும் மாறுபட்ட பண்டைய சொற்கள் மற்றும் தனிப்பட்ட இலக்கிய பாரம்பரியம் ஆகியவற்றை கொண்டிருக்க வேண்டும். இதனடிப்படையிலேயே முதன்முதலாக தமிழ்மொழி தெரிவு செய்யப்பட்டது.

3. ‘தமிழ்’ என்ற சொல்லுக்கு பல அர்த்தங்கள் உள்ளன!

ஆம், நமது தமிழில் ஒரு சொல்லுக்கு பல அர்த்தங்கள் இருப்பதைப்போல மொழியின் பெயராக இருப்பதைத் தவிர, ‘தமிழ்’ என்பது அழகு, இனிப்பு மற்றும் இயற்கை போன்றவற்றையும் குறிக்கிறது.

4. ஒரு கடவுளாக உருவகப்படுத்தப்பட்டுள்ள ஒரே மொழி தமிழ்!

தமிழ் நாட்டில் காரைகுடியில் அமைந்துள்ளது ‘தமிழ் தாய்’ என்ற தமிழ் மொழியை கடவுளாக வர்ணிக்கும் கோயில். தமிழை கடவுளாக வழிபடும் இந்த கோயிலில் அது ஒரு தாயாகவும் கருதப்படுகிறது.

5. தமிழ் மூன்று நாடுகளின் அதிகாரப்பூர்வ மொழி!

இந்தியாவில் தமிழ்நாடு மட்டுமல்லாமல் தென்னிந்திய மாநிலங்களான, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மற்றும் தெலுங்கானா மற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் யூனியன் பிரதேசங்களில் குறிப்பிடத்தக்க சிறுபான்மையினரால் தமிழ் பேசப்படுகிறது. இது இந்தியாவின் 22 திட்டமிடப்பட்ட மொழிகளில் ஒன்றாகும்.

இந்தியா, இலங்கை, மற்றும் சிங்கப்பூர் ஆகிய மூன்று நாடுகளின் உத்தியோகபூர்வ மொழியாக தமிழ் உள்ளது. இது இந்திய மாநிலமான தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் அதிகாரப்பூர்வ மொழியாகும். இது ஆங்கிலம், மலாய் மற்றும் மாண்டரின் ஆகியவற்றுடன் மலேசியாவில் கல்வி மொழிகளில் ஒன்றாகப் பயன்படுத்தப்படுகிறது.

மலேசியாவில் 543 அரசு பள்ளிகளில் ஆரம்பக் கல்வியாக முழுமையாக தமிழ் மொழியில்
கற்பிக்கப்படுகின்றன.

6. அச்சிடப்பட்டு வெளியிடப்பட்ட முதல் இந்திய மொழி தமிழ்!

1578 ஆம் ஆண்டில், போர்த்துகீசிய கிறிஸ்தவ மிஷனரிகள் தமிழ் பிரார்த்தனை புத்தகத்தை பழைய தமிழ் எழுத்துக்களில் “தம்பிரான் வனக்கம்” என்ற பெயரில் வெளியிட்டனர். இதுவே இந்தியாவில் முதன் முதலில் ஒரு மொழி அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டதாகும்.

மெட்ராஸ் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட தமிழ் அகராதி, இந்திய மொழிகளில் வெளியிடப்பட்ட ஆரம்ப அகராதிகளில் ஒன்றாகும். 2001 ஆம் ஆண்டு ஒரு கணக்கெடுப்பின்படி, 1,863 செய்தித்தாள்கள் தமிழில் வெளியிடப்பட்டன, அவற்றில் 353 நாளிதழ்கள் ஆகும்.

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா!