உலக வரலாற்றின் மிகப்பெரிய மர்மங்கள் பாகம்-1

எமது உலகத்தின் மிகப் பெரிய மர்மங்களில் சில ஒருபோதும் தீர்க்கப்படாது. சிலர் அவற்றின் தீர்வுகளை மறைத்து வைத்து யாராவது அவற்றைக் கண்டுபிடிப்பதற்காக பொறுமையாக காத்திருக்கிறார்கள். எல்லா காலத்திலும் காணப்பட்ட இது போன்ற மிகப் பெரிய மற்றும் மிகவும் குழப்பமான வரலாற்று மர்மங்களைப் பற்றி நாம் இங்கு பார்ப்போம்.

1. எகிப்தின் ஸ்பிங்க்ஸ் சிலை!

பண்டைய உலகில் இருந்து இன்று வரை தப்பிய மிகப் பெரிய சிலை, கிசாவின் ஸ்பிங்க்ஸ் ஆகும். இது பல ஆண்டுகளாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. ஸ்பிங்க்ஸ் சிலை 1905 இல் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு முன்பு, அது மணலில் மூடப்பட்டிருந்தது. அதனால் அதை உருவாக்கியவர்கள் இச்சிலைக்கு முதன் முதலில் என்ன பெயரிட்டனர் என்ற இதுவரை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

2. பிரான்ஸின் இரவு நடனம்!

1518 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், ஃப்ரா ட்ரொஃபியா என்ற பெண் பிரான்ஸில் ஒரு குறுகிய தெருவில் திடீரென நடனமாடத் தொடங்கினார். இந்த நடனம் காய்ச்சல் போல அவளை பல நாட்கள் பிடித்து, பின்னர் மற்றவர்களைப் பிடிக்கத் தொடங்கியது. அடுத்த மாதத்தில் சுமார் 400 பேர் இவ்வாறு நடனமாடத் தொடங்கியள்ளனர். இந்த நோய் “நடனமாடும் பிளேக்” என்று அழைக்கப்பட்டது. சில நாட்களில் இந்நோய் தீவிரமடைந்து மக்கள் சோர்வினால் சரிந்து அல்லது மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தால் இறக்கத் தொடங்கும் வரை இது முற்றிலும் கொடூரமானதாக இருந்தது. இது செப்டம்பர் மாதம் வரை நீடித்தது. இதில் எஞ்சிய சிலரை கடைசியில் ஒரு மலையடிவார சன்னதிக்கு பிரார்த்தனைக்காக அழைத்துச் செல்லப்பட்டது.

3. உலகம் சுற்றிய பெண்!

1937 ஆம் ஆண்டு ஜூலை உலகத்தை சுற்றிவரும் முயற்சியின் போது, அமெரிக்க விமானி அமெலியா ஏர்ஹார்ட் பசிபிக் பெருங்கடலில் காணாமல் போனார். அவரின் எச்சங்கள் ஒருபோதும் கண்டுபிடிக்கப்படவில்லை. அவர் காணாமல் போனது 20 ஆம் நூற்றாண்டின் தீர்க்கப்படாத மர்மங்களில் ஒன்றாகும். அவர் காணாமல் போவதற்கு முன்பு, 14,000 அடிக்கு மேல் தனியாக பறந்த முதல் பெண்மணி மற்றும் அட்லாண்டிக் கடலின் குறுக்கே தனியாக பறந்த முதல் பெண்மணி என்ற பட்டங்களைப் பெற்றிருந்தார்.

4. விசித்திர ஆவணம்!

மத்திய ஐரோப்பாவில் 15 அல்லது 16 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இந்த மர்மமான ஆவணம் விசித்திரமான தாவரங்கள், ஜோதிட விளக்கப்படங்கள், மற்றும் நிர்வாண பெண்கள் ஒருவித பச்சை திரவத்தில் குளிப்பதைப் போன்ற தகவல்களை விளக்கியுள்ளது. அதன் சுருக்கம் ஒரு விவரிக்க முடியாத மொழியில் எழுதப்பட்டுள்ளது. இதனை வரலாற்றாசிரியர்களாலும் குறியாக்கவியலாளர்களாலும் இன்றுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. கையெழுத்துப் பிரதியை ஆய்வு செய்த ஆய்வாளர்கள் இது பெண்களின் சுகாதார கையேடு என்று கூறினார். ஆனால் இந்த கூற்று எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

5. மேரி செலஸ்டே கப்பல்!

நவம்பர் 7, 1872 இல், கேப்டன் பெஞ்சமின் பிரிக்ஸ், அவரது மனைவி, இளம் மகள் மற்றும் எட்டு பேர் கொண்ட குழுவினருடன் நியூயார்க்கில் இருந்து மேரி செலஸ்டே எனும் கப்பலில் சுற்றுப் பயணமொன்றுக்கு புறப்பட்டனர். அவர்களை யாரும் மீண்டும் ஒருபோதும் காணவில்லை. டிசம்பர் 1872 இல், இந்த கப்பல் யாருமில்லாமல் கடலின் நடுவில் மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டது. காணாமல் போன லைஃப் படகு மற்றும் திசைகாட்டிகள் தவிர கப்பல் எந்த சேதத்தையும் சந்தித்திருக்கவில்லை. மேலும், உணவு மற்றும் பொருட்களும் எவ்வித சேதமுமின்றி காணப்பட்டது. இந்த கப்பலில் என்ன நடந்தது என்று இதுவரை யாருக்குமே தெரியாது.

அடுத்த பாகத்திலும் நாம் இது போன்ற விசித்திரமான சுவாரஸ்யமான தகவல்களைப் பார்ப்போம்.