கோடை இரவு வெப்பத்தை தணிக்க 5 எளிய வழிகள் பாகம்-1

வெப்பமான மாதங்களில் எந்நேரமும் விசிறிக்கு முன்னாலேயே இருக்கத் தோன்றுகிறது. ஆனால் குளிர்ச்சியாக இருப்பதற்கான ஒரே வழி இது மட்டுமல்ல. உங்கள் மின்சார கட்டணத்தை உயர்த்தாமல் இந்த அதீத வெப்பத்தைத் தணிக்க ஏராளமான வழிகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை இன்று நாம் பார்ப்போம்.

1. பருத்தித் துணியைத் தேர்வு செய்யுங்கள்.

சாடின், பட்டு அல்லது பாலியஸ்டர் போர்வைகளை குளிரான இரவுகளில் மட்டும் பாவிக்கவும். இலகுரக பருத்தியால் (எகிப்திய அல்லது வேறு) செய்யப்பட்ட வெளிர் வண்ண படுக்கை துணிமணிகள் படுக்கையறையில் காற்றோட்டத்தை மேம்படுத்துவதற்கு சிறந்தவை.

2. உங்கள் போர்வைகளை குளிர்வியுங்கள்.

படுக்கைக்கு முன் சில நிமிடங்கள் குளிர்சாதன பெட்டியில் உங்கள் போர்வைகளை வைக்கவும். அவற்றை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு வைக்க பரிந்துரைக்கிறோம். இது இரவு முழுவதும் உங்களை குளிர்ச்சியாக வைத்திருக்காது என்பது உண்மைதான், ஆனால் ஒரு குறுகிய காலத்திற்கு வெப்பம் மற்றும் ஈரப்பதத்தை வழங்கும்.

3. மின்விசிறியை சரியான முறையில் பயன்படுத்துங்கள்.

மின்விசிறிகள் வெதுவெதுப்பான காற்றை மட்டுமே அறையினுள் சுழற்றிக் கொண்டிருக்கின்றது என்று நீங்கள் நினைத்திருந்தால், மீண்டும் சிந்தியுங்கள்! ஒரு மேசை மின்விசிறியை ஜன்னல் அருகில் வைப்பதன் மூலம் அது சூடான காற்றை வெளியே தள்ளும். அதன் பின் சீலிங் (Ceiling) மின்விசிறியின் அமைப்புகளை சரி செய்து சுழல விடுங்கள். இதனால் சூடான காற்று அறையைச் சுற்றி சுழல்வதற்குப் பதிலாக மேலே இழுக்கப்படும் வெப்பக் காற்று மேசை மின்விசிறியின் மூலம் வெளியே இழுக்கப்படுகின்றது.

4. ஒளி விளக்குகளை அணைக்கவும்.

ஒளி விளக்குகள் (சுற்றுச்சூழலுக்கு உகந்த சி.எஃப்.எல் கூட) வெப்பத்தைத் வெளியேற்றுகின்றன. இயற்கையான ஒளியை முடிந்தவரை பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஒளி விளக்குகளை மிகக் குறைவாக பயன்படுத்துவதன் மூலம் இருட்டிற்குப் பிறகு அறைகளை குளிர்ச்சியாக வைத்திருக்க முடியும்.

5. பனிக்கட்டியைப் பயன்படுத்துங்கள்.

பல ஆண்டுகளுக்கு முன்பு ஏர் கண்டிஷனிங் (A/C) இல்லாதபோது மக்கள் பயன்படுத்திய பழைய ஒரு தந்திரம் இது. முதலில் ஒரு பெரிய கிண்ணத்தில் பனிக்கட்டிகளை போட்டு எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அந்த கிண்ணத்தை மின்விசிறியின் காற்று முழுவதும் வீசும் இடத்தில் வைத்து விடுங்கள். இது குளிர்ந்த காற்றை உருவாக்கும் போது அறை மிக விரைவாக குளிர்வடைகின்றது.

கோடை காலம் முடியும் வரை இது போன்ற சில எளிய முறைகளை பயன்படுத்தி உடல் வெப்பத்தையும் அறை வெப்பத்தையும் தணித்துக் கொள்ளுங்கள். இதே போன்று அடுத்த பாகத்திலும் இன்னும் சில எளிய வழிமுறைகளை வழங்குகின்றோம்