5G தொழிநுட்பம் என்றால் என்ன? மக்கள் ஏன் இதைப் பற்றி பயப்படுகிறார்கள்?

இந்த ஆண்டின் தொடக்கத்தில் பெல்ஜிய அரசாங்கம் கதிர்வீச்சு தொடர்பான 5G தொழிநுட்பத்தை சோதனை செய்வதை நிறுத்தியது. 5G நெட்வர்க்கால் ஏற்படும் அபாயங்களை சுவிட்சர்லாந்து அரசு கண்காணித்து வருகிறது. 5G மேம்படுத்தலின் “திட்டமிடப்படாத விளைவுகள்” குறித்து இங்கிலாந்து ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் உறுப்பினர் பாராளுமன்றத்தை எச்சரித்தார்.

தற்போது 5G பற்றிய அச்சங்கள் பிரதானமாகிவிட்டன. ஆனால் அதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை.

இந்த அச்சங்களுக்குப் பின்னால் உள்ள கூற்றுக்களை ஆழமாகப் பார்த்தால், சில உண்மையான கோட்பாடுகளை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள். 5G இன் அலைநீளமானது ஆயுதங்கள் உபயோகிக்கும் அதே அலைநீளங்களில் இருப்பதாக சிலர் கூறுகின்றனர் அல்லது எதிரிகளின் திட்டங்களை உடைக்க அந்த அலைநீளங்கள் இராணுவத்தால் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகின்றது.

ஒவ்வொரு புதிய தலைமுறை மொபைல் போன் உள்கட்டமைப்பிலும் பயன்படுத்தப்படும் சிறிய அலைநீளங்கள் ஒருபோதும் சோதிக்கப்படவில்லை என்று மக்கள் வாதிட்டனர், 5G தொழிநுட்பத்தை சோதனை செய்யும்போது நாங்கள் ஆய்வுகூட எலிகளாக பயன்படுத்தப்படுவதைப் போல உணர்கின்றோம் என்று கூறுகின்றனர்.

அந்தக் கூற்றுக்கள் எதுவும் உண்மை இல்லை என்பதை அறிந்தால் நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள்.

“5G பயன்படுத்தும் அலைநீளங்கள் அனைத்தும் முற்றிலும் பாதுகாப்பானவை மற்றும் அவை பல தசாப்தங்களாக ஆராய்ச்சி மற்றும் சோதனைகளில் உள்ளன” என்று இங்கிலாந்தின் மொபைல் நெட்வொர்க் வழங்குநரான EE இன் தொழில்நுட்ப தகவல்தொடர்புத் தலைவர் ஹோவர்ட் ஜோன்ஸ் சமீபத்தில் விளக்கினார்.

ஒரு தொலைபேசி நெட்வொர்க்கின் உண்மையான தொழில்நுட்பத்தின் சுருக்கமான பார்வை இங்கே.

உங்கள் தொலைபேசியைப் பயன்படுத்தும்போது, அது அருகிலுள்ள தொலைபேசி கோபுரத்துடன் ரேடியோ அலைகள் வழியாக தொடர்பு கொள்கிறது. தொலைபேசி கோபுரம் பின்னர் ஒரு முக்கிய நெட்வொர்க்குடன் (ரேடியோ அலைகள் வழியாகவும்) இணைகிறது, பின்னர் அது பெறும் தகவல்களை அனுப்பி தகவல்களை திருப்பி அனுப்புகிறது.

தற்போது, உங்கள் தொலைபேசி 4G ஐப் பயன்படுத்தினால், அது பயன்படுத்தும் ரேடியோ அலைகளின் அதிர்வெண் 2 – 8 GHz அளவிலேயே எங்கும் இருக்கும். இது 3G இல் 1.8 – 2.5 GHz ஆக காணப்படும் (இது உங்கள் பகுதியைப் பொறுத்து சற்று வித்தியாசமாக இருக்கலாம்).

அதிக அதிர்வெண்களைப் பயன்படுத்துவது நன்மைகள் மற்றும் தீமைகள் இரண்டையும் கொண்டுள்ளது. ரேடியோ அலையின் அதிக அதிர்வெண், குறுகிய அலைகளாகும். ஒலி அலைகளைப் போலவே, குறுகிய அலைகள் நகரும் போது ஆற்றலை வேகமாக இழக்கின்றன, எனவே அவை குறைந்த தூரத்தில் மறைந்துவிடும்.

குறுகிய அலைகள் ஒரு தொலைபேசி கோபுரத்துடன் ஒரே நேரத்தில் இன்னும் பல சாதனங்களை இணைக்க முடியும் என்பதை குறிக்கிறது. 5G நெட்வொர்க் இணைப்பு அந்த அதிர்வெண்களுக்கு வேகத்தை வழங்குகிறது, இது தற்போது கிடைப்பதை விட கணிசமாக அதிகமாக இருக்கும்.

5G பற்றி மக்கள் மிகவும் கவலைப்படுவதற்கான ஒரு காரணம் என்னவென்றால், புதிய நெட்வொர்க் 300 GHz வரை அதிர்வெண்களை ஆதரிக்க முடியும் என்பதாகும். அவற்றின் பெரிய ஆற்றலுடன் கூடிய குறுகிய அலைகள் ஆபத்தானதாகத் தோன்றலாம், ஆனால் இந்த கவலைகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை.

“அதிக அதிர்வெண் என்பது அதிக தீவிரத்தை குறிக்காது” என்று ஆஸ்திரேலியாவின் ஸ்வின்பேர்ன் பல்கலைக்கழகத்தின் மின்காந்த உயிர் விளைவு ஆராய்ச்சியாளர் ஆண்ட்ரூ வுட் கூறினார்.

“5G இன் 26 GHz ரேடியோ அலை, மூளை திசுக்களுக்குள் செல்வதை விட தோலின் வெளிப்புற அடுக்குகளில் உறிஞ்சப்படுகிறது. சருமத்தில் நரம்பு முனைகள் உள்ளன, அவை எந்தவொரு வெளிப்பாட்டையும் எச்சரிக்கும்.” எனக் கூறும் வூட், தனது ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக, மேம்பட்ட கணினி மாடலிங் ஐப் பயன்படுத்தி தோலின் பல்வேறு பகுதிகளில் ரேடியோ அதிர்வெண் உறிஞ்சப்படுவதைக் கணிக்கிறார்.

எனவே, மக்கள் ஏன் பயப்படுகிறார்கள்? மின்காந்த கதிர்வீச்சின் பயம் ஒன்றும் புதிதல்ல; மிகவும் எளிமையான விளக்கம் என்னவென்றால், 5G தொழிநுட்பத்தை வெளியிடுவது பற்றிய வாக்குறுதி பல தசாப்தங்களாக மக்கள் மத்தியில் இருந்து வருகிறது.

“தொலைபேசிகளின் பரவலானது 80 களின் முற்பகுதியில் ஆஸ்திரேலிய மக்கள்தொகையில் பூஜ்ஜியத்திலிருந்து 90 சதவிகிதத்திற்கும் அதிகமாகிவிட்டது. ஆனால் இதனால் மூளை புற்றுநோய் விகிதங்களில் கணிசமான மாற்றம் எதுவும் இல்லை.” என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

எனவே மக்கள் இது பற்றிய அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.