SLS-ஐ சோப்பு மற்றும் பற்பசையில் பயன்படுத்துவதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? பாகம் – 2

நாம் கடந்த பாகத்தில் பார்த்ததைப் போலவே இந்த பாகத்திலும் SLS-ஐப் பற்றிய சில விடயங்களைப் பார்ப்போம்.

SLS ஏன் அனுமதிக்கப்பட்டுள்ளது?

இது மனித சருமத்திற்கு எரிச்சலூட்டுவதாக தெரிந்தால், ஒழுங்குமுறை அதிகாரிகள் அதன் பயன்பாட்டை ஏன் தடை செய்யக்கூடாது?

SLS ஆபத்தானதாகக் கருதப்படுவதற்கு, அது நீண்ட காலத்திற்கு தோலுடன் தொடர்பு கொள்ள வேண்டும். பொதுவாக, SLS கொண்டிருக்கும் சில நுகர்வோர் தயாரிப்புகள் நீண்ட காலமாக தோலில் தங்காது என்பதால் அவற்றினால் உங்கள் தோல் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு.

எனவே அதிகாரிகள் அதன் பயன்பாட்டை தடை செய்யாமல், மாறாக தயாரிப்புகளில் பயன்படுத்தக்கூடிய அதிகபட்ச சதவீதத்தை நிர்ணயித்தனர்.

அனைத்து நுகர்வோர் மற்றும் ஒப்பனை தயாரிப்பு உற்பத்தியாளர்கள் முழுமையான சோதனையை நடத்த வேண்டும் மற்றும் எந்தவொரு எதிர்மறை விளைவுகளையும் தங்கள் லேபிள்களில் எச்சரிக்கைகள் வடிவில் சேர்க்க வேண்டும்.

எனவே SLS கொண்ட தயாரிப்புகளில், “இந்த தயாரிப்பு தோல் சிவத்தல் அல்லது எரிச்சலை ஏற்படுத்தினால், பயன்பாட்டை நிறுத்திவிட்டு ஒரு மருத்துவ பயிற்சியாளரை அணுகவும்” போன்ற ஒன்றை நீங்கள் காண முடியும்.

SLS-ஐ யார் தவிர்க்க வேண்டும்?

மிகவும் மென்மையான தோல் உடையவர்கள், இலகுவாக அழற்சி அல்லது ஒவ்வாமை ஏற்படும் சருமம் கொண்டவர் மற்றும் அரிக்கும் தோலழற்சி, ரோசாசியா மற்றும் தடிப்புத் தோல் அழற்சி போன்ற தோல் நிலைமைகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் SLS கொண்ட தயாரிப்புகளை தவிர்ப்பது நல்லது.

ஒரு தயாரிப்பில் SLS உள்ளதா என குறிப்பிடப்படாமல் இருந்தால் லேபிளில் கொழுப்பு ஆல்கஹால் எதொக்சைலேட், அல்கைல் பினோல் எதொக்சைலேட் அல்லது கொழுப்பு அமிலம் அல்கோக்ஸைலேட் என்பவற்றில் ஒன்று உள்ளதா எனப் பாருங்கள்.

ஒரு தயாரிப்பை பயன்படுத்தும் போது தோல் எரிச்சல் ஏற்பட்டு அதற்கு காரணம் SLS என்று நீங்கள் சந்தேகித்தால், உடனே அதன் பயன்பாட்டை நிறுத்தி வைத்தியரை நாடவும்.

தோல் பராமரிப்பு தயாரிப்புகளின் பெட்டியில் காணப்படும் துரித அழைப்புக்கான எண்களைத் தொடர்பு கொண்டு எதிர்மறை விளைவுகளைப் புகாரளிக்கலாம்.