இன்ஸ்டாகிராமில் நீங்கள் பின்பற்ற வேண்டிய 5 சுவாரஸ்யமான அறிவியல் கணக்குகள்

இன்ஸ்டாகிராமில் பல அறிவியல் கணக்குகள் உள்ளன. அவற்றில் அணுசக்தி ஆராய்ச்சிக்கான ஐரோப்பிய அமைப்பின் (CERN) சமூக ஊடகக் குழு பல அற்புதமான விடயங்களை எமக்கு எந்நாளும் தருகின்றது. CERN இன் இன்ஸ்டாகிராம் கணக்கு எவ்வளவு அற்புதமானது என்பதை இப்போது பலரும் கண்டுபிடித்துள்ளனர்.

ஆனால், CERN கணக்கு மட்டும் எல்லா அறிவியல் உண்மைகளையும் தந்து விடவில்லை. உங்கள் இன்ஸ்டாகிராம் தளத்தைக் கொண்டு நீங்கள் தொலைதூர இடம் முதல் மைக்ரோஸ்கோபிக் அளவு வரையான அனைத்து அறிவியலையும் பற்றி தெரிந்து கொள்ள விரும்பினால், அதற்கு நாம் சில தகுதியான கணக்குகளை இங்கு அறியத் தருகிறோம்.

1. The Monterey Bay Aquarium

கடல் வாழ்க்கை, கடலைப் பற்றிய சுவாரஸ்யமான கதைகள் மற்றும் நீங்கள் எப்போதும் பார்த்து ரசிக்கக்கூடிய அனைத்து கடல் வாழ் உயிரினங்களையும் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியென்றால் நீங்கள் மான்டேரி பே அக்வாரியம் கணக்கை பின்தொடரவும்.

இந்த நீர்வாழ் காட்சிசாலை கலிபோர்னியாவில் அமைந்துள்ளது. மேலும், உள்ளூர் கடல் சார்ந்த அமைப்புக்களுடனும் சில அற்புதமான வேலைகளை செய்கிறது. அத்துடன், நீர்நாய்கள், பறவைகள் மற்றும் மீன்களின் சர்வதேச பாதுகாப்பு முயற்சிகளுக்கு பங்களிக்கிறது. இவர்கள், சிறந்த நிலையான கடல் உணவு ஆலோசனை பட்டியல்களில் ஒன்றான கடல் உணவு கண்காணிப்பு எனப்படும் பட்டியலொன்றையும் தயாரித்துள்ளனர்.

2. Nikon Instruments

இந்த இன்ஸ்டாகிராம் கணக்கில் குறைவான பின்தொடர்பவர்களே உள்ளனர், ஆனால் இது அனைவரையும் கவர்ந்திழுக்கும் வகையில் காணப்படுகிறது. நிகோன் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் என்ற கணக்கு நிகோனின் நுண்ணோக்கி பிரிவு, மற்றும் நிகான் ஸ்மால் வேர்ல்ட் புகைப்படம் எடுத்தல் போட்டியின் பின்னணியில் உள்ளவர்களால் எடுக்கப்பட்ட புகைப்படங்களைக் கொண்டுள்ளது.

நீங்கள் நுண்ணோக்கியை விரும்பினால், இந்த கணக்கை விரும்புவீர்கள். சிறிய வகையான பூச்சிகள் முதல் மூளை இழைகளின் வண்ணமயமான படங்கள் வரை, நிகான் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் நாம் காண முடியாத உலகின் சிறந்தவற்றை ஒன்றாகக் கொண்டுவருகிறது.

3. NASA

நாசா தனது வேலையைத் தொடர்புகொள்வதில் மிகவும் சிறந்தது. விண்வெளி வீரர்கள், ரோபோக்கள், செயற்கைக்கோள்கள், அவதானிப்புகள் போன்ற வகைகளில் ஒவ்வொன்றும் பொருந்தக்கூடிய சிறந்த இன்ஸ்டாகிராம் கணக்குகளை நாசா கொண்டுள்ளது.

விண்வெளியின் நம்பமுடியாத எக்ஸ்ரே படங்கள் வேண்டுமா? நாசாவின் சந்திரா எக்ஸ்ரே ஆய்வகத்தின் கணக்கை பின்தொடருங்கள்.

நமது காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் பற்றிய படங்கள் மற்றும் செய்திகளைத் தெரிந்து கொள்ள வேண்டுமா? நாசா பூமி ஆய்வகத்தின் கணக்கை முயற்சித்துப் பாருங்கள்.

கென்னடி விண்வெளி மையம், கோடார்ட் விண்வெளி விமான மையம், ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகம் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக சர்வதேச விண்வெளி நிலையம் போன்றவற்றின் இன்ஸ்டாகிராம் கணக்குகளும் உள்ளன. இந்த கணக்குகளை நாசா மட்டுமல்லாமல் பல ஏஜென்சிகளும் ஒன்றிணைந்து செயற்படுத்துகின்றன.

4. ZooBorns

நாம் ஒரு சில விலங்குகளை மட்டும் காட்டுவதற்காக இந்த கணக்கை கூறவில்லை. உலகின் மிகச் சிறந்த உயிரியல் பூங்காக்களிலிருக்கும் விலங்குகளின் குட்டிகளைப் பற்றி பேசுகிறோம்!

ஜூபோர்ன்ஸ், 2008 முதல் ஒரு வலைப்பதிவாக இருந்து வருகிறது. ஆனால், சமீபத்தில் அவர்களின் இன்ஸ்டாகிராம் கணக்கு விலங்குகளின் அழகான குட்டிகளின் புகைப்படங்களை பதிவேற்றம் செய்வதன் மூலம் பிரபலமாகி வருகிறது.

அங்கீகாரம் பெற்ற உயிரியல் பூங்காக்கள் மற்றும் மீன்வளங்களுக்கான பிறப்புகளை அறிவிப்பதில் பெருமைப்படுகிறார்கள். அவர்கள் பெரும்பாலும் விஞ்ஞானிகளுடன் இணைந்து அச்சுறுத்தலை எதிர்நோக்கும் உயிரினங்களுக்கு உதவுகிறார்கள். பல இளைய விலங்குகளையும் பற்றி இந்த கணக்கில் நம் கற்றுக்கொள்ளலாம்.

5. ScienceAlert

விஞ்ஞானத்தின் பல்வேறு துறைகள் தொடர்பான தினசரி படங்களை இந்த கணக்கு பகிர்கிறது, எனவே நீங்கள் பின்பற்ற ஒரு நல்ல ‘பொது அறிவியல்’ கணக்கைத் தேடுகிறீர்கள் என்றால் அது இது தான்!

இந்த கணக்கு படங்களை மட்டும் இடுகையிடுவதில்லை. ‘ஸ்டோரீஸ்’ மூலம் சமீபத்திய பிரபலமான செய்தி கட்டுரைகளைப் பற்றியும் உங்களுக்கு அறிவிக்கும். மேலும், இந்த வாரம் அறிவியல் இன்ஃபோகிராபிக் மூலம் பல பெரிய அறிவியல் செய்திகளைப் புதுப்பித்த நிலையில் வைத்திருக்கும்.

விஞ்ஞானம் படிக்க வேடிக்கையாக மட்டும் இருப்பதில்லை, அதைப் பார்ப்பதற்கும் அழகாக இருக்கும். நாம் அனைவரும் சில குட்டி விலங்குகள், விண்வெளி படங்கள் மற்றும் அறிவியல் மீம்ஸ்களை நம் வாழ்வில் பயன்படுத்தலாம். இந்த இன்ஸ்டாகிராம் கணக்குகள் அதற்கான சரியான ஆதாரமாக அமைகிறது.