இசையைப் பற்றிய பிரமிக்க வைக்கும் 12 உண்மைகள்! பாகம் – 1

நாம் புரிந்து கொள்ள முடியாத பல வழிகளில் நமது மூளை செயல்படுகிறது. இசை போன்ற சாதாரண விஷயங்கள் எவ்வாறு மூளையின் செயல்பாடுகளை முற்றிலுமாக மாற்றுகின்றன என்பதைப் பல ஆய்வுகளில் பார்க்க முடிந்திருக்கிறது. இசையைப் பற்றிய இந்த உண்மைகள் உங்களுடைய மனதின் சிக்கலான தன்மையைப் பற்றி உங்களுக்கு தெரிவிக்கும்.

1. நீங்கள் இசை கேட்கும் போது கிடைக்கும் மெய்சிலிர்ப்பு, பெரும்பாலும் பாடலில் உங்களுக்கு மிக விருப்பமான இடத்தை எதிர்பார்த்து மூளையில் வெளியாகும் டோபமைன் (Dopamine) மூலம் ஏற்படுவதாகும்.

டோபமைன் மூளையால் வெளியிடப்படும், சந்தோஷத்தை தூண்டும் இரசாயனமாகும். ஒரு மனிதனை ஊக்கப்படுத்துவதற்கும் அதேபோல் ஒரு விடயத்தில் அடிமையாக்குவதற்கும் இந்த இரசாயனமே காரணமாகும். இந்த ஆய்வுகளின் மூலம், மனித வரலாற்றின் தொடக்கத்திலிருந்து உலகம் முழுவதும் உணர்ச்சி ரீதியான நிகழ்வுகளுக்கு ஏன் இசை முக்கிய பங்குவகிக்கின்றது என்ற உயிரியல் விளக்கத்தை கண்டறிய முடிந்தது.

2. மூளையின் எல்லா பகுதிகளையும் பயன்படுத்தும் சில நடவடிக்கைகளை நாம் எந்நாளும் செய்கிறோம், அவற்றில் இசையும் ஒன்று.

செயல்பாட்டு காந்த அதிர்வு இமேஜிங் (F.M.R.I.) இன் உதவியுடன், ஒரு ஆராய்ச்சி குழு இசை கேட்கும் நபர்களின் மூளையைப் பதிவு செய்தது. இதன்போது, இசை கேட்கும்பொழுது மூளையின் ஒலி உள்வாங்கும் பகுதிகள் ஒன்றாக சேர்வதோடு, பெரிய அளவிலான நரம்பியல் வலைப்பின்னல்கள் தொழிற்படுகின்றது என்று அவர்கள் கண்டனர். உண்மையில், இசை மூளையின் உணர்ச்சி, இயக்கம் மற்றும் படைப்பாற்றல் பகுதிகளை செயல்படுத்துவதாக அவர்கள் நம்புகிறார்கள்.

3. தொடர்ந்து இசை வாசித்தல், உங்கள் மூளையின் கட்டமைப்பை மாற்றுகிறது.

மூளையின் சிறப்பியல்பு வாழ்க்கை முழுவதும் அதன் கட்டமைப்பு மாறுவதற்கான திறனைக் கொண்டுள்ளதாகும். கற்றல் தொடர்பான மாற்றங்கள் பெரும்பாலும் நரம்பணுக்களுக்கு இடையே உள்ள தொடர்புகளில் ஏற்படும். இசைக்கலைஞர்களை பற்றி நடத்திய ஆய்வில், தொழில்முறை இசைக்கலைஞர்களில் புறணி எனப்படும் மூளையின் வெளிப்பகுதியை மூடியிருக்கும் பொருள் அதிகமாகவும், புதிதாக இசையை கற்க ஆரம்பித்தவர்களில் இடைநிலையாகவும், இசைக்கலைஞர்கள் அல்லாதவர்களில் மிகக் குறைவாகவும் இருப்பதை கண்டனர்.

4. நீங்கள் சாப்பிடும்போது தொழிற்படும் அதே விதத்திலேயே இசையைக் கேட்கும்போதும் உங்கள் மூளை தொழிற்படுகின்றது.

மேலே குறிப்பிட்டபடி, டோபமைன் மூளையின் வெளியீடான ஒரு இரசாயனமாகும். அடிமையாதல், பாலினம், மற்றும் சாப்பிடுவது ஆகியவற்றுடன் தொடர்புடைய உணர்வுகளுடன் இந்த இரசாயனம் இணைந்திருக்கின்றது. டோபமைன் ஒரு நபரில் இந்த விஷயங்களில் இன்பத்தை உணர உதவுகிறது. இசைக்கருவிகளை மட்டும் வாசித்து செய்யப்பட்ட ஒரு ஆய்வில், சாப்பாட்டின் சுவையை அறியும்போது மூளை வெளியிட்ட அதே உணர்வையே அந்த இசையை கேட்கும்போதும் வெளியிட்டதாக கண்டறியப்பட்டுள்ளது.

5. உடற்பயிற்சி செய்யும் போது இசை கேட்பது உங்கள் செயல்திறனை கணிசமாக மேம்படுத்துகிறது.

உங்கள் மனம் சோர்வடையும் போது உடலும் இலகுவாக சோர்வடைந்து விடக்கூடும். எனினும், இந்த உணர்வை திசைதிருப்ப உங்கள் மூளையால் முடியும். இந்த நுட்பம் சோர்வு உணர்வுகளை மனதிலிருந்து குறைத்து உற்சாகம் போன்ற திடமான மனநிலையை அதிகரிக்கவும் செய்கிறது. மிதமான உடற்பயிற்சி சிறிது கடினமாகும் போது இசையை கேட்பதன் மூலம், நீங்கள் மகிழ்ச்சியாகவும் ஆர்வமாகவும் உடற்பயிற்சி செய்யவதை காண்பீர்கள்.

6. உங்களுக்கு பிடித்த பாடலை நீங்கள் விரும்பி கேட்க காரணம் அது உங்களின் ஒரு முக்கியமான உணர்வுடன் இணைந்திருக்கக்கூடும்.

பிடித்த பாடல்கள் பெரும்பாலும் அதைக் கேட்கும் சூழலைச் சார்ந்தவை. அண்மைக் கால வெளியீட்டைப் பொறுத்து அநேக மக்கள் பெரும்பாலும் தங்களின் விருப்பமான பாடலை மாற்றிக் கொண்டாலும், நீண்டகால விருப்பத்தேர்வுகள் முக்கியமாக மூளையில் பாடல் தொடர்புடைய நினைவகத்திற்கு ஒரு உணர்ச்சி பிணைப்பை ஏற்படுத்துவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதே போன்ற சுவாரஸ்யமான தகவல்களை நாம் அடுத்த பாகத்திலும் பாப்போம். இரண்டாவது பாகத்தை படிக்க இங்கே அழுத்தவும்.