கனவுகளைப் பற்றிய 10 சுவாரஸ்யமான உண்மைகள்! பாகம் – 2

நாம் கடந்த பாகத்தில் பார்த்ததை போலவே இந்த பாகத்திலும் கனவுகள் பற்றி நீங்கள் அறிந்திராத சில உண்மைகளைப் பற்றி பார்ப்போம்.

6. உங்கள் கனவுகளை உங்களுக்கு கட்டுப்படுத்த முடியும்

ஒரு தெளிவான கனவின் போது நீங்கள் இன்னும் தூங்கிக் கொண்டிருந்தாலும் நீங்கள் கனவு காண்கிறீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். தெளிவான கனவு என்பது நனவு மற்றும் REM தூக்கம் ஆகிய இரண்டின் ஒருங்கிணைந்த நிலை என்று கருதப்படுகிறது. இதன் போது நீங்கள் பெரும்பாலும் கனவு உள்ளடக்கத்தை இயக்கலாம் அல்லது கட்டுப்படுத்தலாம்.

ஏறக்குறைய அரைவாசி மக்கள் தெளிவான கனவு காணும் ஒரு நிகழ்வையாவது அனுபவித்ததை நினைவில் வைத்திருப்பார்கள். மேலும், சில நபர்கள் தெளிவான கனவுகளை அடிக்கடி காணுவதாக கருதப்படுகிறது.

7. எதிர்மறை உணர்ச்சிகள் மிகவும் பொதுவானவை

40 ஆண்டுகளுக்கும் மேலாக, ஆராய்ச்சியாளர் கால்வின் எஸ். ஹால், கல்லூரி மாணவர்களின் 50,000 கனவுகளைச் சேகரித்தார். இந்த அறிக்கைகள் 1990 களில் ஹாலின் மாணவர் வில்லியம் டோம்ஹாஃப்-இற்கு கிடைத்தது.

பலரின் கனவுகளின் போது பலவகை உணர்ச்சிகள் அனுபவிக்கப்படுகின்றன என்பதை இந்த அறிக்கைகள் வெளிப்படுத்தின.

கனவுகளில் அனுபவிக்கும் மிகவும் பொதுவான உணர்ச்சி கவலை, மற்றும் எதிர்மறை உணர்ச்சிகள் என கண்டறியப்பட்டது. பொதுவாக, நேர்மறையானவற்றை விட எதிர்மறையானவையே மிகவும் பொதுவானவையாக இருந்தன.

8. பார்வையற்றவர்களும் கனவு காண்கின்றனர்

பிறந்ததிலிருந்தே பார்வையற்றவர்களைப் பற்றிய ஒரு ஆய்வில், அவர்களின் கனவுகளில் காட்சி உருவங்களை காண்பதாக கண்டறியப்பட்டது. மேலும், அவர்களுக்கு காட்சி கனவு நினைவுபடுத்தலுடன் தொடர்புடைய கண் அசைவுகளும் இருந்தன.

ஆய்வின் போது, கண் பார்வையுள்ள பங்கேற்பாளர்களைக் காட்டிலும் பார்வையற்றவர்களின் கண் அசைவுகள் குறைவாக இருந்தபோதிலும், பார்வையற்ற பங்கேற்பாளர்கள் காட்சி உள்ளடக்கம் உட்பட அதே கனவு உணர்வுகளை தெரிவித்தனர்.

9. உங்கள் கனவுகளின் போது உங்களால் உடலை அசைக்க முடியாது

REM தூக்கம் தன்னார்வ தசைகளின் பக்கவாதத்தால் வகைப்படுத்தப்படுகிறது. இந்த நிகழ்வு REM அட்டோனியா என அழைக்கப்படுகிறது. மேலும், நீங்கள் தூங்கும்போது உங்கள் கனவுகளின் செயல்பாடுகளுக்கேற்ற உடலின் அசைவுகளை தடுக்கிறது. இது இயக்க நரம்புகள் தூண்டப்படாமையினால் நிகழ்கின்றது.

சில சந்தர்ப்பங்களில், இந்த பக்கவாதம் 10 நிமிடங்கள் வரை விழித்திருக்கும் நிலைக்குச் செல்லக்கூடும். இது தூக்க முடக்கம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த நிகழ்வு நம்மை பயமுறுத்தும் அதே வேளையில், இது மிகவும் சாதாரணமானது என்றும் சாதாரண தசைக் கட்டுப்பாடு திரும்புவதற்கு சில நிமிடங்கள் மட்டுமே எடுக்கும் என்றும் நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

10. கனவுகள் பெரும்பாலும் பொதுவானவை

கனவுகள் பெரும்பாலும் நம் தனிப்பட்ட அனுபவங்களால் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. ஆராய்ச்சியாளர்கள் சில கனவின் கருப்பொருட்கள் வெவ்வேறு கலாச்சாரங்களில் மிகவும் பொதுவானவை என்பதைக் கண்டறிந்துள்ளனர்.

உதாரணமாக, உலகம் வெவ்வேறு இடங்களில் வாழும் மக்கள், துரத்தப்படுவது, தாக்கப்படுவது அல்லது விழுவது பற்றி அடிக்கடி கனவு காண்கிறார்கள். பிற பொதுவான கனவு அனுபவங்கள் உறைந்துபோன மற்றும் நகர முடியாமல் இருப்பது, தாமதமாக வருவது, பறப்பது போன்றவற்றைக் கொண்டிருக்கின்றன.