கனவுகளைப் பற்றிய 10 சுவாரஸ்யமான உண்மைகள்! பாகம் – 1

கனவுகள் எப்பொழுதும் கண்கவர்வனவாக, அற்புதமானதாக, திகிலூட்டுவனவாக அல்லது வித்தியாசமானதாக இருக்கலாம். நாம் ஏன் கனவு காண்கிறோம் என்பதில் தெளிவான ஒரு கருத்து இல்லை என்றாலும், நாம் கனவு காணும்போது என்ன நடக்கிறது என்பது பற்றி ஆராய்ச்சியாளர்கள் கொஞ்சம் கற்றுக் கொண்டுள்ளனர். கனவுகளைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 10 விஷயங்கள் இங்கே.

1. எல்லோரும் கனவு காண்கிறார்கள்

பெரியவர்களும் குழந்தைகளும் ஒரே இரவில் இரண்டு மணிநேரம் கனவு காண்கிறார்கள். உண்மையில், மக்கள் பொதுவாக ஒவ்வொரு இரவிலும் பல கனவுகளைக் காண்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஒவ்வொரு கனவும் பொதுவாக ஐந்து முதல் 20 நிமிடங்கள் வரை நீடிக்கும்.

ஒருவர் தனது வாழ்நாளில் சராசரியாக ஆறு ஆண்டுகள் கனவு காண்கின்றார்.

2. பொதுவாக உங்கள் கனவுகளை நீங்கள் மறந்துவிடுவீர்கள்

அனைத்து கனவுகளிலும் 95 சதவிகிதம் விழித்தவுடன் விரைவில் மறந்துவிடும். கனவுகளை ஏன் நினைவில் கொள்வது மிகவும் கடினம் என்பது குறித்த ஒரு கோட்பாட்டின் படி, தூக்கத்தின் போது மூளையில் ஏற்படும் மாற்றங்கள், நினைவக உருவாக்கம் நடைபெறத் தேவையான தகவல் செயலாக்கம் மற்றும் சேமிப்பகத்தை ஆதரிக்காது.

தூங்குபவர்களின் மூளையை ஸ்கேன் செய்வதன் மூலம், நினைவக உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கும் முன்-மடல்கள், விரைவான கண் இயக்க (REM) தூக்கத்தின் போது செயல்படுவதில்லை என்பதைக் காட்டுகின்றன. விரைவான கண் இயக்கம் கனவு காணும் கட்டமாகும்.

3. எல்லா கனவுகளும் வண்ணமயமாக இருப்பதில்லை

பெரும்பாலான மக்கள் வண்ணமயமான கனவுகளைக் காண்பதாக கூறும் அதே வேளையில், கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் மட்டுமே கனவு காண்பதாகக் கூறும் மக்கள் ஒரு சிறிய சதவீதத்தினர் உள்ளனர்.

பல ஆய்வுகளில் கனவு காண்பவர்கள் விழித்தெழுந்து தங்கள் கனவுகளில் பொருந்தக்கூடிய ஒரு விளக்கப்படத்திலிருந்து வண்ணங்களைத் தேர்ந்தெடுக்கும்படி கேட்டுக் கொண்டனர். அவற்றில் வெளிர் வண்ணங்களே பெரும்பாலும் தேர்ந்தெடுக்கப்பட்டன.

4. ஆண் பெண் இருவரினதும் கனவுகள் வித்தியாசப்படுகின்றன

ஆண்களினதும் பெண்களினதும் கனவுகளின் உள்ளடக்கத்தைப் பார்க்கும்போது சில வேறுபாடுகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். பல ஆய்வுகளில், ஆண்கள் பெரும்பாலும் ஆயுதங்களைப் பற்றி கனவு காண்பதாகக் கூறினர். அதே சமயம் பெண்கள் ஆடைகளைப் பற்றிய குறிப்புகளைப் பற்றி கனவு காண்பதாகக் கண்டறியப்பட்டது.

மற்றொரு ஆய்வில், ஆண்களின் கனவுகள் அதிக ஆக்ரோஷமான உள்ளடக்கம் மற்றும் உடல் செயல்பாடுகளைக் கொண்டிருக்கின்றன. அதே சமயம் பெண்களின் கனவுகள் அதிக நிராகரிப்புகளைக் கொண்டிருப்பதோடு உடல் செயல்பாடுகளை விட அதிக உரையாடல் உள்ளடங்கியிருப்பதாக காணப்பட்டது.

பெண்கள் சற்று நீளமான கனவுகளைக் காண்கிறார்கள். அவை அதிக கதாபாத்திரங்களைக் கொண்டுள்ளன. பொதுவாக கனவுகளில் தோன்றும் கதாபாத்திரங்களைப் பொறுத்தவரை, ஆண்கள் பெண்களை விட இரு மடங்கு அதிகமாக மற்ற ஆண்களைப் பற்றி கனவு காண்கிறார்கள். அதே சமயம் பெண்கள் இரு பாலினத்தினரையும் சமமாக கனவு காண்கிறார்கள்.

5. விலங்குகளும் கனவு காணக்கூடும்

தூங்கும் நாய் அதன் வாலை அசைக்கும்போது அல்லது கால்களை நகர்த்தும்போது, அது கனவு காண்கிறது என்று பலர் நினைக்கிறார்கள். இது உண்மையிலேயே நிகழ்கிறது என்பதை உறுதியாகக் கூறுவது கடினம் என்றாலும், விலங்குகள் உண்மையில் கனவு காணக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள்.

மனிதர்களைப் போலவே, விலங்குகளும் REM மற்றும் REM அல்லாத தூக்கத்தின் சுழற்சிகளை உள்ளடக்கிய தூக்க நிலைகளுக்குச் செல்கின்றன.

நாம் அடுத்த பாகத்திலும் இது போன்ற கனவு பற்றிய சுவாரஸ்யமான பல விடயங்களைப் பார்ப்போம்.