பைனோரால் பீட்ஸ் (Binaural Beats) என்றால் என்ன? அதன் நன்மைகள் என்ன?

பைனோரால் பீட்ஸ் தெரபி (Binaural beats therapy) என்பது ஒலி அலை சிகிச்சையின் வளர்ந்து வரும் ஒரு வடிவமாகும். இதில் வலது மற்றும் இடது காதுகள் இரண்டும் ஒரே நேரத்தில் சற்று மாறுபட்ட அதிர்வெண்ணுடைய தொனியைக் கேட்கின்றன, ஆனால் இரண்டையும் ஒன்றாக உணர்கின்றன.

ஒரு நபர் கேட்கும் பைனோரால் ஆடிட்டரி பீட் என்பது இடது மற்றும் வலது காதுக்கு இடையிலான அதிர்வெண்ணின் வித்தியாசமாகும். மூளை பைனோரால் துடிப்பைக் கண்டறிய 1000 ஹெர்ட்ஸ் (Hz) க்கும் குறைவான அதிர்வெண்களில் இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, இடது காது 200 ஹெர்ட்ஸில் ஒரு தொனியையும் வலது காது 210 ஹெர்ட்ஸிலும் ஒலிக்க வேண்டும். இதன் போது உருவாகும் அவ்வித்தியாசமான (10 Hz) தொனியையே மூளை உணர்கின்றது.

பைனோரால் பீட்ஸ் எவ்வாறு செயல்படுகிறது?

ஒரு நபர் பரிந்துரைக்கப்பட்ட நேரத்திற்கு பைனோரால் பீட்ஸை கேட்கும்போது, அவரின் விழிப்புணர்வு நிலை மாறுகிறது என்று ஆராய்ச்சி காட்டுகிறது. பைனோரால் பீட்ஸ் மூளைக்குள் குறிப்பிட்ட அமைப்புகளை செயல்படுத்துவதால் இந்த மாற்றங்கள் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். பைனோரால் பீட்ஸை கேட்கும் மக்களின் மூளையின் செயல்பாட்டைப் பதிவுசெய்த ஒரு எலக்ட்ரோஎன்செபலோகிராம் (EEG), பயன்படுத்தப்படும் அதிர்வெண் முறைக்கு ஏற்ப ஒவ்வொருவரின் மூளையிலும் வெவ்வேறு மாற்றம் ஏற்படுகிறது என்பதைக் காட்டுகிறது.

அதிர்வெண் வடிவத்தின் அறியப்பட்ட நான்கு பிரிவுகளை நாம் பார்ப்போம்.

பைனோரால் பீட்ஸ் சிகிச்சையின் நன்மைகள்

சாத்தியமான நன்மைகள் பின்வருமாறு :

பைனோரால் பீட்ஸ் சிகிச்சையைப் பயன்படுத்துவதற்கான நோக்கம் மக்களிடையே வேறுபடலாம். சிலருக்கு அவர்களின் கவலையைக் குறைக்க உதவி தேவைப்படலாம். சிலருக்கு தங்கள் மன ஒருமுகப்படுத்தலை அதிகரிக்க அல்லது தியானத்தின் அளவை ஆழப்படுத்த தேவைப்படலாம். இவை யாவற்றையும் இந்த பைனோரால் பீட்ஸ் சிகிச்சையின் மூலம் அடையலாம்.

பைனோரால் பீட்ஸை பயன்படுத்துவது எப்படி?

பைனோரால் பீட்ஸைக் கேட்க, ஒரு நபருக்கு ஒரு ஸ்டீரியோ ஹெட்ஃபோன் மற்றும் ஒரு MP3 பிளேயர் அல்லது ஏதாவதொரு இசை கேட்கக்கூடிய சாதனம் தேவைப்படும்.

வாகனம் ஓட்டுதல் போன்ற விழிப்புணர்வு மற்றும் முழு கவனம் தேவைப்படும் பணிகளை மேற்கொள்ளும்போது பைனோரால் பீட்ஸ் சிகிச்சையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

பைனோரால் பீட்ஸை கேட்க ஒரு நபருக்கு தேவைப்படுவன பின்வருமாறு :

பைனோரால் பீட்ஸ் சிகிச்சையின் முழு மற்றும் அதிகபட்ச விளைவைப் பெற, மக்கள் 30 முதல் 45 நாட்களுக்கு 15-30 நிமிடங்கள் அதைப் பயிற்சி செய்ய வேண்டும் என்று சிகிச்சையாளரும் வாழ்க்கை பயிற்சியாளருமான டெப் ஸ்மித் பரிந்துரைக்கிறார்.

ஒரு நபர் இந்த ஆரம்ப சிகிச்சையை முடித்தவுடன், தியானம் மற்றும் யோகா போன்ற நடைமுறையின் ஒரு பகுதியாக அதை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என்று ஸ்மித் பரிந்துரைக்கிறார்.

பைனோரால் பீட்ஸ் சிகிச்சை பற்றிய ஆய்வுகள்

டாக்டர் வின்சென்ட் ஜியாம்பபா நடத்திய 19 பங்கேற்பாளர்களைக் கொண்ட ஒரு சிறிய ஆய்வு, ஆல்பா, தீட்டா மற்றும் டெல்டா வடிவங்களில் பைனோரால் பீட்ஸ் சிகிச்சையின் பயன்பாடு மனித உடலில் சாதகமான விளைவுகளை ஏற்படுத்துவதாகக் கண்டறிந்தது. கார்டிசோல், டி.எச்.இ.ஏ மற்றும் மெலடோனின் என்ற ஹார்மோன்களின் உற்பத்தியை இந்த பைனோரால் பீட்ஸ் மேம்படுத்தியதாக டாக்டர் ஜியாம்பபா கண்டறிந்தார்.

ஓரிகானில் உள்ள தேசிய இயற்கை மருத்துவக் கல்லூரியின் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய மற்றொரு ஆய்வில், ஒவ்வொரு நாளும் 60 நாட்களுக்கு டெல்டா அலை பைனோரால் பீட்ஸ் சிகிச்சையைக் கேட்ட எட்டு பங்கேற்பாளர்களை மதிப்பீடு செய்தது. அதன் முடிவுகளாக இன்சுலின், பதட்டம், டோபமைன் போன்றன குறைந்தன. பங்கேற்பாளர்கள் வாழ்க்கைத் தரத்திலும் அதிகரிப்பு ஏற்பட்டது.

சிகிச்சைக்கு முன் மயக்க மருந்து கொடுக்கப்படும் போது ஏற்படும் பதட்டத்தை குறைக்கவும் இந்த பைனோரால் பீட்ஸ் உதவுவதாக ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது.

இணையத்தில் பல இணையதளங்களில் இந்த பைனோரால் பீட்ஸை தரவிறக்கம் செய்து கேட்கலாம். சிறிது நேரம் கிடைத்தால் இதை நீங்களும் முயற்சித்துப் பாருங்கள்.