கற்பூரவள்ளி இலையின் 5 அற்புதமான நன்மைகள்! பாகம்-1

கற்பூரவள்ளியின் மிகவும் அற்புதமான சுகாதார நன்மைகளாக, உங்கள் சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், உடலின் நச்சுத்தன்மையை அகற்றுதல், சளி போன்ற நோயிலிருந்து பாதுகாத்தல், முடக்கு வாதத்தின் வலியைக் குறைத்தல், மன அழுத்தம் மற்றும் பதட்டம் ஆகியவற்றைக் குறைத்தல், புற்றுநோயின் வளர்ச்சியைக் குறைத்தல், மற்றும் சமிபாட்டை மேம்படுத்துதல் போன்றவற்றைக் கூறலாம்.

கற்பூரவள்ளி என்றால் என்ன?

நீங்கள் சாலையில் நடந்து செல்லும் போது கற்பூரம் போல் வாசனையுள்ள சிறிய பச்சை இலைகளைக் கொண்ட ஒரு செடியை காண நேர்ந்தால், அதுவே மெக்ஸிகன் புதினா, ஸ்பானிஷ் தைம், நாட்டு போரேஜ் என்றெல்லாம் பல நாடுகளிலும் அழைக்கப்படும் கற்பூரவள்ளி ஆகும். இது தெற்கு மற்றும் கிழக்கு ஆபிரிக்காவின் சில பகுதிகளுக்கு சொந்தமானது என்றாலும், இந்த நன்மை பயக்கும் மூலிகையின் தேவை காரணமாக உலகெங்கிலும் உள்ள இதன் வளர்ச்சிக்கு பொருத்தமான நிலைமைகளைக் கொண்ட பிற வெப்பமண்டல பகுதிகளிலும் வளர்க்கப்படுகின்றது.

இந்த பயிர் மிகவும் வலிமையானது மற்றும் விரைவாக வளரக் கூடியது. இது வளர மற்ற தாவரங்களை விட குறைவாகவே தண்ணீர் தேவைப்படுகிறது. மேலும், வானிலை வியத்தகு முறையில் குளிராக மாறினாலும் கூட இது எந்தவித இடையூறுமின்றி வளரும்.

கற்பூரவள்ளியின் இலைகளே மிகவும் விரும்பப்படும் பகுதிகளாக இருக்கின்றன, ஏனெனில் அவை இறைச்சி மற்றும் காய்கறி உணவுகளை சுவையூட்டுவதற்கு ஏற்றவையாக இருக்கின்றன. அதே நேரத்தில் இதன் உலர்ந்த இலைகளை சூப் செய்யும் போது, வேகவைக்கும் போது மற்றும் பிற உணவுகளிலும் ஒரு மூலிகையாக சேர்க்கலாம்.

இலைகளிலிருந்து எண்ணெய்யை பிரித்தெடுக்க முடியும் என்றாலும், அவை பொதுவாக முழுதாக அல்லது தூள் வடிவத்தில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த இலைகளை நாம் பச்சையாக சாப்பிடலாம் அல்லது சில விளைவுகளுக்கு சருமத்தில் தேய்க்கலாம்.

ரோஸ்மரினிக் அமிலம் மற்றும் காஃபிக் அமிலம் போன்ற சக்திவாய்ந்த அமிலங்கள் இருப்பதால், இது ஊட்டச்சத்து மருந்துகளில் பயன்படுத்தக்கூடிய ஆற்றலைக் கொண்டுள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மருத்துவ பயன்பாடுகளைப் பற்றி பேசுகையில், கற்பூரவள்ளியின் சில ஆரோக்கிய நன்மைகளை இப்போது நாம் உற்று நோக்கலாம்.

கற்பூரவள்ளியின் சுகாதார நன்மைகள்

1. சுவாச சிக்கல்களை நீக்குகிறது.

நீங்கள் சளி, தொண்டை புண், நுரையீரல் நெரிசல், மூக்கடைப்பு அல்லது வலிமிகுந்த சைனஸால் பாதிக்கப்படுகிறீர்கள் என்றால் கற்பூரவள்ளியின் இலைகளை மெல்லலாம் அல்லது இலைகளிலிருந்து தேநீர் காய்ச்சலாம். கற்பூரவள்ளியிலுள்ள சேர்மங்கள் உங்கள் சுவாசக் குழாய்களிலிருந்து சளி மற்றும் கபத்தை நீக்கி, உங்கள் சைனஸை அழிக்க ஒரு சக்திவாய்ந்த மூலிகையாக செயல்படுகின்றது. இது உங்கள் சுவாசப் பாதையில் பாக்டீரியா அல்லது பிற நோய்க்கிருமிகள் உறைவதையும், வளர்வதையும் தடுப்பதன் மூலம் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

2. சரும பராமரிப்பு

கற்பூரவள்ளியின் மிகவும் பிரபலமான பயன்பாடுகளில் ஒன்று பயனுள்ள தோல் சிகிச்சையாகும். பூச்சிகள் கடித்தல் மற்றும் கொட்டுதல் முதல் அரிக்கும் தோலழற்சி மற்றும் தடிப்புத் தோல் அழற்சி வரை, கற்பூரவள்ளி அழற்சி எதிர்ப்பு சேர்மங்களைக் கொண்டுள்ளது. அவை விரைவாக செயல்பட்டு சிவத்தல் மற்றும் வீக்கத்தைக் குறைக்கும், அதே நேரத்தில் அரிப்பு மற்றும் எரிச்சலையும் நீக்குகிறது.

3. ஒமேகா-6 உள்ளடக்கம்

கற்பூரவள்ளியின் இலைகளிலிருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெய்யில் உள்ள கலவைகளில் காமா-லினோலெனிக் அமிலம் என்ற ஒமேகா-6 கொழுப்பு அமிலம் காணப்படுகின்றது. இந்த குறிப்பிட்ட கொழுப்பு அமிலம் மூட்டு மீளுருவாக்கத்தை அதிகரிப்பதன் மூலம் முடக்கு வாதத்தைக் குறைக்கின்றது. இது விளையாட்டு வீரர்கள் அல்லது ஆஸ்டியோபோரோசிஸ் உள்ளவர்களுக்கு மற்றும் மூட்டுகள் மற்றும் எலும்புகளில் வழக்கமான தாக்க அழுத்தத்தைக் கொண்டிருப்பவர்களுக்கும் முக்கியமான ஒரு மூலிகையாகும்.

4. வைட்டமின் C மற்றும் A

கற்பூரவள்ளியில் காணப்படும் அஸ்கார்பிக் அமிலத்தின் உயர் உள்ளடக்கம் நோயெதிர்ப்பு மண்டல ஊக்கியாக செயற்படுகிறது. அதே நேரத்தில் கரோட்டினாய்டுகள் மற்றும் வைட்டமின் A உள்ளடக்கம் பார்வையை மேம்படுத்திடுகிறது, கண்களில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்கும், மற்றும் மாகுலர் சிதைவு எனப்படும் கண் நோயையும் தடுக்கிறது.

5. புற்றுநோய் உண்டாவதை எதிர்க்கின்றது

கற்பூரவள்ளி தாவரத்தின் தண்டு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்ததாகவும், உடலினுள் வரும் நச்சுப் பொருட்களையும் அழிக்கும் திறனைக் கொண்டுள்ளது என்றும் கண்டறியப்பட்டது. இந்த தண்டின் சாறு புற்றுநோய் உயிரணுக்களின் பெருக்கத்தைத் தடுக்க உதவுகிறது, மேலும் குருதித்தட்டுக்கள் திரள்வதை தடுக்கும் திறனையும் கொண்டுள்ளது.

எமது உடலாரோக்கியத்திற்கு உதவும் கற்பூரவள்ளியைப் பற்றி இதே போன்று இன்னொரு பாகத்திலும் பார்ப்போம்.

இரண்டாவது பாகத்தை படிக்க இங்கே அழுத்தவும்.