உலகில் பார்வையிட சிறந்த இடங்களில் ஒன்றான ஹவாய் தீவுகள்

நீங்கள் கரீபிய தீவிலுள்ள ஒரு கடற்கரையில் ஓய்வெடுக்க விரும்புகிறீர்களா, உலகின் புகழ்பெற்ற பள்ளத்தாக்கை பார்வையிடலாமா, பண்டைய இடிபாடுகளை ஆராய்ந்து பார்க்கலாமா, ருசியான உணவுகளை உண்ணலாமா அல்லது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பற்றி அறிய விரும்புகிறீர்களா? வாருங்கள், எமக்குத் தெரிந்த சில இடங்களை பற்றி உங்களுக்கு அறியத் தருகின்றோம்.

இன்று நாம் அமெரிக்காவின் ஹவாய் தீவுகள் பற்றி பார்ப்போம்.

உலகின் மிக அழகான தீவுகளில் ஒன்றான ஹவாய் தீவு பார்வையாளர்களை அதன் சொர்க்கத்துக்கு அன்புடன் வரவேற்கிறது. ஹவாய் தீவுகள் என்பது எட்டு பெரிய தீவுகளையும் ஏராளமான சிறிய தீவுகளையும் கொண்ட வட பசிபிக் பெருங்கடலில் உள்ள கடற்பகுதியில் காணப்படும் ஒரு அழகிய தீவு ஆகும். ஹவாய் தீவு சுமார் 1,500 மைல் (2,400 கிலோமீட்டர்) பரப்பளவைக் கொண்டது.

ஹவாய் தீவுகள் என்பது ஹவாய்-பேரரசர் சீமவுண்ட் சங்கிலி என அழைக்கப்படும் ஒரு பெரிய கடலுக்கடியில் உள்ள மலைத்தொடரினால் வெளிப்பட்ட சிகரங்களாகும். இது பூமியின் எரிமலை உருவாகும் இடங்களில் ஒன்றில் காணப்படுகின்றது.

மே 2018 இல் கிலாவியாவின் பேரழிவுகரமான எரிமலை வெடிப்பு சுற்றுலாவுக்கு இடையூறு விளைவித்தது. இருந்தாலும் இப்போது ஹவாய் தீவு மீண்டும் அதன் அற்புதமான அழகை காட்ட ஆரம்பித்துள்ளது. இந்த தீவு வியக்கத்தக்க மாறுபட்ட நிலப்பரப்பைக் கொண்டது.

கிலாவியா வெடிப்பின் போது மூன்றில் இரண்டு பங்கு ஹவாய் எரிமலை தேசிய பூங்கா மூடப்பட்டிருந்தாலும், அதன் பெரும்பகுதி செப்டம்பர் பிற்பகுதியில் மீண்டும் திறக்கப்பட்டது, மேலும் அதன் பாதைகளும் பல அழகிய இடங்களும் இப்போது பார்வையாளர்களை ஈர்க்கின்றன.

பூங்காவில் அமைந்துள்ள எரிமலை மாளிகை, நவம்பர் தொடக்கத்தில் மீண்டும் திறக்கப்பட்டது. இது இணையற்ற எரிமலைக் காட்சிகளையும் இரவு நேரங்களில் பிரமிக்க வைக்கும் நட்சத்திரக் காட்சிகளையும் கொண்டுள்ளது.

தீவிலும் பூங்காவிலும் இன்னும் சில இடங்கள் மூடப்பட்டுள்ளன என்றாலும், புதிய இடங்களின் எண்ணிக்கை பெரும்பாலான பயணிகளை மகிழ்விக்கும் அளவுக்கு ஈர்க்கக்கூடியது. ஃபேர்மாண்ட் ஆர்க்கிட்டில் உள்ள பிஞ்சோட்டன் பார் & கிரில் என்ற உணவு விடுதி விரைவில் திறக்கப்படவுள்ளது. இது உள்நாட்டின் மூலப்பொருட்களான கடல் உணவுகள் மற்றும் உள்ளூர் தயாரிப்புகளை சமைத்து மற்றும் வறுத்து மிகவும் சுவையாக செய்து தரவுள்ளது.

இங்குள்ள ஹோட்டல்களில் தங்குவதன் மூலம் கண்கொள்ளாக் காட்சியான ஹவாய் சூரிய அஸ்தமனத்தைப் பார்க்கலாம். அதே நேரத்தில் கொஞ்சம் பழமையான தோற்றத்தைக் கொண்ட இடத்தைத் தேடுபவர்களுக்கு வினைமியாவில் அமைந்துள்ள கமுவேலா இன் எனும் விடுதியில் தங்கலாம். இது ஹவாய் தீவின் வரலாற்றில் பெயர் பெற்ற இடமாகும்.

ஹவாய் தீவுகளில் இரண்டாவது பெரிய தீவான Maui மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில், இது பல இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் கொண்டுள்ளது. தங்க கடற்கரைகள், வற்றாத நீர்வீழ்ச்சிகள், இரவு வாழ்க்கை, சாம்பியன்ஷிப்-காலிபர் கோல்ஃப் மைதானங்கள் மற்றும் ஏராளமான வெளிப்புற சாகசங்கள், ஹைகிங் மற்றும் பைக்கிங் என்ற பல சுவாரஸ்யமான பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்டது.

நீங்கள் உலகைச் சுற்றி பார்வையிட விரும்பினால் கட்டாயமாக ஹவாய் தீவுகளையும் உங்கள் பட்டியலில் சேர்த்துக் கொள்ளுங்கள்.