இயற்கை எழில் கொஞ்சும் அந்தமான் தீவுகள்!

பரபரப்பான நகர வாழ்க்கையிலிருந்து விடுபட்டு தொலைதூரத் தீவுக்கு போக நினைக்கின்ற எவருக்கும் எப்பொழுதும் அந்தமான் தீவுகள் சொர்க்கமாக இருக்கின்றது. 300 க்கும் மேற்பட்ட தீவுகள் கொண்ட அந்தமான் தீவுகள், (சில ஆதாரங்கள் 572 தீவுகள் உள்ளன என குறிப்பிடுகின்றன) இந்தியாவிற்கும் தாய்லாந்திற்கும் இடையில் அமைந்துள்ளது. இங்கு மிக அழகாக தோற்றமளிக்கும் கடற்கரைகள், தெள்ளத் தெளிவான நீர், உயரமான தேங்காய் மரங்கள், மற்றும் சதுப்புநில காடுகள் பரந்து காணப்படுகின்றன.

இங்குள்ள பல தீவுகள் இன்னும் வெளிநாட்டவர் கால்படாமலேயே இருக்கின்றன. இதற்கு காரணம் இங்கு வாழும் பழங்குடியினரை பாதுகாக்கவே ஆகும். ஆனால், ஹெவ்லோக் தீவு மட்டும் அண்மைய காலத்தில் அதிகளவில் அணுகப்படுகின்றது. அந்த தீவில் காணப்படும் ராதாகர் எனும் கடற்கரையில் அந்தமான் தீவுகளின் முதல் ஐந்து நட்சத்திர ஹோட்டலான Taj Exotica Resort & Spa திறக்கப்பட்டது.

அதுமட்டுமில்லாமல் 30 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் இந்த ஹோட்டலின் இடத்தில், 75 ஆடம்பர வில்லாக்கள், உள்நாட்டு பழங்குடி இனத்தவரின் குடிசைகள், உள்ளூர் உணவகங்கள் மற்றும் உலகளாவிய உணவிற்கான மூன்று உணவகங்கள், மற்றும் அமைதியான ஸ்பா ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.

இங்கு முக்கியமாக ஜலாகரா எனும் அழகான ஹோட்டல் 2015 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் திறக்கப்பட்டது. இது பாக்கு மற்றும் வாழை தோப்புகளின் நடுவில் கட்டப்பட்டுள்ளது. இந்த ஹோட்டலில் ஆறு அறைத்தொகுதிகளும் தனிப்பட்ட ஒரு வில்லாவும் உள்ளது.

இங்கு வரும் வெளிநாட்டவர் பவளப் பாறைகளை பார்வையிடச் செல்லுதல், சதுப்பு நிலங்களில் படகோட்டுதல், மலை ஏறுதல், கடற்கரையில் ஓய்வெடுத்தல், நீச்சல் மற்றும் டைவிங் ஆகியவற்றில் நேரத்தை செலவிடுகின்றனர். இப்போது, அந்தமான் தீவானது மாலைதீவு, தாய்லாந்து, மற்றும் இலங்கையை விட மிகக் குறைவான வளர்ச்சி அடைந்துள்ள நாடாகவே உள்ளது. அது மாறும் முன் இப்போதே அந்தமான் தீவிற்கு செல்லுங்கள்.