நெல்லிக்கனியின் 5 மகத்துவமான மருத்துவப் பயன்கள்

நெல்லிக்காய் இந்தியா, மத்திய கிழக்கு மற்றும் ஒரு சில தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வளரும் ஒரு கசப்பான ஆனால் ஊட்டச்சத்து மிகுந்த பழமாகும். இது இந்தியாவில் அம்லா என்றும் சமஸ்கிருதத்தில் அமலாகி என்றும் அழைக்கப்படுகிறது.

நெல்லிக்கனியின் சக்திவாய்ந்த சத்துக்கள் காரணமாக, பெரும்பாலும் ஆயுர்வேத மருந்துகளைப் போலவே தோல் மற்றும் முடியின் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், உடலின் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இதன் பழம் இலையுதிர்காலத்தில் ஈரமான காடுகள் மற்றும் இந்திய துணைக் கண்டத்தின் மலைப்பாங்கான பகுதிகளில் காய்க்கின்றது. இந்த மரம் இந்தியாவில் ஒரு புனித மரமாக கருதப்படுகிறது.

பழம் வெளிர் பச்சை நிறத்தில் காணப்படுவதோடு சாப்பிட மிகவும் புளிப்பு மற்றும் கசப்பாகவும் நார்ச்சத்து அதிகமானதாகவும் இருக்கும். இந்தியாவில், இது உப்பு மற்றும் மிளகாய் தூளுடன் சேர்த்து சாப்பிடப்படுகிறது அல்லது ஊறுகாய் அல்லது சர்க்கரை மிட்டாயாக தயாரிக்கப்படுகிறது.

இது திரிபாலா மற்றும் சியவன்ப்ராஷின் ஒரு முக்கிய மூலப்பொருள் ஆகும். இவை இரண்டும் ஆரோக்கியத்தை அதிகரிப்பதற்கான இந்தியாவின் பாரம்பரிய மூலிகையின் சூத்திரங்கள் ஆகும். நெல்லிக்கனி தூள், சாறு, எண்ணெய், மாத்திரைகள் மற்றும் மசாலா போன்ற பல்வேறு வடிவங்களிலும் கிடைக்கிறது. நெல்லிக்காய் தேநீர் மற்றும் உலர்ந்த காய் அதன் சக்திவாய்ந்த ஊட்டச்சத்து நன்மைகளுக்காக பலரால் உட்கொள்ளப்படுகின்றன.

இப்போது நாம் நெல்லிக்காயின் முக்கியமான மருத்துவ நன்மைகளைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

1. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

நெல்லிக்காய்கள் இயற்கையான நோயெதிர்ப்பு ஊக்கியாக இருக்கின்றன. ஏனெனில், அவை வைட்டமின்கள் C மற்றும் A, பாலிபினால்கள் (Polyphenols), ஆல்கலாய்டுகள் (Alkaloids) மற்றும் குவெர்செட்டின் (Quercetin) மற்றும் கேம்ப்ஃபெரோல் (Kaempferol) போன்ற சக்திவாய்ந்த இரசாயனங்களின் கலவையைக் கொண்டிருக்கின்றன.

இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் பார்மாசூட்டிக்ஸில் எனப்படும் பத்திரிகை வெளியிட்ட ஒரு ஆய்வின்படி, நெல்லிக்கனிக்கு சக்திவாய்ந்த பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன எனக் கூறப்பட்டது. ஆயுர்வேதத்தில் உள்ள நெல்லிச் சாறு, பெரும்பாலும் உடலில் உள்ள வெள்ளை இரத்த அணுக்களை அதிகரிக்கப் பயன்படுகிறது, அவை நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஒரு முக்கிய காரணியாகும். உடல் முழுவதும் ஓடும் இரத்தத்திலுள்ள வெள்ளை இரத்த அணுக்கள், நச்சுகள் மற்றும் பிற நோய்க்காரணிகளை தாக்கி அகற்றுகிறது.

2. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது

நெல்லிக்காயில் குரோமியம் உள்ளது. இது நீரிழிவு நோயாளிகளின் சிகிச்சைக்கு தேவையான ஒரு பொருளாகும். இது இன்சுலினை சுரக்கும் உயிரணுக்களை தூண்டுகிறது. இதனால் நீரிழிவு நோயாளிகளில் இரத்த சர்க்கரையை குறைக்கிறது. இரத்த சர்க்கரை குறையும் போது, உயிரணுக்களால் குளுக்கோஸ் இயக்கச் சக்தியாகப் பயன்படுத்தப்படுகிறது. இதனால், நீரிழிவு நோயாளிகளுக்கு ஆபத்தான இரத்த சர்க்கரையின் அளவு குறைந்து உங்களுக்கு அதிக ஆற்றலைக் கொடுக்கின்றது.

உடலில் எல்.டி.எல் (கெட்ட) கொழுப்பின் அளவைக் குறைப்பதன் மூலம் இதய ஆரோக்கியத்திற்குப் பயன்படுத்தப்படும் பீட்டா-தடுப்பான்களின் விளைவையும் குரோமியம் மேம்படுத்துகிறது. வகை 2 நீரிழிவு நோயாளிகளின் இரத்த குளுக்கோஸ் மற்றும் கொழுப்பு பற்றிய சுயவிவரத்தில் நெல்லிக்கனியின் தாக்கம் குறித்த 2011 ஆராய்ச்சி ஆய்வில், இது அதிகூடிய கிளைசெமிக் மற்றும் கொழுப்பை குறைக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது என்று கூறியுள்ளது.

3. உணவு இலகுவாக சமிபாடடைய உதவுகிறது

நெல்லிக்கனியில் பெரும்பாலான பழங்களைப் போலவே நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது குடல் வழியாக உணவை நகர்த்த உதவுகிறது மற்றும் குடல் அசைவுகளை தூண்டுகிறது மற்றும் மலச்சிக்கலுக்கான வாய்ப்புகளை குறைக்கிறது. கரையக்கூடிய நார்ச்சத்து, (பல பழங்களில் காணப்படுகிறது) மேலும் தளர்வான மலத்தை கூட்டி வயிற்றுப்போக்கைக் குறைக்கிறது.

நெல்லி இரைப்பை மற்றும் செரிமான சாறுகளின் சுரப்பைத் தூண்டுகிறது, எனவே உணவு திறமையாக ஜீரணிக்கப்படுகிறது மற்றும் ஊட்டச்சத்துக்கள் உகந்த வழியில் உறிஞ்சப்படுகின்றன. இதனால் நீங்கள் இலகுவாகவும் ஆரோக்கியமாகவும் உணர்வீர்கள்.

அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் ஃபுட் டெக்னாலஜியில் 2014 இல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், நெல்லிக்கனி மற்றும் நெல்லி தூள் உடம்பில் தண்ணீரைத் தக்கவைக்கின்றன எனக் கூறியது. நெல்லிக்கனி மலச்சிக்கலைக் குறைக்க உதவுகிறது மற்றும் பல்வேறு இரைப்பை, குடல் கோளாறுகளிலிருந்து உங்களைப் பாதுகாக்க உதவுகிறது, மேலும் பெருங்குடல் புற்றுநோய்க்கான வாய்ப்புக்களையும் குறைக்கின்றது.

4. இதய நோய்களைத் தடுக்கிறது

நெல்லிக்காய் போன்ற பெர்ரி வகைகள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தகின்றன என நிரூபிக்கப்பட்டுள்ளது. நெல்லி தூள் இதய தசைகளை பலப்படுத்துகிறது, எனவே உடல் முழுவதும் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். அதிகப்படியான கொழுப்பைக் குறைப்பதன் மூலம், நெல்லி தூளில் உள்ள குரோமியம் நாடி மற்றும் நாளங்களை சுத்தப்படுத்துகிறது. இது பக்கவாதம் மற்றும் மாரடைப்புக்கான வாய்ப்புகளை குறைக்கலாம்.

நெல்லியில் உள்ள இரும்புச் சத்து புதிய சிவப்பு ரத்த அணுக்களை உருவாக்குவதையும் ஊக்குவிக்கிறது, இதன் மூலம் திசுக்களின் வளர்ச்சி மற்றும் மீளுருவாக்கம் அதிகரிக்க உறுப்புகள் மற்றும் உயிரணுக்களின் ஆக்ஸிஜனேற்றம் அதிகரிக்கின்றது.

5. சிறுநீர்ப்போக்கைத் தூண்டுகிறது

நீர் உள்ளடக்கம் மிக அதிகமாக இருக்கும் பழம் என்பதால் நெல்லி இயற்கையிலேயே சிறுநீர் போக்கைத் தூண்டுகிறது மற்றும் சிறுநீரின் அளவை அதிகரிக்கின்றது. சிறுநீர் கழித்தல் நம் உடலுக்கு தேவையற்ற நச்சுகள் மற்றும் அதிகப்படியான நீர், உப்பு மற்றும் யூரிக் அமிலத்தை அகற்ற உதவுகிறது. எனவே, உங்கள் சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், சிறுநீர் மற்றும் கருப்பை தொற்றுநோய்களைத் தடுக்கவும் நெல்லிக்கனி பெருமளவில் பயனளிக்கின்றது.

எனவே, முடிந்தவரை நெல்லிக்கனியை நாம் அன்றாடம் சாப்பிடும் பழவகைகளுடன் சேர்த்துக் கொள்வோம்.