கற்பூரவள்ளி இலையின் 5 அற்புதமான நன்மைகள்! பாகம்-2

நாம் கடந்த பாகத்தில் பார்த்த கற்பூரவள்ளியின் அற்புதமான சுகாதார நன்மைகளைப் போலவே இந்த பாகத்திலும் உங்கள் ஆரோக்கியத்திற்குப் பலனளிக்கும் சில நன்மைகளைப் பார்ப்போம்.

1. சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

கற்பூரவள்ளி சிறுநீர்க் கழிவைத் தூண்டும் ஒரு பயனுள்ள மருந்தாக செயல்படுகிறது. அதாவது, இது சிறுநீர் கழிப்பதைத் தூண்டுவதன் மூலம் உடலின் நச்சுக்களை சுத்தப்படுத்திடுகிறது. இது உடலில் அதிகப்படியான உப்பு, கொழுப்பு, மற்றும் நீரின் அளவைக் குறைத்து, சிறுநீரகங்கள் மற்றும் நிணநீர் மண்டலங்களை சீராக இயங்க வைக்கிறது.

2. காய்ச்சலை குணமாக்குகிறது

நீங்கள் சளி அல்லது தொற்றுக்களால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்றால் அதன் பொதுவான அறிகுறிகளில் ஒன்று காய்ச்சல் ஆகும். காய்ச்சலை ஏற்படுத்துவதன் மூலம் உங்கள் நோயெதிர்ப்பு அமைப்பு உடலில் ஏற்பட்டுள்ள நோயோடு போராடாத் தொடங்குகிறது. கற்பூரவள்ளி ஒரு சுடோரிஃபிக் (Sudorific) ஆகும். அதாவது, இது வியர்வையைத் தூண்டுவதன் மூலம் தோல் வழியாக நச்சுகளை வெளியேற்றவும், மீட்பு செயல்முறையை விரைவுபடுத்தவும் உதவுகிறது.

3. மலக்குடல் எரிச்சல் நோயை குணமாக்குகிறது

பாரம்பரிய பயன்பாட்டில், கற்பூரவள்ளி பொதுவாக வயிற்றுப்போக்குகளைத் தீர்ப்பதற்கும், சமிபாட்டை ஒழுங்குபடுத்துவதற்கும், வயிற்று வீக்கத்தைத் தணிப்பதற்கும், எரிச்சலூட்டும் குடல் நோய்க்குறியிலிருந்து விடுபடுவதற்கும் பயன்படுத்தப்பட்டது. இந்த ஆரோக்கிய நன்மையைப் பயன்படுத்த கற்பூரவள்ளியின் இலைகளிலிருந்து தேநீர் காய்ச்சுவது மிகவும் பயனுள்ள வழியாகும்.

4. மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் குறைக்கிறது

இது கற்பூரவள்ளியின் அதிகமாக அறியப்படாத நன்மைகளில் ஒன்றாகும். இந்த மூலிகையில் காணப்படும் சில கரிம சேர்மங்கள் மற்றும் தாதுக்கள் இயற்கையிலேயே மன அழுத்தத்ததைக் குறைப்பதாக காட்டப்பட்டுள்ளன. எனவே, இந்த மூலிகை குறிப்பாக தேநீர் வடிவத்தில் பெரும்பாலான மக்களுக்கு வழங்கப்படுகிறது. இதன் மூலம் அதிக கவலை அல்லது நாள்பட்ட மன அழுத்தத்தைக் குறைத்து ஓய்வு, மன அமைதி மற்றும் ஆரோக்கியமான, அமைதியான தூக்கத்தைத் தூண்டுகிறது.

5. பெண்களுக்கு நன்மை பயக்கும்

கற்பூரவள்ளி மாதவிடாய் வலி, பிரசவ வலி மற்றும் தலைவலி ஆகியவற்றைக் குறைக்கிறது என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்தியாவிலும் இந்தோனேசியாவின் சில பகுதிகளிலும், பாலூட்டும் தாய்மார்களுக்கு இந்த மூலிகை உடலில் பால் ஓட்டத்தை அதிகரிக்க வழங்கப்படுகிறது.

முதல் பாகத்தை படிக்க இங்கே அழுத்தவும்.