ஒரு சிறு வணிகத்தைத் தொடங்க நீங்கள் ஏற்கனவே கேட்டிராத 10 உதவிக்குறிப்புகள் பாகம்-1

ஒரு சொந்த வணிகத்தைத் தொடங்குவது பற்றி நீங்கள் நினைத்திருந்தால், அதைப் பற்றிய ஆலோசனைகளத் தேடத் தொடங்கியிருப்பீர்கள். ஒரு புதிய வணிகத்தைத் தொடங்க பல உதவிக்குறிப்புகள் உள்ளன, அவற்றில் எதைப் பின்பற்ற வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுப்பதில் உங்களுக்கு குழப்பம் ஏற்பட்டிருக்கலாம்.

ஒரு வணிகத்தைத் தொடங்குவதற்கென புதிதாக சூத்திரம் எதுவும் இல்லை. சிறந்த வணிக ஆலோசனை உங்களைப் புதிய வழியில் சிந்திக்க தூண்டுகிறது. எனவே, நீங்கள் கேள்விப்படாத சில உதவிக்குறிப்புகளை நாம் இங்கு தருகிறோம்.

1. பயத்தைக் கண்டறியுங்கள்

எண்ணற்ற மக்கள் தொழில்முனைவோராக மாற வேண்டும் என்று கனவு காண்கிறார்கள். ஆனால், அவர்கள் ஒருபோதும் அதனைச் செய்வதில்லை. காரணம், அவர்கள் முதலாவதாக யோசிப்பது நாம் தோல்வி அடைந்து விடுவோமோ என்று தான். ஒரு தொழிலைத் தொடங்காததற்காக பணம், நேரம், பொறுப்புகள் என ஒரு லட்சம் காரணங்களை நீங்கள் சொல்லலாம்.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில், புதிய வணிக உரிமையாளர்கள் தங்கள் வெற்றிக்கான வாய்ப்புகளை விட இழப்புகள் அதிகமாகலாம் என நினைக்கலாம். ஆனால், வணிக உரிமையின் அபாயங்கள் குறித்து கவலைப்படுவது இயல்பான ஒரு விடயம்.

இவ்வாறான பயம் உங்கள் இலக்குகளை அடைவதிலிருந்து உங்களை தடுக்கின்றது. நீங்கள் உண்மையிலேயே ஒரு தொழிலைத் தொடங்க விரும்பினால், ஒரு தொழிலைத் தொடங்க முடியாது என்று நினைக்கும் காரணங்களை நிவர்த்தி செய்து அவற்றை அகற்ற வேண்டும். உங்களைத் தடுக்கும் பிரச்சினைக்கு பயப்படாமல் அதற்கான தீர்வைக் கண்டறிய முயற்சி செய்யுங்கள்.

2. எல்லாவற்றையும் உள்வாங்கிக்கொள்ளுங்கள்

நண்பர்கள், குடும்பத்தினர், வல்லுநர்கள் என்று மற்றவர்கள் சொல்வதை எப்போதும் கேளுங்கள். உங்கள் தொழில் தொடங்கும் குறிக்கோள்கள் என வரும்போது உங்கள் மனசாட்சி சொல்வதையும் கேளுங்கள். இவற்றின் மூலம் உங்கள் மனதில் யோசனையை உருவாக்கத் தொடங்குங்கள். விரிவான திட்டத்தை உருவாக்க நீங்கள் காணும் அனைத்து வளங்களிலிருந்தும் குறிப்புகளை எழுதி வைத்திருங்கள்.

உங்களின் யோசனையைப் பற்றி நீங்கள் மக்களிடம் கூறும்போது, அவர்களின் உடல்மொழியைப் படியுங்கள். அவர்களுக்கு இந்த யோசனை பிடிக்குமா? அல்லது, அவர்கள் நீங்கள் தவறான திசையில் செல்கிறீர்கள் என்று நினைக்கிறார்களா? என்பதைத் தெரிந்துகொள்ள அவர்களின் நேர்மையான கருத்தைக் எதிர்பார்ப்பதாகக் கூறுங்கள். இவர்களிடமிருந்து நீங்கள் பெறும் கருத்து, நுகர்வோர் எவ்வாறு உங்களை அணுகுவார்கள் என்பதற்கான பிரதிபலிப்பாக இருக்கலாம்.

வல்லுநர்கள் மற்றும் மூத்த வணிக உரிமையாளர்களின் ஆலோசனையின் சக்தியை புறக்கணிக்காதீர்கள். இவர்கள் எதைச் செய்தால் என்ன நடக்கும் என்பதை நன்கு அறிந்திருப்பார்கள். புத்திசாலியான தொழில்முனைவோர், மற்ற வணிக உரிமையாளர்கள் செய்த தவறுகளிலிருந்து கற்றுக்கொள்கிறார்கள்.

3. ஒரு தீர்வாக இருங்கள்

எதை விற்க வேண்டும் என்று உங்கள் யோசனையைத் தொடங்குவதற்குப் பதிலாக, அது எந்த தேவையைத் தீர்க்கும் என்பதைப் பற்றி சிந்தியுங்கள். ஒரு தேவையைப் பூர்த்தி செய்யும் போது திடமான வாடிக்கையாளர் தளத்தைப் பெறுவது மிகவும் எளிதானது. உங்கள் தொழிலானது ஒரு குறிப்பிட்ட சந்தை அல்லது முக்கிய இடத்தில் ஒரு பிரச்சினையைத் தீர்ப்பதாக இருக்க வேண்டும்.

உதாரணமாக, சிறு வணிக உரிமையாளர்கள் எதிர்கொண்ட ஒரு சிக்கலை தீர்க்கவே சில ஆராய்ச்சிகளின் பின், சுலபமாக பயன்படுத்தக்கூடிய மற்றும் மலிவு விலையில், கணக்கியல் மென்பொருள் வெளிவந்தது.

நீங்கள் ஏன் உங்கள் சொந்த வியாபாரத்தைத் திறக்கிறீர்கள் என்பதற்கான நோக்கங்களைப் புரிந்துகொண்டு ஒரு பிராண்டை உருவாக்கி உங்கள் நிறுவனத்தை சந்தைப்படுத்த முயற்சி செய்யுங்கள். உங்கள் இலக்கு வாடிக்கையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவற்றை எவ்வாறு தீர்க்கலாம் என்பதை நோக்கி இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

4. எளிமையைப் பேணவும்

உங்களுக்கு ஒரு வணிக யோசனை இருக்கிறது, அதனுடன் இயங்க நீங்கள் தயாராக உள்ளீர்கள் என்றால் உங்கள் கருத்தை சிக்கலானதாக மாற்றாமல் கவனமாக இருங்கள். அவ்வாறு மாறினால், உங்கள் யோசனை யாரும் வாங்க விரும்பாத விலையுயர்ந்த இறுதி தயாரிப்பாக முடியக் கூடும்.

ஒரு புதிய வணிக உரிமையாளராக சிறியதாகத் தொடங்க முயற்சிக்கும் போது, உங்கள் கவனத்தை ஒருமைப்படுத்திக்கொள்ளுங்கள். உங்கள் வணிக யோசனையை எவ்வாறு சோதிப்பது என்பதை அறிந்து கொள்ளுங்கள். ஒரு வெற்றிகரமான வணிக யோசனை என்னவென்றால் வாடிக்கையாளர்களின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் மற்றும் அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

உங்களுக்கு பணம் செலவாகும் தேவையற்ற அம்சங்களைக் குறைத்துக் கொள்ளுங்கள். ஒரு சிறு வணிகமாக, ஒரு பெரிய நிறுவனத்தில் காணப்படும் அனைத்து வசதிகளும் உங்களுக்குத் தேவையில்லை. உங்கள் வணிகம் வளரும்போது அதை எளிதாகச் சேர்த்துக் கொள்ளாலாம்.

5. செலவுகளை கணக்கிட்டுக்கொள்ளுங்கள்

உங்கள் வணிக யோசனையை உருவாக்கத் தொடங்கியதும், அதற்கு எவ்வளவு செலவாகும் என்பதை கணக்கிட்டுக் கொள்ளுங்கள். தொடங்க மற்றும் செயல்பட தேவையான செலவுகளான இருப்பிடம், வாடகை, பொருட்கள், சந்தைப்படுத்தல் என்பவற்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

உங்களால் முடிந்தவரை கணக்கிட்டு ஒரு தொகையை தீர்மானித்துக் கொள்ளுங்கள். பின்னர், அந்த தொகையின் நான்கு மடங்கை எடுத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு அந்த தொகையை நான்கு மடங்காக அதிகரிக்கக் அதிகரிக்கக் காரணம், ஒரு வணிகத்தை நடத்துவதற்கான எதிர்பாராத செலவுகளை நீங்கள் அனுபவிக்கக் கூடும். செலவுகள் அதிகரிக்கத் தொடங்கும் போது மூலதனத்தைக் குறைப்பதை விட, அதிகமாக கையில் வைத்துக் கொண்டு தயாராக இருப்பது நல்லது.

ஒரு தொழிலைத் தொடங்குவதற்கான செலவைப் பற்றி நீங்கள் நினைக்கும் போது, உங்கள் தனிப்பட்ட பட்ஜெட்டை மறந்துவிடாதீர்கள். வாடகை, உணவு, எரிவாயு, உடல்நலம் போன்றவற்றை உள்ளடக்கிய, நீங்கள் வாழ எவ்வளவு பணம் வேண்டும் என்பதையும் பாருங்கள். இந்த பணம் எஞ்சினால் நீங்கள் அதை உங்கள் பொழுதுபோக்குக்காக கூட செலவிட முடியும்.

உங்கள் எல்லா செலவுகளையும் நீங்கள் புரிந்துகொண்டவுடன், வணிக வரவு செலவுத் திட்டத்தை உருவாக்கத் தொடங்குங்கள். முதலில், ஒரு சிறு வணிகக் கடனைப் போல, நீங்கள் சில மூலதனங்களைப் பெற வேண்டும். தொடக்கத்தில் உங்கள் பணத்தை போடுவதற்கு முன் உங்கள் எல்லா தேவைகளையும் பற்றி யோசித்துக் கொள்ளுங்கள்.

இதுபோன்ற இன்னும் சில பயனுள்ள உதவிக்குறிப்புகளை நாம் அடுத்த பாகத்திலும் பார்ப்போம்.