சுதந்திரமாக வாழ்வதற்கு நீங்கள் தவிர்க்க வேண்டிய 10 விடயங்கள் – பாகம் 01

1. எந்நேரமும் எல்லாவற்றிலும் குறைப்பாடற்று நேர்த்தியாக இருக்க வேண்டும் என்கிற நினைப்பை விட்டுவிடுங்கள்.

நீங்கள் சரியாகவும் அழகாகவும் இருக்கிறீர்கள் என்று நினைத்து கொள்ளுங்கள். இதுதான் உங்களை நீங்களாக இருக்க அனுமதிக்கிறது. பரிபூரணம் என்பது ஒரு மாயை – அப்படி ஒன்று இல்லை. பரிபூரணமாக இருக்க முயற்சிப்பதை நிறுத்தி “போதுமானது” என்ற குறிக்கோளை நோக்கமாக கொள்ளுங்கள்.

தவறுகளை ஏற்றுக்கொள்வதன் மூலம் கற்றுக்கொண்ட பாடங்கள் மட்டுமல்லாமல் வளர்ச்சிக்கு தேவையான வாய்ப்புகள் உங்களை புத்திசாலியான மனிதராக மாற்றும். ஏதாவது ஒரு முயற்சியில் தோல்வியுறுவதன் மூலம் நீங்கள் தோல்விக்குரியவர் என அர்த்தமல்ல. சில நேரங்களில் நாம் வெல்கிறோம், சில சமயங்களில் கற்றுக்கொள்கிறோம்.

2. எல்லா நேரத்திலும் ஓய்வில்லாமல் ஏதாவது ஒரு வேலையில் இருக்க வேண்டிய அவசியத்தை விட்டுவிடுங்கள்.

அவசரத்தில் இருப்பது நல்லொழுக்கத்தின் அடையாளம் அல்ல. உங்கள் உடலை நீங்கள் பார்த்துக்கொள்ள கற்றுக் கொள்ள வேண்டும். உடலுக்கு ஓய்வு தேவைப்படும் நேரத்தில் அதற்கான ஓய்வை கண்டிப்பாக கொடுக்க வேண்டும்.

நேரம் இல்லையென்றால் அதை உருவாக்குங்கள். ஒரு நல்ல திரைப்படத்தைப் பார்ப்பது, நிதானமான இசையைக் கேட்பது, ஒரு நல்ல புத்தகத்தைப் படிப்பது, பாடுவது, இயற்கையுடன் இணைவதற்கு ஒரு நடைபயணம் போன்ற மனதை அமைதியாக்கும் மற்றும் உடலை ஓய்வாய் வைத்திருக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுங்கள்.

3. சுயவிமர்சனத்தை விட்டுவிடுங்கள்.

உங்களை நீங்கள் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடத்த கற்றுக்கொள்ளுங்கள். உங்களால் செய்ய முடியாத, முடியாமல் போன விடயங்களுக்காக நீங்களே உங்களை விமர்சித்து சொல்வதை நிறுத்துங்கள்.

வாழ்க்கையில் நாம் விரும்புவதைப் பெற்றுக்கொள்வதற்கு பதிலாக நாம் அதைப் பெறுவதற்கு தகுதியானவர்கள் என்ற நினைப்பையே பெறுகிறோம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். அதனால்தான் நாம் எம்மில் நம்பிக்கை வைப்பது அவசியம்.

4. குற்றம் கூறுவதை விட்டுவிடுங்கள்.

ஒவ்வொரு முறையும் நீங்கள் வேறொருவரைப் பற்றி குறை கூறும்போது உங்களை நீங்களே பாதிப்புக்கு உள்ளாக்குகிறீர்கள். தனது நேரத்தையும், பணத்தையும், அன்பையும் எடுத்துக் கொண்டதற்காக மற்றவர்களைக் குறை கூறுவது நியாயமற்றது. மாறாக உங்கள் செயல்களுக்கு நீங்களே பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள். உங்கள் தற்போதைய தேர்வுகளின் விளைவாகவே உங்கள் எதிர்காலம் இருக்குமென்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

5. பிறரை மதிப்பீடு செய்வதை விட்டுவிடுங்கள்

எல்லோரும் தங்கள் சொந்த பயணத்தில் இருக்கிறார்கள் என்பதை அறிந்து மற்றவர்களைப் பற்றி மதிப்பீடு செய்து நேரத்தை வீணடிக்காமல் உங்கள் சொந்த வேலையில் கவனம் செலுத்துங்கள். இன்னொரு நபரைப் பற்றி தீர்ப்பளிக்க முற்பட வேண்டாம்.

இன்னும் சில பயனுள்ள விடயங்களை நாம் அடுத்த பாகத்திலும் பார்ப்போம்.