ஃபேஷன் மற்றும் ஆடை பற்றிய 10 கவர்ச்சிகரமான உண்மைகள் பாகம்-1

ஃபேஷன் என்பது மக்கள் மிகவும் விரும்பும் ஒன்று அல்லது முற்றிலுமாக வெறுக்கும் ஒன்று. பல யுகங்களாக, வெவ்வேறு ஃபேஷன் பாணிகள் வந்து காணாமல் போகின்றன. ஆனால், அவற்றில் பலவற்றை சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் துணிக்கடைகளில் காண முடிகின்றது. சிலருக்கு சமீபத்திய ஃபேஷனை தொடர முடியாமலிருக்கும். வேறு சிலருக்கு சமீபத்திய டிசைன்கள் போதியதாக இருக்காது. எனினும், நீங்கள் அதை விரும்பினாலும் அல்லது வெறுத்தாலும் இந்த சுவாரஸ்யமான பேஷன் உண்மைகளை பார்த்து வியப்படைவீர்கள்.

1. அமெரிக்காவில் ஒவ்வொரு நபரும் சராசரியாக குறைந்தது ஏழு நீல நிற ஜீன்ஸ் வைத்திருக்கிறார்கள்.

2. ஆண்கள் பல தசாப்தங்களாக ஷார்ட்ஸ் (Shorts) அணிகிறார்கள். ஆனால், பெண்கள் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு தான் அவற்றை பொது இடங்களில் அணிய அனுமதிக்கப்பட்டனர். இதற்கு ஒரு முக்கிய காரணம், போரின் போது குறைந்தளவு துணியே கிடைத்ததது. இதனால் பேன்ட் அல்லது பாவாடையை விட ஷார்ட்ஸ் அதிக செலவு குறைந்ததாக இருந்தது.

3. டி-ஷர்ட் உலகில் மிகவும் பிரபலமான ஆடைகளில் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் அவற்றில் இரண்டு பில்லியன்கள் விற்கப்படுகின்றன.

4. வரலாற்று ரீதியாக, ஊதா நிற ஆடைகளை இத்தாலியின் ரோம் நகரில் உள்ள நீதிபதிகள், பேரரசர்கள் மற்றும் பிற பிரபுக்கள் மட்டுமே அணிந்திருந்தனர்.

5. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பேஷன் பத்திரிகைகள் விற்கப்படுகின்றன, ஆனால் முதல் ஃபேஷன் பத்திரிகை ஜெர்மனியில் 1586 இல் விற்கப்பட்டது.

6. நிறைய விஷயங்கள் விலையில் அதிகரித்துக்கொண்டிருக்கும்போது, உண்மையில் ஆடை விலை குறைந்து வருகிறது. 1992 ஆம் ஆண்டு முதல், துணிகளின் விலை 8.5% குறைந்துள்ளது.

7. உலகின் மிக நீளமான திருமண ஆடைக்கான சாதனை 1.85 மைல் நீளமுள்ள ஒரு ஆடைக்கு கிடைத்துள்ளது.

8. லெவியின் ஜீன்ஸ் மிகவும் பிரபலமான பிராண்டுகளில் ஒன்றாகும். நீங்கள் இப்போது ஒரு ஜீன்ஸுக்கு அதிக விலை கொடுத்து வாங்குகிறீர்கள் என்றாலும், முதல் ஜீன்ஸ் 1853 ஆம் ஆண்டில் 6 டாலருக்கே விலைக்கு விற்கப்பட்டது.

9. 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை, ஆடைகளை காட்சிப்படுத்த மாடல்களைப் பயன்படுத்தப்படவில்லை. ஃபேஷன் நிறுவனங்கள் அதற்கு பதிலாக பொம்மைகளைப் பயன்படுத்தினார்கள்.

10. இந்த நாட்களில் நீங்கள் வெளியே சென்று வீடு திரும்பும் வரை ஒரு ஷாப்பிங் சென்டரைப் பார்க்காமல் வர முடியாது. ஷாப்பிங் சென்டரை முதன்முதலில் கட்டிய பண்டைய ரோமானியர்களுக்கு நன்றி.