சந்திரன் உண்மையில் எவ்வளவு தொலைவில் உள்ளது?

இரவு வானத்திலும் சில சமயங்களில் பகலிலும் சந்திரன் பிரகாசமாக பிரகாசிப்பதை நாம் காண முடிந்தாலும் சந்திரன் உண்மையில் எவ்வளவு பெரியது, எவ்வளவு தொலைவில் உள்ளது என்பதை கணக்கிடுவது கடினமான ஒரு விடயமாக உள்ளது.

சந்திரன் எவ்வளவு பெரியது?

அதற்கான பதில் நீங்கள் நினைப்பது போல் நேரடியானதல்ல. பூமியைப் போலவே, சந்திரனும் ஒரு சரியான கோள வடிவமானதல்ல. அதாவது சந்திரனின் வடதுருவத்திலிருந்து தென்துருவத்திற்குள்ள விட்டம் அதன் மத்திய ரேகை விட்டத்தை விட குறைவாக உள்ளது.

ஆனால் அந்த வித்தியாசம் நான்கு கிலோமீட்டர் மட்டுமே ஆகும். சந்திரனின் மத்திய ரேகை விட்டம் சுமார் 3,476 கி.மீ மற்றும் துருவ விட்டம் 3,472 கி.மீ ஆகும். அது எவ்வளவு பெரியது என்பதைப் பார்க்க ஆஸ்திரேலியா போன்ற ஒத்த அளவுடனுள்ள இடத்தைக் கொண்டு ஒப்பிட வேண்டும்.

ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் இருந்து பிரிஸ்பேன் வரையான தூரம் 3,606 கி.மீ. ஆஸ்திரேலியாவையும் சந்திரனையும் அருகருகே வைத்தால், அவை ஏறக்குறைய ஒரே அளவாகவே இருக்கும். ஆனால் சந்திரன் ஆஸ்திரேலியாவைப் போல அகலமாக இருந்தாலும், பரப்பளவைப் பொறுத்தவரை உண்மையில் சந்திரன் மிகப் பெரியது.

ஆஸ்திரேலியாவின் நிலப்பரப்பு சுமார் 7.69 மில்லியன் சதுர கிலோமீட்டர் ஆகும். இதற்கு மாறாக, சந்திரனின் பரப்பளவு 37.94 மில்லியன் சதுர கிலோமீட்டர் ஆகும். இது ஆஸ்திரேலியாவின் பரப்பளவுக்கு ஐந்து மடங்கு அதிகம்.

சந்திரன் எவ்வளவு தூரத்திலுள்ளது?

சந்திரன் எவ்வளவு தொலைவில் உள்ளது என்று கேட்பது, நீங்கள் எதிர்பார்ப்பதை விட மிகவும் சிக்கலான பதில்களைக் கொண்ட ஒரு கேள்வியாகும்.

சந்திரன் பூமியைச் சுற்றி ஒரு நீள்வட்ட சுற்றுப்பாதையில் நகர்கிறது. அதாவது நமது கிரகத்திலிருந்து அதன் தூரம் தொடர்ந்து மாறுகிறது. ஒரு சுற்றுப்பாதையில் அந்த தூரம் 50,000 கி.மீ வரை மாறுபடும். அதனால்தான் நமது வானத்தில் சந்திரனின் அளவு வாரத்திற்கு வாரம் சற்று மாறுபடுகிறது.

சந்திரனின் சுற்றுப்பாதை சூரிய மண்டலத்தின் மற்ற எல்லா பொருட்களாலும் பாதிக்கப்படுகிறது. இவை அனைத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ளும்போது கூட பதில் எப்போதும் மாறிக்கொண்டே இருக்கிறது. ஏனென்றால் பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான அலை தொடர்புகளின் விளைவாக சந்திரன் படிப்படியாக பூமியிலிருந்து விலகிச் செல்கிறது.

சந்திரன் ஆண்டுக்கு 38 மி.மீ. அல்லது ஒரு நூற்றாண்டுக்கு 4 மீட்டர் தூரம் விலகிச் செல்வதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனினும் சந்திரனுக்கும் பூமிக்கும் இடையிலான சராசரி தூரம் 384,402 கி.மீ. என்றே இன்றும் நாம் கருதுகிறோம்.

சூரியனின் மத்திய ரேகை விட்டம் கிட்டத்தட்ட 1.4 மில்லியன் கிலோமீட்டர் ஆகும். இது சந்திரனின் விட்டத்தை விட கிட்டத்தட்ட 400 மடங்கு ஆகும். இதனால் பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான தூரத்திலும் பார்க்க (149.6 மில்லியன் கிலோமீட்டர்) பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான தூரம் கிட்டத்தட்ட 400 மடங்கு அதிகம்.

ஆனாலும் சந்திரனும் சூரியனும் பூமியின் வானத்தில் கிட்டத்தட்ட ஒரே அளவிலேயே தோன்றும். இதன் விளைவாக, சந்திரனும் சூரியனும் பூமிக்கு சரி நேராக வரிசையாக நிற்கும்போது, சூரிய கிரகணம் உருவாகிறது. துரதிர்ஷ்டவசமாக, இதுபோன்ற கண்கவர் கிரகணங்கள் சந்திரன் விலகிச் செல்வதால் ஒரு நாள் முடிவுக்கு வரும். அன்று சந்திரன் சூரியனை முழுமையாக மறைக்க முடியாத அளவு தொலைவில் இருக்கும். ஆனால் இது நடக்க இன்னும் 600 மில்லியன் ஆண்டுகள் ஆகும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

ரோபோக்களை சூரிய குடும்பத்தின் தொலை தூரங்களுக்கு அனுப்பியுள்ள நிலையில், பூமியைத் தவிர மனிதகுலம் நடந்து சென்ற ஒரே கிரகமாக சந்திரன் உள்ளது. சந்திரனில் நடந்த அந்த முதல் சாகசத்திற்கு ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த அனுபவத்தைப் பெற்ற பன்னிரண்டு பேரில் நான்கு பேர் மட்டுமே உயிருடன் உள்ளனர்.

வரவிருக்கும் ஆண்டுகளில், நமது புதிய தலைமுறையை ஊக்குவிப்பதற்கும், நமது சூரிய மண்டலத்திற்கு அருகிலுள்ள வேற்றுக்கிரகவாசிகள் பற்றிய ஆய்வுகளைத் தொடருவதற்கும் மீண்டும் சந்திரனிற்குச் செல்வோம்.