காட்டுத்தீ எவ்வாறு உருவாகின்றது? பாகம்-1

காட்டுத்தீ என்றால் என்ன?

காட்டுத்தீ என்பது பல்வேறு வகையான வானிலை மற்றும் உலர்ந்த காற்று ஆகியவை எரிபொருளாக மாறி காடுகளின் மிகப்பெரிய பரப்பளவை அழிக்கும் நெருப்பு ஆகும். இது அதிகமாக பரவும் பொழுது கட்டுப்பாட்டை இழந்து ஏக்கர் கணக்கான நிலத்தை எரிக்கின்றது மற்றும் அதன் பாதைகளில் உள்ள அனைத்தையும் ஒரு சில நிமிடங்களில் சாம்பலாக்கி விடுகின்றது . அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 100,000 காட்டுத்தீ ஏற்படுகிறது. இதுவரை காட்டுத்தீ காரணமாக 9 மில்லியன் ஏக்கர் நிலங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுரையில் இந்த காட்டுத்தீக்கான காரணங்கள், விளைவுகள் மற்றும் தீர்வுகள் பற்றி நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.

காட்டுத்தீ, வீடுகள் அல்லது விவசாய வளங்கள் போன்ற இடங்களிலும் சரியாக கவனிக்கப்படாமல் தொடங்குகிறது. ஆனால், மரங்கள் மற்றும் வீடுகளை நெருங்கும் போது விரைவாகப் பற்றிக்கொள்கின்றன.

பச்சைவீட்டு விளைவின் காரணமாக வாயு வெளியேற்றம் அதிகரிப்பதனால் காலநிலை வெப்பமடைந்து வருவதால், அடுத்த பல தசாப்தங்களில் மிகப் பெரிய தீ விபத்துக்கள் ஏற்படும் அபாயம் வியத்தகு முறையில் அதிகரிக்கும் என்று ஒரு புதிய NOAA நிதியுதவி ஆய்வு கூறுகிறது.

காட்டுத்தீக்கான காரணங்கள்

1. உலகின் காட்டுத்தீக்கு முக்கிய காரணமாக மனிதர்கள் முதலிடத்தில் உள்ளனர். இந்த காட்டுத்தீ பலவற்றுக்கான காரணமாக சிகரெட் துண்டுகள் நிலத்தில் விடப்படுவது, கண்காணிக்கப்படாமல் விடப்பட்ட முகாம்கள், வேண்டுமென்றே செய்த தீமூட்டும் செயல்கள் அமைகின்றன. அமெரிக்காவில் 90% காட்டுத்தீ மக்களால் ஏற்படுகிறது. மனிதனால் உருவாக்கப்பட்ட காட்டுத்தீக்கான காரணங்களில் சில கீழே.

2. இயற்கையால் ஏற்படும் காட்டுத்தீ

காட்டுத்தீயின் விளைவுகள்

1. காட்டுத்தீ வீடுகள், வனவிலங்குகள் மற்றும் தாவரங்களை அழிக்கின்றது. வனவிலங்கு சூழலில் வசிப்பவர்கள் அனைவரும் இதனால் வீடற்றவர்களாக காணப்படுகிறார்கள். ஒரு பண்ணைக்கு அருகில் அல்லது பிற குடிமக்களின் வயலுக்கு அருகில் காட்டுத்தீ ஏற்பட்டால் அந்த பயிர்கள் பயனற்றதாகப் போய்விடுகின்றன. இந்த சேதங்களை சரிசெய்யவும், வீடுகளையும் தாவரங்களின் பகுதிகளையும் மீண்டும் கட்டவும் மில்லியன் கணக்கான பணம் செலவிடப்படுகின்றன.

2. காட்டுத்தீ பகுதியில் உள்ள மண் முற்றிலுமாக அழிக்கப்படுகிறது. காட்டில் உள்ள மண், அழுகும் ஊட்டச்சத்துக்கள் மற்றும் குப்பைகள் மூலம் தாவரங்கள் வளர ஏற்ற இடமாக அமைகின்றது. ஒரு காட்டுத்தீ இந்த மண்ணைத் தாக்கும் போது அது மிகவும் சூடாகி, அந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் அழிகின்றன.

3. பல விலங்குகள் உயிரை இழக்கின்றன. பறவைகள், அணில், முயல்கள் மற்றும் பிற வனவிலங்குகள் காட்டுத்தீ ஏற்படும் பொழுது கணிசமான அளவு உயிரிழக்கின்றன.

4. மரங்களும் தாவரங்களும் இல்லாமல் போகின்றன. மரங்களும் தாவரங்களும் உலகில் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்ய உதவுகின்றன. எந்த இடத்தில் குறைந்த மரங்களும் தாவரங்களும் இருக்கின்றதோ அவ்விடத்தில் நாம் சுவாசிக்கத் தேவையான தூய்மையான காற்று குறைவாக உள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மையாகும். தாவரங்கள் அல்லது மரங்கள் இல்லாமல் போகும் பொழுது, உயிர் பிழைத்த விலங்குகளுக்கு சாப்பிடவும் எதுவும் இருக்காது.

5. மண்ணில் அதிகப்படியான நீர் அரிப்பு ஏற்படலாம். காட்டுத்தீயை நிறுத்த தீயணைப்பு வீரர்கள் அதிக அளவு தண்ணீரைப் பயன்படுத்துகின்றனர். மண்ணில் அதிகப்படியான நீர் சேரும்போது அது அரிக்கப்பட்டு பயனற்றதாகின்றது.

6. அதிக அளவு புகை காற்றில் வெளியாகிறது. இதனால் காற்று சுவாசிக்க கடினமாக மாறுகிறது மற்றும் காற்று மாசுபாட்டையும் ஏற்படுத்துகிறது.

7. துரதிர்ஷ்டவசமாக, சில மனித உயிர்களும் காட்டுத்தீயில் இழக்கப்படுகின்றன. நெருப்பை எதிர்த்துப் போராடி மற்றவர்களை காப்பாற்ற முயற்சி செய்பவர்களே பெரும்பாலும் உயிரிழக்கின்றனர்.

8. சாம்பல் மற்றும் புகை ஆகியவை, ஒவ்வாமை மற்றும் பிற மருத்துவ சிக்கல்களால் பாதிக்கப்பட்ட மனிதர்களுக்கு கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். புகை மற்றும் சாம்பல், நுரையீரல் மற்றும் தொண்டையை நிரந்தரமாக சேதப்படுத்தக்கூடும்.

9. காட்டுத்தீயால் வயல் பயிர்கள் மற்றும் விலங்குகள் அழிக்கப்படும் போது விவசாயத் துறையில் உள்ள தொழிலாளர்களுக்கு வருமானமும் வேலைகளும் இழக்கப்படுகின்றன. மக்கள் வேலையில்லாமல் இருக்கும்போது பொருளாதாரம் பாதிக்கப்படுகின்றது.

10. காப்பீட்டுத் தவணைகள் ஒரு காட்டுத்தீக்குப் பிறகு அதிகரிக்கக்கூடும். ஏனெனில், எல்லோரும் இதுபோன்ற பேரழிவு இழப்புகளைத் தடுக்க காப்பீட்டைப் பெற எதிர்பார்க்கிறார்கள். இதனால் பாதிக்கப்படாத மக்களுக்கு காப்பீடு தேவைப்படும்போது அவற்றை வாங்க முடியாத அளவு அதன் தவணைத் தொகை அதிகரித்திருக்கும்.

காட்டுத்தீ வராமல் தடுப்பதற்கான தீர்வுகளை நாம் அடுத்த பாகத்தில் பார்ப்போம்.