கோபி பிரையன்ட்-இன் வாழ்க்கை வரலாறு (1978-2020) பாகம் – 1

முன்னாள்  முழுநேர  கூடைப்பந்தாட்ட  வீரர்  கோபி பிரையன்ட் லாஸ் ஏஞ்சல்ஸ் லேக்கர்ஸ் என்கிற முன்னணி கூடைப்பந்து அணியில் விளையாடி ஐந்து NBA பட்டங்களை  வென்றதன்  மூலம் கூடைப்பந்து  விளையாட்டின்  சிறந்த  முன்னணி வீரர்களில்  ஒருவராக  தன்னை  நிலைநிறுத்திக் கொண்டார்.

ஆரம்ப கால வாழ்க்கை

கோபி பீன் பிரையன்ட் ஆகஸ்ட் 23, 1978 அன்று அமெரிக்காவின் பென்சில்வேனியா, பிலடெல்பியாவில் பிறந்தார். இவர் முன்னாள் NBA வீரரான ஜோ “ஜெல்லிபீன்” பிரையன்ட்டின் மகன் ஆவார்.

1984 ஆம் ஆண்டில் தனது NBA வாழ்க்கையை முடித்த பின்னர் தந்தை இத்தாலிய லீக்கில் விளையாடியதால் குடும்பத்தை இத்தாலிக்கு அழைத்துச் சென்றார். ஷாயா மற்றும் ஷரியா ஆகிய இரு தடகள வீராங்கனை சகோதரிகளுடன் இத்தாலியில் வளர்ந்த பிரையன்ட் கூடைப்பந்து மற்றும் கால்பந்து இரண்டு விளையாட்டுக்களிழும் சிறந்த வீரராகத் திகழ்ந்தார்.

1991 ஆம் ஆண்டில் குடும்பத்துடன் பிலடெல்பியாவுக்குத் திரும்பியபின் பிரையன்ட் லோவர் மெரியன் உயர்நிலைப் பள்ளி கூடைப்பந்து அணியில் சேர்ந்து, அணியை தொடர்ந்து நான்கு ஆண்டுகள் மாநில சாம்பியன்ஷிப்பிற்கு இட்டுச் சென்றார். NBA வில் விளையாடுவதற்கு ஆயத்தமாகும் முகமாக அவர் பிலடெல்பியா 76ers  உடன் இணைந்து வேலை செய்யத் தொடங்கினார்.

அவர் படிப்பில் உயர் மதிப்பெண்களை பெற்றிருந்தாலும் உயர்நிலைப் பள்ளியில் இருந்து நேராக NBA-க்குச் செல்ல முடிவு செய்தார்.

1996 ஆம் ஆண்டு NBA-இல் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டு பின்னர் லாஸ் ஏஞ்சல்ஸ் லேக்கர்ஸ் கூடைப்பந்து அணிக்கு விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

இவருடைய விளையாட்டு சாதனைகளையும் மறைவையும் பற்றி நாம் அடுத்த பாகத்தில் பார்ப்போம்.