கோபி பிரையன்ட்-இன் வாழ்க்கை வரலாறு (1978-2020) பாகம் – 2

நாம் கடந்த பாகத்தில் பார்த்ததைப் போலவே இந்த பாகத்திலும் கோபி பிரையன்ட்-இன் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி பார்ப்போம்.

கோபியின் NBA விளையாட்டு வாழ்க்கை மற்றும் புள்ளிவிவரங்கள்

லேக்கர்ஸ் உடனான தனது இரண்டாவது சீசனில், பிரையன்ட் 1998 இல் ஆல்-ஸ்டார் கேம்-இன் ஒரு ஆரம்ப தொடக்க வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதுவே NBA வரலாற்றில் முதன்முதலாக 19 வயது ஒருவரை இளைய ஆல்-ஸ்டார் வீரராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வாகும்.

பின்னர் கூடைப்பந்து சூப்பர் ஸ்டார் ஷாகில் ஓ’நீலுடன் இணைந்து தொடர்ந்து மூன்று NBA சாம்பியன்ஷிப்பை வென்றார். மேலும், 2002 முதல் 2004 வரை முதல்-அணி All-NBA வில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடிடாஸ், ஸ்ப்ரைட் மற்றும் பிற சிறந்த ஸ்பான்சர்களுடன் வியாபார தூதுவராக பல ஆண்டு ஒப்பந்தங்களையும் அவர் மேற்கொண்டார்.

2004 ஆம் ஆண்டில் ஓ’நீல் வெளியேறிய பிறகு லேக்கர்ஸ் அணி வெற்றிக்கு போராடிய போதிலும், பிரையன்ட் அற்புதமாக விளையாடினர். அவர் ஜனவரி 2006 இல் டொராண்டோ ராப்டர்களுக்கு எதிராக 81 புள்ளிகளைப் பெற்றார். இது NBA வரலாற்றில் இரண்டாவது மிக உயர்ந்த ஒற்றை விளையாட்டு புள்ளிகளாகும்.

2008 ஆம் ஆண்டில், பிரையன்ட் மிகவும் மதிப்புமிக்க வீரராகப் பெயரிடப்பட்டார் மற்றும் அவரது அணியை NBA இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவர்கள் பாஸ்டன் செல்டிக்ஸிடம் தோற்றனர்.

2009 NBA இறுதிப்போட்டியில் லேக்கர்ஸ் அணி ஆர்லாண்டோ மேஜிக் அணியை வீழ்த்தி சாம்பியன்ஷிப்பை வென்றனர். பின் தனது நண்பரும் இசை சூப்பர் ஸ்டாருமான மைக்கேல் ஜாக்சனை கௌரவிக்கும் நினைவு சேவையின் ஒரு பகுதியாக பிரையன்ட் பங்கேற்றார். அடுத்த ஆண்டு லேக்கர்ஸ் அணி செல்டிக்ஸை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்றனர்.

பிரையன்ட் 2008 மற்றும் 2012 அமெரிக்கா அணிக்காக  ஒலிம்பிக்கில் சக  அணி வீரர்களான  கெவின் டுரான்ட், லெப்ரான் ஜேம்ஸ் மற்றும் கார்மெலோ அந்தோணி ஆகியோருடன் இணைந்து தொடர்ந்து தங்கப் பதக்கங்களை வென்றார்.

ஏப்ரல் 2013 இல் குதிகால் தசைநார் கிழிவால் பாதிக்கப்பட்டு விளையாட்டிற்கு திரும்ப கடுமையாக உழைத்தார். பின் 2013-2014 சீசனில் பிரையன்டுக்கு ஆறாவது ஆட்டத்தில் முழங்காலில் முறிவு ஏற்பட்டது.

மூத்த ஆல்-ஸ்டார் மைக்கேல் ஜோர்டானை 2014 டிசம்பரில் NBA மதிப்பெண் பட்டியலில் பின்தள்ளி மூன்றாவது இடத்தை பிடித்தார். ஆனால் ஜனவரி 2015 இல் மூன்றாவது முறையாக காயம் காரணமாக அவரது சீசனை முடிக்க வேண்டியதாயிற்று.

பணி ஓய்வு

பிரையன்ட் 2015-2016 NBA சீசனுக்கு திரும்பி வந்தாலும், அவர் இளம் லேக்கர்ஸ் அணியினருடன் போராடினார். நவம்பர் 2015 இல் சீசனின் முடிவில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

ஏப்ரல் 13, 2016 அன்று, ஸ்டேபிள்ஸ் மையத்தில் தனது கடைசி ஆட்டத்தை பார்க்க கூடியிருந்த ரசிகர் கூட்டத்தை பிரையன்ட் திகைக்க வைத்தார். இதில் பிரையன்ட் 60 புள்ளிகளை பெற்று லேக்கர்ஸ் அணியை யூட்டா ஜாஸ் அணியுடனான வெற்றிக்கு வழிவகுத்தார். இது அவரது கூடைப்பந்தாட்ட வாழ்க்கையின் ஆறாவது 60 புள்ளிகள் பெற்ற ஆட்டமாகும்.

கூடைப்பந்தாட்டத்திற்கான அகாடமி விருது

நவம்பர் 2015 இல், பிரையன்ட் லேக்கர்களிடமிருந்து ஓய்வு பெறுவதாக தி பிளேயர்ஸ் ட்ரிப்யூன் இணையதளத்தில் “அன்புள்ள கூடைப்பந்து” என்ற தலைப்பில் கவிதை ஒன்றின் மூலம் ஓய்வு பெறுவதை சக வீரர்களிடம் அறிவித்தார்.

இதன் விளைவாக அழகாக வடிவமைக்கப்பட்ட  ஐந்து நிமிட குறும் படம் 2017 டிரிபெகா திரைப்பட விழாவில் முதன் முதலாக திரையிடப்பட்டது. ஆஸ்கார் வாக்காளர்கள் கவனத்தை ஈர்த்ததன்  மூலம் இது 2018 விழாவில் சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான ஆஸ்கார் விருதை வென்றது.

சமூக சேவை

அவரது பரோபகார முயற்சிகளில் ஒன்றாக ஆல் ஸ்டார் கூடைப்பந்து சமூக நடவடிக்கையை கோபி மற்றும் வேனெஸ்ஸா பிரையன்ட் பேமிலி பௌண்டேஷனின் ஒரு பகுதியாக நடத்திவந்தார்.

கோபி கூடைப்பந்து அகாடமி என்ற வருடாந்திர கோடைக்கால முகாமையும் நடத்தினார்.

மனைவி மற்றும் குழந்தைகள்

பிரையன்ட் ஏப்ரல் 2001 இல் 19 வயதான வேனெஸ்ஸா லெய்னை மணந்தார். இந்த ஜோடி நான்கு மகள்களுக்கு பெற்றோரானது. நடாலியா டயமண்டே (பி. 2003), ஜியானா மரியா-ஓனோர் (பி. 2006), பியான்கா (பி. 2016) மற்றும் காப்ரி (பி. 2019).

மறைவு

ஜனவரி 26, 2020 அன்று  லாஸ் ஏஞ்சல்ஸ் புறநகரான கலாபாஸில் விபத்துக்குள்ளான  சிகோர்ஸ்கி எஸ் -76 ஹெலிகாப்டரில் பிரையன்ட் இருந்தார். பிரையன்ட் மற்றும் அவரது 13 வயது மகள் ஜியானா, கூடைப்பந்தாட்ட பயிற்சியாளர் ஜான் அல்தோபெல்லி மற்றும் அவரது மனைவி கெரி மற்றும் மகள் அலிஸா உள்ளிட்ட 9 பேர் இறந்தனர்.

ஹெலிகாப்டர் கலிபோர்னியாவின் தொளசன்ட்ஸ்  ஓக்ஸுக்கு சென்று கொண்டிருந்தது. அங்கு பிரையன்ட் மாம்பா ஸ்போர்ட்ஸ் அகாடமியில் ஒரு கூடைப்பந்தாட்ட போட்டிக்கு விளையாட்டு பயிற்சியாளராக பயிற்றுவிக்க திட்டமிடப்பட்டு இருந்தது.