கடந்த ஒன்றரை நூற்றாண்டில் மனிதர்கள் உருவாக்கிய தொழில்நுட்பம் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நாம் வழமையாக தூங்கும் வழியை மாற்றி அமைத்திருக்கிறது.
இது விரைவாக ஏற்பட்ட மாறுதல் ஒன்றாகும், இதனால் தொழில்நுட்பம் தூக்கத்தின் எதிரி என்று கருதப்பட வேண்டியதில்லை. ஏனெனில், நீங்கள் நன்றாக தூங்க உதவுவதற்கு உருவாக்கப்படும் ஏராளமான தயாரிப்புகள் இன்று உள்ளன. அவற்றில் ஒரு ஆப்-ஐ தான் நாம் இங்கு பார்க்கப் போகின்றோம். இந்த ஆப்-இன் பெயர் Sleep Cycle ஆகும். இது இலவசமாக கிடைப்பதோடு பாவனைக்கு இலகுவாகவும் உள்ளது.
ஸ்லீப் சைக்கிள் உங்கள் தூக்கத்தை கண்காணிப்பதோடு மட்டுமல்லாமல் நீங்கள் மிதமான தூக்கத்தில் இருக்கும்போதே உங்களை எழுப்பிவிடும். இதன் மூலம் நீங்கள் பகல் நேரத்தில் அதிக நேரம் விழித்திருக்கவும் உற்சாகமாக இருப்பதற்கும் உதவுகின்றது. இம்முறையில் எழுப்புவதற்கான நோக்கம் என்னவென்றால் நீங்கள் ஒரு அலார கடிகாரத்தின் மூலம் திடீரென ஒரு சத்தத்தில் எழும்புவதை விட, மிதமான தூக்கத்தின் போது எழும்புகையில் இயற்கையாகவே விழித்தெழுவது போன்றிருக்கும்.
ஸ்லீப் சைக்கிள்-இன் ‘Smart Snooze’, எனும் தொழிநுட்பத்தின் மூலம் எமக்கு விருப்பமானவாறு மெதுவாக ஒவ்வொரு கட்டமாக அலாரம் வைத்து உங்களை எழுப்பும்படி சரிசெய்து கொள்ள முடியும். இந்த ஆப் உங்கள் ஸ்மார்ட்ஃபோனிலுள்ள மைக்ரோஃபோன் அல்லது முடுக்கமானியைப் (Accelerometer) பயன்படுத்தி, தூக்கத்தின் போது உங்கள் இயக்கங்களைப் பகுப்பாய்வு செய்யவும், அதற்கான வரைபடத்தை உருவாக்கவும், இதனால் காலப்போக்கில் உங்கள் தூக்கத்தின் தரத்தை கண்காணிக்கவும் உதவுகின்றது.
இந்த ஆப் நீங்கள் தூங்கும்பொழுது கேட்கும் அசாதாரண சத்தங்களையும் பதிவு செய்யக்கூடியது. எனவே நீங்கள் குறட்டை விட்டீர்கள் என யாரும் சொல்லும்பொழுது அது உண்மையா இல்லையா என உங்களுக்கே தெரிந்து கொள்ள முடியும். அதுமட்டுமல்லாமல், உங்களுக்கு தூக்கத்தில் பேசும் பழக்கம் இருந்தால் என்ன பேசியிருப்பீர்கள் என்றும் அறிந்து கொள்ளலாம்.
இதை பயன்படுத்துவதென்பது ஒரு பெரிய விடயம் இல்லை. ஒரு தடவை எமது தெரிவுகளை சரிசெய்துகொண்ட பின் தானாகவே செயற்பட ஆரம்பித்துவிடும். நீங்கள் எந்நாளும் இரவில் தூங்கும்பொழுது உங்கள் ஸ்மார்ட்ஃபோனின் ஸ்கிரீன் கீழே பார்க்குமாறு, பக்கத்தில் வைத்துவிட்டு படுத்தால் போதும்.
ஸ்லீப் சைக்கிள் ஐ தரவிறக்கம் செய்ய இங்கே Android App / iOS App அழுத்தவும். இன்றே முயற்சித்து பார்க்கலாமே!