நயாகரா நீர்வீழ்ச்சியில் வழியும் தண்ணீர் எங்கிருந்து வந்தது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?
நீர் நம்மைச் சூழ்ந்துள்ளது, வானத்திலிருந்து விழுகிறது, ஆறுகளாக ஓடுகிறது, குழாய்களிலிருந்து கொட்டுகிறது, இன்னும் நம்மில் பலர் அது எங்கிருந்து வருகிறது என்று கேட்பதை நிறுத்தவில்லை. பதில் சிறிது சிக்கலானது. இந்த பதில் கடலின் அலை, கனமான மேகத்தின் மழை போன்றவற்றிற்கு அப்பாற்பட்டு பிரபஞ்சத்தின் தோற்றம் வரை செல்கிறது.
பிரபஞ்சம் தோன்றும் பொழுது ஏற்பட்ட பெருவெடிப்புக்குப் பிறகு, புரோட்டான்கள், நியூட்ரான்கள் மற்றும் எலக்ட்ரான்கள் 10 பில்லியன் டிகிரி வெப்பத்தில் திரண்டன. சில நிமிடங்களில், இலகுவான கூறுகள் என அழைக்கப்படும் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் என்பவற்றின் அணு கட்டுமானத் தொகுதிகளிலிருந்து நியூக்ளியோசிந்தஸிஸ் (neucleosynthesis) எனப்படும் ஒரு செயல்பாட்டில் அவற்றின் வடிவத்தைப் பெற்றன. காலப்போக்கில், நட்சத்திரங்களின் ஒளியின் மூலம் ஆக்ஸிஜன் உள்ளிட்ட கனமான தனிமங்கள் இலகுவான கூறுகளுடன் கலந்தன.
ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் மூலக்கூறுகளின் உருவாக்கம் மற்றும் நீரின் உருவாக்கம் இரண்டும் வெவ்வேறு விஷயங்கள். ஏனென்றால் ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் மூலக்கூறுகள் கலக்கும்போது கூட, தண்ணீரை உருவாக்க அந்த அணுக்களுக்கு இன்னும் ஒரு ஆற்றல் தேவைப்படுகிறது. இந்த செயல்முறை மிகவும் சிக்கலானது. இதனாலேயே பூமியில் இயற்கையான தண்ணீரை பாதுகாப்பாக உருவாக்கும் வழிமுறை யாராலும் கண்டுபிடிக்கப்படவில்லை.
அப்படியானால் நமது கிரகம் எவ்வாறு பெருங்கடல்கள், ஏரிகள் மற்றும் ஆறுகளால் மூடப்பட்டிருக்கின்றது? எளிமையான பதில் எங்களுக்கு இன்னும் தெரியாது, ஆனால் எங்களிடம் பல யோசனைகள் உள்ளன. ஏறக்குறைய 4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, மில்லியன் கணக்கான சிறுகோள்கள் மற்றும் வால்மீன்கள் பூமியின் மேற்பரப்பில் மோதியதாக ஒரு ஆய்வு கூறுகிறது. சந்திரனின் பள்ளங்களை பற்றிய ஒரு விரைவான பார்வை நமக்கு இந்த விண்கற்களின் மோதலைப் பற்றிய ஒரு யோசனையைத் தருகிறது. இவை சாதாரண பாறைகள் அல்ல, மாறாக கடலினடியிலுருக்கும் கடற்பாசிகளுக்கு சமமானவை என்பதனால் இதன் தாக்கத்தால் வெளியிடப்பட்டதே நாம் இன்று பயன்படுத்தும் தண்ணீர் என்று அந்த ஆய்வு கூறுகிறது.
விண்கற்கள் மற்றும் வால்மீன்கள் தண்ணீரை கொண்டிருப்பதை வானியலாளர்கள் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், சில விஞ்ஞானிகள் இந்த கோட்பாடு இல்லை என்று நினைக்கிறார்கள். பூமியின் பெருங்கடல்களில் உள்ள அனைத்து நீரையும் கணக்கில் கொள்ள போதுமான மோதல்கள் நடந்திருக்க முடியுமா என்று அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். மேலும், கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஆராய்ச்சியாளர்கள், வால்மீனின் நீரில் பூமியின் பெருங்கடல்களைக் காட்டிலும் அதிக கனமான நீர் இருப்பதைக் கண்டறிந்தனர், அதாவது வால்மீன்கள் மற்றும் விண்கற்கள் பூமியைத் தாக்கிய முறை மிகவும் வித்தியாசமானது எனவே பூமிக்கு அதன் வழக்கமான நீர் வேறு வழியில் கிடைத்தது என்ற கருத்தையும் முன்வைக்கின்றனர்.
ஆனால் மிக சமீபத்தில், வானியலாளர்கள் முதலில் கூறப்பட்ட பதில் உண்மையாக இருக்கலாம் என்று கூறுகின்றனர். அகச்சிவப்பு கதிரின் மூலம் வானியல் ஆய்வகத்தின் அவதானிப்புகளைப் பயன்படுத்தி 2018 இல் பூமிக்கருகில் வந்த விர்டானென் என்ற வால்மீனை ஆராய்ந்த போது அந்த வால்நட்சத்திரத்தில் “கடலின் நீருக்கு ஒப்பான நீராவியை” அவர்கள் கண்டறிந்தனர்.
இன்னொரு ஆய்வு, பூமி தோன்றியபொழுது ஆக்ஸிஜன் மற்றும் சூரியனுக்குள் உற்பத்தி செய்யப்படும் பிற கனமான கூறுகள் சூரியனிலிருந்து வந்தது என்று கூறுகிறது. ஆக்சிஜன், பூமியிலிருந்து வெளியாகும் ஹைட்ரஜன் மற்றும் பிற வாயுக்களுடன் இணைந்து பெருங்கடல்களையும் வளிமண்டலத்தையும் உருவாக்குகிறது என்று இந்த ஆய்வில் கூறப்படுகின்றது.
ஜப்பானின் டோக்கியோ இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி விஞ்ஞானிகள் குழு மற்றொரு கோட்பாட்டை உருவாக்கியுள்ளது. இது ஹைட்ரஜனின் அடர்த்தியான அடுக்கு ஒரு முறை பூமியின் மேற்பரப்பை உள்ளடக்கியிருக்கலாம். இறுதியில் மேலோட்டத்தில் உள்ள ஆக்சிஜன் தொடர்புகொண்டு நமது கிரகத்தின் பெருங்கடல்களை உருவாக்கியிருக்கலாம் என கூறுகின்றது.
இறுதியாக, 2017 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட கணினி உருவகப்படுத்துதல்கள், நமது கிரகத்தில் காணப்படும் சில நீர்நிலைகளுக்கு நெருக்கமான தோற்றத்தைக் கொண்ட பதிலை வெளியிட்டன. பூமியின் உள்ளே நீர் உருவாகி இறுதியில் பூகம்பங்கள் வழியாக வெளியேறி இருக்கக்கூடும் என்பது இதன் கருத்து.
எனவே, பூமியில் எப்படி தண்ணீர் வந்தது என்பதை நாம் உறுதியாகக் கூற முடியாது. ஆனால், நாம் இந்த அளவு தண்ணீரை பூமியில் பெற்றது எமது அதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும்.